நாங்குநேரி அருகே தொழிலாளியை உயிரோடு எரித்து கொலை செய்ய முயற்சி

நாங்குநேரி அருகே தொழிலாளியை உயிரோடு எரித்து கொலை செய்ய முயற்சி

நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா மகன் வானுமாமலை என்ற கட்ட வானுமாமலை (வயது30). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இரவில் வானுமாமலை தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா மகன் வானுமாமலை என்ற கட்ட வானுமாமலை (வயது30). கூலி தொழிலாளி யான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவில் வானுமாமலை தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் உடலில் வெப்பம் தாங்காமல் விழித்த வானுமாமலை உடலில் தீ எரிவதை கண்டு சத்தம் போ ட்டார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சை க்காக நாங்குநேரி அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தொழிலாளி மீது தீ வைத்து அவரை உயிரோடு எரித்து கொலை செய்ய முயற்சி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com