என் மலர்
தஞ்சாவூர்
- பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.
- குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள வெண்டையம்பட்டியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.
குத்தகையை இந்து சமய அறநிலை யத்துறைக்கு செலுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதி க்கப்பட்டது.
நடப்பாண்டும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.
இச்சூழலை கருத்தில் கொண்டு தற்போது குத்தகை பாக்கியை செலுத்த வலியுறுத்தி அனுப்ப ப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸை திரும்பப் பெருவதோடு, குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் காலங்காலமாக இக்கோவிலின் நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும் வெண்டை யம்பட்டி தான்தோ ன்றீஸ்வரர் கோவில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முகில் ஆகியோர் பேசினர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இரு சக்கர வாகனங்களுக்கு உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் (ம) பராமரிப்பு அலகு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இப்பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை மாணவ- மாணவியர் கைகளில் ஏந்தி பேரணியாக சென்றனர்.
இப்பேரணி முக்கிய சாலைகள் வழியாக எலிசா நகர் வரை சென்று மீண்டும் மன்னர் சரபோஜி கல்லூ ரியில் நிறைவடைந்தது.
முன்னதாக கலெக்டர் கூறும்போது:-
மாணவர்கள் அனைவரும் ஹெல்மெட் பயன்படுத்து கிறார்களா? எனவும், இரு சக்கர வாகனங்களுக்கு உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் கட்டுமானம் (ம) பராமரிப்பு செந்தில்குமார், சாலை பாதுகாப்பு அலகு திருச்சி கோட்ட பொறியாளர் புவனேஸ்வரி, உதவி கோட்ட பொறியாளர்கள் கீதா, செந்தில்குமார், பிரமிளா, விஜயகுமார், பானுதாசன், செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் மோகனா, கணேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ.600 ஆக வழங்க வேண்டும்.
- ஒரத்தநாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
திருவோணம்:
100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய விவசாய தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்ற கூடிய விவசாய தொழிலாளர்கள் ஜாப்காடு வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், ஊதியத்தை ரூ.600 ஆக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.
பின்னர், ஒரத்தநாடு கடைத்தெரு வழியாக ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் வாசுகி உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர்.
இதனை யொட்டி ஒரத்தநாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
- பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63) விவசாயி.
சம்பவத்தன்று இவர் தான் வளர்த்து வரும் மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார்.
சிறிய தூரம் சென்றபோது மாடு திடீரென மிரண்டு ஓட தொடங்கியது.
இதையடுத்து மாட்டை பிடிப்பதற்காக அண்ணா துரை பின் தொடர்ந்து ஓடினார்.
அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
- குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிரேஸ்சத்திரம் சாலையில் பாதாள சாக்கடை பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த குழாயின் மேல் பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் அமைந்துள்ளதால் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக குடிநீர் குழாய்களை அகற்றி விட்டு பாதாள சாக்கடை பிரதான குழாய் உடைப்பு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே மாநகராட்சி வார்டு எண் 1 முதல் 51 வரை அனைத்து வார்டுகளுக்கும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.
எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொ ள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அணை திறக்கப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
- தஞ்சையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு வீசி வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது.
குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சி 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது .
ஆனால் அணை திறக்கப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
இது தவிர கர்நாடக அரசு உரிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்காமல் ஏமாற்றியது.
இதனால் 2.5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின. மேலும் போதிய நீர் இல்லாததால் கடந்த மாதம் மேட்டூர் அணை மூடப்பட்டது.
இதனால் அடுத்து சம்பா, தாளடி சாகுபடி டெல்டா மாவட்டங்களில் கேள்விக்குறியாக உள்ளது.
இருந்தாலும் பல இடங்களில் வடகிழக்கு பருவ மழையை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கி விட்டனர்.
இதற்கிடையே கடந்த வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இருந்தாலும் தஞ்சை உள்பட டெல்டா மாவட்டத்தில் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது.
மேலும் தஞ்சையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு வீசி வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் அருகே உள்ள 8 கரம்பை, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி நீர் மற்றும் பருவ மழையை நம்பி நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்த விவசாயிகள் தற்போது தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
போதிய தண்ணீர் இல்லாததால் சம்பா பயிர்கள் கருகி வருவதாக வேதனைப்பட்டுள்ளனர்.
சாகுபடி செய்த பல வயல்களில் தண்ணீர் இன்றி பாலம் பாலமாக வெடித்து காட்சியளிக்கிறது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது :-
ஆற்றுப் பாசனம் மற்றும் பருவமழையை நம்பி நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்தோம்.
மழையும் இதுவரை சரியாக பெய்யவில்லை.
ஆற்றிலும் போதிய தண்ணீர் வரவில்லை . தற்போது சம்பா சாகுபடி செய்த வயல்கள் அனைத்தும் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளது.
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
டீசல் இன்ஜின் மூலம் அருகில் இருக்கக்கூடிய தேங்கி தண்ணீரை பாய்ச்சி காப்பாற்ற முயற்சி செய்து வருகிறோம்.
இந்த நீர் போதுமானதாக இருக்காது.
இன்னும் தண்ணீர் தேவைப்படுகிறது.
இதனால் சம்பா பாதிக்கப்பட்ட வயல்களில் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
காவிரியில் உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றனர்.
- கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- நாளை தஞ்சையில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் வரும் 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
அ.தி.மு.க. தலைமை சார்பில் வெளியிடப்ப ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை (சனிக்கிழமை) பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுவதாக இருந்தார்.
இந்த நிலையில் தஞ்சை உட்பட டெல்டா மாவட்ட ங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.
மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே நாளை தஞ்சையில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் வரும் 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 100 நாள் வேலைக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி போராட்டம் நடந்தது.
- பேரணியாக வந்து வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பூதலூர்:
பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பூதலூர் வடக்கு ஒன்றிய பகுதியில் பல வாரங்களாக வழங்கப்படாமல் இருக்கும் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை வழங்க கோரி திருக்காட்டுபள்ளியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு கஞ்சி காய்ச்சும் நூதன போராட்டத்தை நடத்தினர்.
பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் கரையில் இருந்து நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை முழக்கியபடி பேரணி யாக வந்து வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் கட்சியின்மாவட்ட செயற் குழு உறுப்பினர் பக்கிரிசாமி மாவட்ட குழு உறுப்பினர்கள் காந்தி, கலைச்செல்வி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பூதலூர் தாசில்தார் மரியஜோசப், வருவாய் ஆய்வாளர் சிவசங்கர், கிராம நிர்வாக அலுவலர் பூமிநாதன் ஆகியோர் நுதன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பூதலூர் தாசில்தார் மரியஜோசப் அளித்த உறுதியை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
இதனால் வங்கி முன் பரபரப்பாக காணப்பட்டது.
- நடவு வயல்களில் ஆகாய தாமரை செடிகள் வேகமாக பரவி வருகின்றன.
- ஆகாயதாமரை செடிகளை அழிக்க பல்வேறு களைகொல்லி மருந்துகளை தெளித்தும் அழிக்க முடியவில்லை.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சம்பா நடவு பணிகளை துவங்கியுள்ள நிலையில் சாலியமங்களம் பகுதியில் சம்பா சாகுபடி வயல்கள் மற்றும் நடவு வயல்களில் ஆகாய தாமரை செடிகள் அதிகளவில் காணப்படுகிறது.
பாசன வாய்க்கால் மூலம் தண்ணீரில் மிதந்து வந்து வயல்களில் ஊடுறுவி தற்போது வயல்கள் முழுவ தும் வேகமாக பரவிவரும் இந்த பிரச்சனையால் சம்பா சாகுபடி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வயல்களில் ஓரீரு இடத்தில் காணப்பட்ட ஆகாய தாமரை செடிகள் தற்போது வேகமாக வயல் முழுவதும் பரவி வருவதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.
விவசாய வயல்களில் வேகமாக படர்ந்து வரும் இந்த ஆகாய தாமரை செடிகளை ஒழிக்க விவசாயிகள் பல்வேறு யுத்திகளை கையாண்டும், களை கொல்லி மருந்துகளை தெளித்தும், கட்டுபடுத்த முடியவில்லை அதனால் விவசாயிகள் சம்பா பயிர்களை காப்பாற்ற கடுமையாக போராடி வருகின்றனர்.
நடவு வயல்களில் வேகமாக பரவி வரும் ஆகாய தாமரை செடிகளை அழிக்கவும், சம்பா பயிர்களை காப்பாற்றவும், அரசு வேளாண் அலுவலர்களை கொண்ட குழுவை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வயல்களில் பரவிவரும் ஆகாயதாமரை செடிகளை கட்டுப்படுத்த விவசாயி களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுமென எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது, ஆகாயதாமரை செடிகள் பாசன வாய்க்கால் மூலம் வயல்களில் ஊடுருவி தற்போது வயல்களில் அதி வேகமாக பரவி வருகிறது ஆகாயதாமரை செடிகளை அழிக்க பல்வேறு களைகொல்லி மருந்துகளை தெளித்தும் ஆகாய தாமரை செடிகளை அழிக்க முடியல மாறாக நடவுபயிர்கள் வளர்ச்சி தான் பாதிக்கிறது இதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றனர்.
- உணவு, இனிப்பு பொருட்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டு க்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்உள்ள உணவகங்கள் மற்றும் இனிப்பகங்கள் உள்ளி ட்ட கடைகளுக்கு தஞ்சை மாவட்ட உணவுபாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.
இதில் தீபாவளிபண்டிகைக்கு தயாராகி வரும் இனிப்புகள் தரமானதாக உள்ளதா எனவும் அத்தோடு அதில் தயாரிப்பு மற்றும் காலாவதி யாகும் தேதிகள் கட்டாயம் குறிப்பிடப்பட்டு ள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்ட பத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இனிப்பாக உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு மற்றும் இனிப்பாக உரிமை யாளர்களிடத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகள் மற்றும் சில விதிமுறைகள் வழங்கினர்.
பின்னர் தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா செய்தி யாளர்களிடத்தில் கூறுகை யில், ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு தேதி மற்றும் அதன் காலாவதி தேதியை கட்டாயம்குறிப்பிட வேண்டும்.
இந்த நடை முறையை கட்டாயம் அனைத்து ஹோட்டல் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது மக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு மற்றும் இனிப்புகளை வழங்க முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கடேசன் செயலாளர் அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பயணிகள் சாலையில் காத்திருப்பதும், மழையில் நனையும் சூழ்நிலையும் உள்ளது.
- வெயிலுக்கும் ஒதுங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழணிமாணிக்கம் (தி.மு.க) தொகுதி மேம்பாட்டு நிதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு 7 ஆண்டுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுக்கு பேராவூரணி நகர் பகுதியில் பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை, புதுக்கோட்டை சாலையை விரிவு படுத்தினர்.பட்டுக்கோட்டை சாலை மற்றும் அறந்தாங்கி சாலை பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.மேலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பொதுமக்கள் பயணிகள் பயன்பாட்டில் இருந்து வந்த பயணியர் நிழற்குடை அப்புறப்ப டுத்தப்பட்டது.
இதனால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பேருந்துக்காக சாலையில் காத்திருக்கும் போது மழையில் நனையும் நிலை உள்ளது.
கொன்றைக்காடு, காலகம், திருப்பூரணிக்காடு, நாடங்காடு, களத்தூர், ஒட்டங்காடு பகுதி செல்லும் பயணிகள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அரசு மற்றும் தனியார் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், பள்ளி மாணவிகள் மழை மற்றும் வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.
மதிய நேரங்களில் உட்கார இடமில்லாமல் பயணிகள் வெயிலில் சாலை ஓரத்தில் அமர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
பயணிகள் இன்னலை போக்க போர்க்கால அடிப்படையில் பயணிகள் நிழற்குடை இருந்த அதே இடத்தில் மீண்டும் பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர் துரைராஜன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.
- நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று ராம்ராஜ் புதிய காட்டன் ஷோரூமை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தாலும் அதுவரைக்கும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி நடைபெறும்.
ஏனென்றால் வெளியே பல லட்சம் கொடுத்து மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதனால் மாணவர்களின் நிதி சுமையை குறைப்பதற்காக பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் பணி நடந்து வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இது தொடர்பாக பள்ளிகளில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு இல்லை என்று நீதிமன்றமே கூறியுள்ளது. அரசு தங்களது கருத்துகளை இதுபோன்று வெளிப்படுத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






