என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த அரசு கட்டிடத்தை அகற்ற பொது மக்கள் கோரிக்கை
- கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கிராம அங்காடி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசு சிமெண்ட் குடோன் உள்ளது.
- பழுதடைந்து எந்த வேளையும் இடிந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கிராம அங்காடி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசு சிமெண்ட் குடோன் உள்ளது.
மிகவும் பழுதடைந்து எந்த வேளையும் இடிந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே அங்காடி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் வரும் கிராம பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை உடனே அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






