ஆற்றில் பிணமாக கரை ஒதுங்கியவரின் அடையாளம் தெரிந்தது

45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. மது போதையில் ஆற்றில் தவறி ஆற்றில் விழுந்தது தெரிய வந்தது.
ஆற்றில் பிணமாக கரை ஒதுங்கியவரின் அடையாளம் தெரிந்தது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் சுற்றுலா மாளிகை அருகே ஓடும் புது ஆற்றங்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் இறந்து கிடந்தவர் தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்த மணவாளன் (வயது 45 ) என்பதும் , கோவையில் வெல்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தீபாவளி பண்டிகைக்காக மணவாளன் தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

அப்போது படித்துறையில் இருந்து மது அருந்தி உள்ளார். போதை அதிகமாகவே தவறி ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்தது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com