என் மலர்
தஞ்சாவூர்
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள 54 ரவுடிகளை கைது செய்தனர்.
- குற்ற செயல்களின்படி 43 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்க ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டனர்.
அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முத்தமிழ் செல்வன் தலைமையில் ரவுடிகளை கைது செய்யும் பணி தொடங்கியது.
இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தற்போது வரை 54 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.
அவர்களில் குற்ற செயல்களின்படி 43 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 பேர் மீது நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த அதிரடி நடவ டிக்கை தீபாவளி வரை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
- முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கபடும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, அவரவர் சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு பயணம் செய்ய ஏதுவாக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொ ண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நாளை 50 கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.
13-ந் தேதி 500 கூடுதல் பஸ்களும், 14-ந் தேதி 250 கூடுதல் பஸ்களும், மேலும் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை 100 கூடுதல் பஸ்களும், 13 மற்றும் 14-ந் தேதிகளில் 200 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து திரும்பி செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்த ப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
- தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் விடுபட்ட மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமை த்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, தமிழழகன், ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட அளவிலான மாணவர்கள் குழுவிவை தேர்வு செய்யும் நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தது.
- முடிவில் தமிழ்துறை தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
தஞ்சாவூர்:
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேசிய இளைஞர் திருவிழா டெல்லியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாணவர்கள் குழு கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். அதன் முன்னேற்பாடாக திருச்சிராப்பள்ளி பாரதி தாசன் பல்கலைக்கழகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான மாணவர்கள் குழுவிவை தேர்வு செய்யும் நிகழ்ச்சி தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணி திட்ட குழும இயக்குநர் செந்தில்குமார், திருச்சிரா ப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குமி பிரபா அம்மையார் ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்வதில் நெறியா ளர்களாக செயல்பட்டனர்.இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
முன்னதாக தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும், தஞ்சாவூர் மாவட்ட தேசிய இளைஞர் திருவிழாவிற்கான சிறப்பு அலுவலருமான சந்தோஷ்குமார் அனை வரையும் வரவேற்றார்.
முடிவில் தமிழ்துறை தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் கண்ணன் செய்திருந்தார்.
- சனி, ஞாயிறு நாட்களில் அருகில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
- மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மெலட்டூர்:
அம்மாபேட்டை அருகே உள்ள உக்கடை கிராமத்தில் பாபநாசம் விவேகானந்தா கல்வி சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம், திருத்தம், நீக்குதல் ஆகியவை சனி, ஞாயிறு நாட்களில் அருகில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று திருத்தம் செய்து கொள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் விஜயலெட்சுமி. கயல்விழி , மேரி உட்பட ஏராளமான மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.
- காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பூதலூர்:
திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
காவிரி நதியை தூய்மை யாக வைத்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற யாத்திரையில் கொண்டு வரப்பட்ட காவேரி அன்னை சிலையை திருக்காட்டு பள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் வைத்து மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது.
பூஜைகளை திருக்காட்டு பள்ளி ராஜராஜேஸ்வரி சாமிகள், கோவில் பத்து தங்கமணி சாமிகள் செய்தனர்.நிகழ்ச்சியில் வளப்பகுடி சுந்தரேசன், திருக்காட்டுபள்ளி திருஞானசம்பந்தம், கமலசேகர், பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
- பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், நகர வர்த்தகர் கழகம், பேராவூரணி லயன்ஸ் சங்கம், பேராவூரணி ரோட்டரி சங்கம், பேராவூரணி காவல்துறை, பேரூராட்சி துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கடை வீதி வழியாக வந்து அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கு பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் தெட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். நகர வர்த்தக கழக தலைவர் ஆர் பி ராஜேந்திரன், ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். சரவணன், பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் சிவநாதன், பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டா காவேரி சங்கர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் சீனிவாசன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் பேசியதாவது,
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சிறுவர், சிறுமிகள் கண்டிப்பாக பெரியோர்கள் முன்னிலையில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
செருப்பு அணிந்து கொண்டு தான் வெடி வெடிக்க வேண்டும். முக்கியமாக வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவியாக தீப்புண் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் தீக்காயம் மீது பேனா மை, பேஸ்ட் தடவக்கூடாது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றார்.
- இ-சேவை மையங்களுக்கு விவசாயிகள் சென்று பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
- காப்பீட்டு தொகையில் 25 சதவீதம் இழப்பீட்டு தொகையாக பெறலாம்.
பூதலூர்:
பூதலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுப்பிக்கப்பட்ட பாரதப்பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டம் நடப்பு சம்பா, பருவத்திற்கு துவங்கி விட்டது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்திட ரூ.36,100- சாகுபடி செலவினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கருக்கு ரூ. 542 - மட்டும் செலுத்தி தங்கள் நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம். நடப்பாண்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீடு நிறுவனம் ப்யூச்சர் இன்சூரன்ஸ் நிறு வனம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படஉள்ளது. 2023 நவம்பர் 15ம்தேதி வரையில் சம்பா, நெற்பயிரு க்கான காப்பீட்டுத் தொகை செலுத்தலாம். பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் நடவு முடிந்தவுடன் வாங்கிய சிட்டா, அடங்கல்,விதைப்பு சான்று ஆகிய சான்றுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, உடன் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தங்கள்வங்கி அல்லது கூட்டுறவுகடன் சங்கம் மூலமாக பயிர் காப்பீடு செய்து கொள்ள லாம். மீதமுள்ள பரப்பிற்கு பொது இ சேவை மைய ங்களில் தங்களது வங்கி பாஸ்புத்தகம், ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், விதைப்பு சான்று ஆகியவ ற்றுடன் சென்று பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாண்டு நடப்பு பருவத்தில் போதுமான மழை பெய்யாத நிலையில் விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட சம்பா தாளடிபருவ த்திற்கு காப்பீடு செய்வதன் மூலம் விதைப்பு செய்ய இயலாமை அல்லது விதைப்பு பொய்த்து போதல் அல்லது நடவு பொய்த்து போதல் போன்ற இனங்களில் இழப்பீடு பெறலாம். அதாவது ஒரு கிராமத்தில் சராசரியாக பயிர் சாகுபடி செய்யும் பரப்பில் 75 சதவீதத்திற்கும் மேலாக பயிர் செய்ய முடியாத நிலையில் இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டு தொகையில் 25 சதவீதம் இழப்பீட்டு தொகையாக பெறலாம். அவ்வாறு ஏற்படும் பட்ச்ச த்தில் அக்கிராமத்தில் பயிர் காப்பீட்டு செய்த விவசாயிகள் மட்டுமே இழப்பீடு பெற முடியும். ஆகவே விவசாயிகள் தங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சம்பா அல்லது தாளடி விதைப்பு / நடவு செய்ய உள்ளார் என்று விதைப்பு சான்று அல்லது அடங்கள் (பசலி 1433) பெற்று நவம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீட்டு செய்ய வேண்டும்.
பயிர்கடன் பெற்ற விவசாயிகள் தங்களின் காப்பீட்டு பிரிமியத்தொகை வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்த ப்பட்டுவிட்டதா? என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.
- தஞ்சை மாவட்டத்தில் சுமார் 143 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது.
- கடைகள் முன்பு அனாவசியமாக கூடும் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திடம், ஏ. ஐ. டி.யூ .சி. டாஸ்மாக் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் துரை. மதிவாணன், முத்துக்குமரன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், தலைவர் பால. வடிவேலன், மாவட்ட பொருளாளர் இளஞ்செ ழியன், மேற்பார்வையாளர் கருணாகரன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் சுமார் 143 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது.
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை நடைபெற வாய்ப்புள்ளது. எனவே இதை பயன்படுத்தி சமூக விரோதிகளால் டாஸ்மாக் கடைகளில் அமைதி இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் அடிக்கடி வந்து கண்காணிக்க வேண்டும்.
பாதுகாப்பு வழங்க வேண்டும். கடைகள் முன்பு அனாவசியமாக கூடும் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவில்வென்னிக்கு இடையில் புதிதாக டோல்கேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ஊர்வலமாக சென்று டோல்கேட் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும்.
தஞ்சாவூர்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருவதோடு விதிமுறைக ளுக்கு புறம்பாக டோல்கேட் அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
ஆனால், நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து தேவையற்ற இடங்களில் 'டோல்கேட்'களை நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடும் நிலை தொடர்கிறது. இந்த டோல்கேட்களைக் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமா கும்போது டோல் கட்டண ங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், குத்தகை எடுத்த தனியார் நிறுவனங்க ளும் அதைக் கடைப்பிடிப்பது இல்லை.
இந்நிலையில், தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில்
தஞ்சாவூர் மாவட்ட எல்லையான பல்லவ ராயன்பேட்டைக்கும் திருவாரூர் மாவட்டம் தொ டங்கும் கோவில்வெ ன்னிக்கும் இடையில் புதிதாக டோல்கேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலையில் டோ ல்கேட் அமைக்கப்பட்டால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளார்கள்.
ஆகவே டோல்கேட் அமைக்கும் பணியை உடனடியாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 28-ந் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அம்மாபே ட்டையில் இருந்து ஊர்வ லமாக சென்று டோல்கேட் முன்பு பெருந்திரள் மறியல் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தஞ்சை மாவட்ட மைய நூலக மேம்பாட்டு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
- நிதி மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் .கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் புதிய ஜெராக்ஸ் எந்திரம் வாங்குவதற்கும், ஒளிதிரை அமைப்பதற்கும், கழிப்பறை வசதி அமைப்பது ஆகிய மேம்பாட்டு பணிக்கு ரூ.30 லட்சத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., ஒதுக்கினார்.
இந்த நிலையில் இந்த மேம்பாட்டு நிதியை அவர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தமிழ்நாடு சட்டப்பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தஞ்சை-சென்னை இடையே அதிவிரைவு ரெயிலை இயக்க வேண்டும்.
- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.
தஞ்சாவூர்
காவிரி டெல்டா ரெயில்வே பயணிகள் சங்க த்தின் தலைவர் அய்யனா புரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், துணைச்செ யலாளர் கண்ணன், துணை தலைவர் பேராசிரியர் திருமேனி, சோளகம்பட்டி ஊராட்சி தலைவர் மேனகா முத்துசாமி ஆகியோர் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருந்த தாவது:-
திருச்சி -தஞ்சாவூர் இடையில் உள்ள சோழகம்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்வே கேட் அமைக்க வேண்டும்.
தஞ்சை - சென்னை இடையே ரெயில் பயண தூரத்தை குறைக்கும் வகையில் தஞ்சையை அடுத்த திட்டை கிராமத்தில் இருந்து அரியலூருக்கு சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும்.
திருச்சி-தஞ்சை-வேளாங்கண்ணி-காரைக்கால் மார்க்கத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக மின்சார ரெயி ல்கள் இயக்க வேண்டும்.
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயிலை தஞ்சை யில் மாலை 5.50 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை முன்புபோலவே திருச்சியில் காலை 7.35 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.
திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை வேளாங்கண்ணி வரை இயக்க வேண்டும்.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் புதிதாக அதி விரைவு ரெயில் இயக்க வேண்டும்.
திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






