ஆட்டோ டிரைவர்- சமையல் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி

ஏழை, எளியவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும். இளைஞர்கள் உதவி செய்வதில் முன்னுரிமை வகிக்க வேண்டும்.
ஆட்டோ டிரைவர்களுக்கு பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் நலத்திட்ட உதவி வழங்கினார்.
ஆட்டோ டிரைவர்களுக்கு பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் நலத்திட்ட உதவி வழங்கினார்.
Published on

தஞ்சாவூர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்கள், சமையல் கலைஞர்களுக்கு இன்று பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இனிப்புகள், ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறும் போது:

இரவு பகல் பாராமல் உழைக்கும் ஆட்டோ டிரைவர்கள், மக்களின் பசியை போக்கி தரமான உணவை தயார் செய்யும் சமையல் கலைஞர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

ஏழை எளியவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும்.

குறிப்பாக இளை ஞர்கள் உதவி செய்வதில் முன்னுரிமை வகிக்க வேண்டும்.

இதன் பலன் அனைவருக்கும் கிடைக்கும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com