முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் விழா

பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட (தெற்கு) காங்கிரஸ் சார்பில் அணிவித்த மரியாதை செய்தனர்.
தஞ்சை மாவட்ட (தெற்கு) காங்கிரஸ் சார்பில் அணிவித்த மரியாதை செய்தனர்.
Published on

தஞ்சாவூர்:

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள அவரது சிலைக்கு தஞ்சை மாவட்ட (தெற்கு) காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமநாத துளசியய்யா வாண்டையார் மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்களை வழங்கினார்.

முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயண சாமி, மாவட்ட ஊடகப்பிரி வுத்தலைவர் பிரபு மண்கொண்டார், மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல், சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா.வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், கலைஇலக்கிய பிரிவுத்தலைவர் கலைச்செல்வன், ஐ.என்டி.யூ.சி. மணிவாசகம், 7-வது வார்டு செயலாளர் பாபுஜீ, வெங்கட், ராஜூ, வீணை கார்த்திக், சரவணன், மாரியம்மன் கோவில் ராமமூர்த்தி, பின்னையூர் ரவிச்சந்திரன், ரஞ்சித், ரவி, முகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com