தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி

தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.
தீ விபத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்.
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கொரநாட்டுக் கருப்பூர் ஊராட்சி, கீழத் தெருவில் வசித்து வரும் கவிதா சேகர் மற்றும் ஞானமணி, அருள்தாஸ் ஆகியோரது குடிசை வீடுகள் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டு, மிகவும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும் அரசு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்தார்.

நிகழ்வில், கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி, துணைத் தலைவர் சரவணன், மாவட்ட திமுக பிரதிநிதி உதயம் கோவிந்த், ஒன்றிய அவைத்தலைவர் அபிராமிசுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள் பாஸ்கர், உலகநாதன், கருணாகரன், பழனிசாமி, சுரேஷ், பாலையா, ரமேஷ் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com