search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government building"

    • 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
    • மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அரசு மற்றும் அரசு சாராவளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகிறது.

    இதனால் 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

    சராசரியாக ஒரு எக்டேர் பரப்பில் 104 மரங்கள் வெட்டப்பட்டது. இந்த மரங்களை வெட்ட அனுமதி அளித்ததன் மூலம் வனத்துறையானது ரூ.2,058 கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாய் மாநிலத்தின் தற்காலிக இழப்பீடு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதி காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மாநில வனத்துறை 5 ஆண்டுகளுக்குள் 12 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வெட்ட அனுமதித்துள்ளது.

    இதன் மூலம் மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    • உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதன் காரணமாக கூட்டப்பனை மீனவர் கிராமத்தில், அரசால் கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த மீன் ஏலக்கூடம் மற்றும் வலைபின்னும் கூடத்தில் கடல்நீர் புகுந்தது. இதனால் அந்த கட்டிடம் சரிந்து விழுந்தது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கிராம அங்காடி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசு சிமெண்ட் குடோன் உள்ளது.
    • பழுதடைந்து எந்த வேளையும் இடிந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கிராம அங்காடி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசு சிமெண்ட் குடோன் உள்ளது.

    மிகவும் பழுதடைந்து எந்த வேளையும் இடிந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    எனவே அங்காடி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் வரும் கிராம பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை உடனே அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது
    • அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அகற்ற வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள செய்யாறு சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் , வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ஆகியவை செயல்பட்டு வருகின்றன . இந்த அலுவலகங்களுக்கு தினசரி 50 - க்கும் மேற் பட்டோர் வந்து செல்கின்றனர் .

    இதன் அருகிலேயே சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்து பயன் பாட்டில் இல்லாததுணை தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் உள்ளது . இந்த கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது .

    பாழடைந்த இந்த கட்டி டம் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது . கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரும் நபர்கள் தெரியாமல் இந்த பாழடைந்த கட்டிடத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை விடுவதும் , அமர்ந்திருப்பதும் வாடிக்கையாக உள்ளது .

    இந்தக் கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்த கட்டிடத்தின் முன்பு கடமைக்காக கயிறு கட்டி உள்ளனர் . இந்த கட்டிடம் இடிந்து விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவ தற்கு முன் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

    ×