என் மலர்
தஞ்சாவூர்
- போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டது.
- மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், திலகா் திடல் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும், மகா்நோன்புசாவடி பழைய ராமேஸ்வரம் சாலையில் தலா ஒரு மாடு, கன்றையும், யாகப்பா நகரில் 2 மாடுகளையும், சிவகங்கை பூங்கா, மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும்,
மருத்துவக் கல்லூரி சாலையில் 4 மாடுகளையும், புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் தலா ஒரு மாடு, கன்றையும் என மொத்தம் 18 மாடுகளையும், 2 கன்றுகளையும் மாநகா் நல அலுவலா் சுபாஷ்காந்தி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் பிடித்து, காப்பகத்துக்கு கொண்டு சென்று, அவற்றின் உரிமையா ளா்களுக்கு அபராதம் விதித்தனா்.
மாநகரில் இதுவரை 71 மாடுகளையும், 44 கன்றுகளையும் பிடித்து அபராதம் விதித்துள்ள தாகவும், சாலைகளில் இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணி தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனவும் மாநகா் நல அலுவலா் தெரிவித்தாா்.
- புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல் அள்ளுவதற்காக லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
- திருவையாறு பகுதிகளில் சென்று மணல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனை சந்தித்து இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமாபதி மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஒரு கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவிந்தநாட்டு ஊராட்சி புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல் அள்ளுவதற்காக லாரிக ளுக்கு அனுமதி வழங்கப்ப ட்டு, ஆன்லைன் மூலம் மணல்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கோவிந்த நாட்டுசேரி ஊராட்சியில் அமைந்தி ருக்கும் புத்தூர் அரசு மணல் குவாரியில், மாட்டு வண்டி வைத்திரு ப்பவர்கள் மணல் அள்ளி பிழைப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் கூறும் போது, இங்கு இருக்கும் ஏழை எளிய நலிவுற்ற மாட்டு வண்டி வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், கும்பகோணம் மற்றும் திருவையாறு பகுதிகளில் சென்று மணல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொழிலாளர்களின் நலன் கருதி புத்தூரில் அமைந்துள்ள மணல் குவாரியில் மாற்றி வண்டி வைத்திருக்கும் தொழிலாளர்கள் மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் சில தினங்களே உள்ளது.
- கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.06001) தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக தூத்துக்குடிக்கு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்றடையும்.மறுமார்க்கமாக 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு (வண்டி எண்.06002) மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு செல்லும்.
மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- பண்ணை கருவிகள் ஜிப்சம், தார்பாலின் தேவைப்படுவோர் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
- சம்பா பயிர் காப்பீடு செய்ய வருகிய 15 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள பூவாணம் மற்றும் அழகியநாயகிபுரம் கிராம ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு பருவ பயிற்சி நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி தலைமை வகித்து பேசியதாவது, கிராம முன்னேற்றத்திற்காக அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து குழுவாக செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் அடையலாம்.
வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் விதை கிராமத் திட்டத்தின் கீழ் ஆடுதுறை 39 நெல் ரகம் விசைத்தெளிப்பான்கள் 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது எனவும், பண்ணை கருவிகள் ஜிப்சம், சிங்க் சல்பேட், தார்பாலின் தேவைப்படுவோர் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்திடவும் கேட்டுக்கொண்டார்.
நடப்பு நெல்-சம்பா பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் உடன் பயிர் காப்பீடு செய்திட அறிவுறுத்தினார்.
கலைஞர் திட்டத்தின் மூலம் தொழு உரத்தினை ஊட்டமேற்றி பயன்படுத்திட திரவ துத்தநாக உயிர் உரம் ஒரு எக்டருக்கு ஒரு லிட்டர் அளவில் 100 சதவீத மானியத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பூவாணம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஏ.தேவதாஸ், அழகியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
முடிவில் துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ஓதுவார் தேவார திருமுறை நிகழ்ச்சி நடந்தது.
- 20-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் மற்றும் பக்கவாத்திய கலைஞர்களுடன் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் இணைந்து ஓதுவார் தேவார திருமுறை நிகழ்ச்சி மேலவீதி கொங்கனேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது.
தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் கோபால கிருஷணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
முன்னதாக தென்னகப் பண் பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் வரவேற்றார்.
அரண்மனை தேவஸ்தானம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக சிவகங்கை பூங்காவிலிருந்து ஓதுவார்கள் சிவ வாத்தியங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு மேல வீதி கொங்கனேஸ்வரர் கோயில் வந்தடைந்தனர்.
பின்னர் கரந்தை தமிழ்ச்சங்க மாணவர்களின் சிவதாண்டவ நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் மற்றும் பக்கவாத்திய கலைஞர்களுடன் தேவார திருமுறை நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியை பொது மக்கள் திரளாக வருகை தந்து பார்த்து ரசித்தனர்.
தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
- சாலைகளில் குழாய் பதிக்கும் போது பள்ளங்களை மூட வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமானுல்லா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா கோபிநாத், உறுப்பினர்கள் சுமத்ரா மோகன், வெங்கட், செல்வ பாரதி கண்ணன், சுப்ரமணியன், வனிதா, மற்றும் செல்வம், உள்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர் வெங்கட் பேசும்போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஊராட்சி பகுதியில் சாலைகளை சேதப்படுத்தி குழாய்கள் பதிக்கப்படுவ தாகவும் சரிவரபள்ளங்களை மூடுவதில்லை எனவும், இதனால் கிராம சாலைகள் அதிகளவில் சேதமடைந்தது வருவதாகவும் கிராம மக்கள் பெரிய அளவில் பதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பதில் அளித்தார்.
இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன் நன்றி கூறினார்.
- தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்துக்கு நிரந்தர இயக்குநா் நியமிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
- தமிழ் பண்பாடு, வரலாற்றை அறிவதற்காக தமிழக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகம், மாவட்ட மைய நூலகம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு சட்டப்பேரவை நூலகக் குழுவின் தலைவா் சுதா்சனம் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நூலகங்கள் மீது முதல்-அமைச்சரும், விளையாட்டு, இளைஞா் நலன் துறை அமைச்சரும் அதிகக் கவனம் செலுத்து கின்றனா்.
ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நூலகம் உருவாக்கப்பட வேண்டும் என எங்களுடைய இளைஞரணி செயலா் கூறியதன்பேரில் அதற்கு முயற்சி மேற்கொள்ளப்ப டுகிறது.
அதன்படி பல இடங்களில் நூலகங்கள் தொடங்கப்ப ட்டுள்ளன. மக்களிடையே வாசிப்புத்தன்மை, விழிப்புணா்வை ஏற்படுத்தவும், வரலாற்றை அறிவதற்காகவும் நூலகங்கள் தொடங்கப்படுகின்றன.
மாணவா்கள், மக்களுக்குப் பயன்படும் வகையில் நூலகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கீழடி போன்ற 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு, வரலாற்றை அறிவதற்காக தமிழக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்து க்கும் முக்கியத்துவம் அளிக்க தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும்.
இந்த நூலத்துக்கு நிரந்தர இயக்குநா் நியமிப்பது குறித்தும் அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னா், மாவட்ட ஆட்சியரகத்தில் சுதா்சனம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்குழுவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கணபதி, சம்பத்குமாா், சரவணகுமாா், ஸ்டாலின்குமாா், குழு அலுவலா் துணைச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் இடம் பெற்றனா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், ராமலிங்கம் எம்.பி, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி , வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட நூலக அலுவலர் முத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- கூட்டுறவு நிறுவனங்களில் 7 நாட்களும் கூட்டுறவு கொடியேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா பூர்வாங்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவர் பழனீஸ்வரி தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்:-
இந்த 70-வது அனை த்திந்திய கூட்டுறவு வார விழா "ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு" எனும் முதன்மை மைய கருப்பொருளை மையமாக கொண்டு வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் 7 நாட்களும் கூட்டுறவு கொடியேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கும்ப கோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் மற்றும் விழாக்குழு துணை தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் தஞ்சாவூர் சரக துணைப்பதிவாளர் (பொறுப்பு) அப்துல்மஜீத், பட்டுக்கோட்டை சரக துணைப்பதிவாளர் சுகி.சுவாமிநாதன், தஞ்சாவூர் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் கருப்பையா, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் கண்ணன், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய உதவியாளர் முருகானந்தம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
- பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பட்டுக்கோட்டை:
கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நெடுஞ்சாலைத்துறை தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பாக பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார், இப்பேரணியில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், பட்டுக்கோ ட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் விஜயக்குமார், திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் புவனேஸ்வரி, பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ், பட்டுக்கோட்டை நகர் செந்தில்குமார், பட்டுக்கோ ட்டை மோட்டார் மன்ற வாகன தலைவர் சண்முகபிரியா ஆய்வாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லுாரி, ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மற்றும் பதாகைகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சியானது பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்துநர்களாக இக்கல்லுாரியின் செயலர். கணேசன், முதல்வர் விஜ யலெட்சுமி, நெடுஞ்சா லைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர்கள் பானுதாசன், செந்தில்தம்பி மற்றும் பேரணியில் பங்கேற்றோர் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு காணெளி காட்சி மூலம் திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் புவனேஸ்வரி அறிவுரை வழங்கினார்.
- இரவு முழுவதும் வியாபாரம் செய்ய போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
- வணிகர்களிடம் அரசு அதிகாரிகள் எனக்கூறி வசூல் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட, நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார், செயலாளர் ஆனந்த், பொருளாளர் சோலையம்மாள் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இரவு முழுவதும் வியாபாரம் செய்வதற்கு போலீசார் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறு வணிகர்களையும், சாலையோர வியாபாரிகளையும் கடையை அடைக்க சொல்லி வற்புறுத்தக் கூடாது.
வணிகர்களை அந்தந்த பகுதியில் உள்ள சமூக விரோதிகள் சட்ட விரோதமாக பணம் கேட்டு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
வணிகர்களிடம் அரசுத்துறை அதிகாரிகள் என கூறி கட்டாய வசூல் செய்தும், பொருட்கள் கேட்டு தொல்லை கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகின்ற 19ஆம் தேதி புதிதாக தலைமை கட்டிட திறப்பு விழாவிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தப்பட்டது.
இதில் பொறுப்பாளர்கள் வல்லம் கோவிந்தராஜ், திருக்காட்டுப்பள்ளி தியாக சுந்தரமூர்த்தி, பூதலூர் சண்முகராஜ், செங்கிப்பட்டி நந்தகுமார், ஒரத்தநாடு மணிசுரேஷ், பட்டுக்கோட்டை வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி முன்னிலையில், மாவட்ட மருத்துவ அணி அமைப்பா ளர் டாக்டர் சவுந்தரராஜன் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் (பேராவூரணி தெற்கு), ரவிச்சந்திரன் (சேதுபாவாசத்திரம் தெற்கு), அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஷாஜகான், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், மருத்துவ அணி தொகுதி அமைப்பாளர் ராஜூ, அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் ராணி, ராஜ்மோகன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். 50 க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடவு செய்யப்பட்டது.
- இலவச வீடு கட்டும் நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
- 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய தொழிலாளர் சங்க பேராவூரணி ஒன்றிய செயலாளர் மு.சித்திரவேலு தலைமை வகித்தார்.
சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் துரை. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
விதொச மாநில குழு உறுப்பினர் வ.ராஜமாணிக்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 3 மாத கால சம்பள பாக்கியை தீபாவளிக்கு முன் வழங்க வேண்டும். பேராவூரணி பகுதியில் குடிமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்க ளுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும்.
பெருமகளூர் ஆர்கே நகரில் வசித்து வரும் ஏழை, எளிய குடிசை வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி ரூபாய் 600 தின சம்பளம் வழங்க வேண்டும். அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும்.
இலவச வீடு கட்டும் நிதியை ரூபாய் 5 லட்சமாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேராவூரணி நகர் பகுதிக்கு விரிவுபடுத்த வேண்டும்.
விவசாய தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் திருமண உதவி தொகை, இயற்கை மரணம் உதவி தொகை மூன்றாண்டு காலமாக வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராஜ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பேராவூரணி, சேதுபாவா சத்திரம் விதொச நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.






