என் மலர்
சிவகங்கை
- தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
- சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் பேசினர்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினர்.
பின்னர் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:-
மாவட்டத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உதவும் சங்கங்கள் அமைத்து அதன்மூலம் பொது மக்களுக்கு உதவலாம் என்ற அடிப்படையிலும் மற்றும் ஒன்றிணைந்து அந்த உதவும் சங்கங்களின் பங்களிப்பு தொகையை பதிவு செய்வதன் மூலம் அரசின் சார்பில் வழங்கப்படும் அந்த தொகைக் கான 2 மடங்கு தொகையும் வழங்குவதற்கான வழிவகை யையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி உள்ளார்.
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் போன்ற திட்டங்களை அறிவித்து பெண்களின் உரிமையை நிலை நாட்டுகின்ற வகையில் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பராமரிப்பதற்காக முதற்கட்டமாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்மூலம் 77 பள்ளிவாசல்களில் பராமரிப்புப் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற கூட்டத்தொடரின் போது அதனை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்று சிறுபான்மை யினர் மக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத் தப்பட்டு, அவர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-
கருணாநிதி வழியில் மக்களுக்கான ஆட்சியை தமிழகத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து, குறிப்பாக சிறுபான்மை யினர் மக்களின் நலன் காக்கின்ற வகையில் அதற்கான திட்டங்களை அறிவித்து அவர்களின் நலனை காத்து வருகிறார்.
குறிப்பாக தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் சிறப்பான நிர்வாகம் முதல்-அமைச்சர் தலைமையில் அரசில் நடைபெற்று கொண்டி ருக்கிறது. தமிழக மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையிலும், அமை தியை நிலைநாட்டுகின்ற வகை யிலும் ஒரு சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 940 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலை வர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சிவகங்கையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார்.
சிவகங்கை
சிவகங்கையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முன்னாள் முதல்-அ மைச்சர் எடப்பாடி பழனி சாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்தார். அப்போது அ.ம.மு.க. பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலர்மீது மதுரை அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன் குணசேகரன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், கருணாகரன், ஸ்டீபன் அருள்சாமி, சிவாஜி, கோபி, செல்வமணி, ஜெகதீஸ்வரன், பழனிசாமி, ஸ்ரீதர், சோனைரவி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பில்லுர் ராமசாமி மாரிமுத்து, கோமதிதேவராஜ் மற்றும் நாலுகோட்டை ஊராட்சி மன்றதலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ஏப்ரல் 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.
- 8-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 29-ந் தேதி காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக அன்று காலை 10.25 மணிக்கு நவசக்தி ஹோமத்துடன் விழா தொடங்கி மாலை லட்சார்ச்சனை விழாவும், இரவு 10 மணிக்கு ஸ்ரீவிக்னேஷ்வரர் பூஜை, துவஜாரோகனம் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூதவாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 5-ந் தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். மறுநாள் 6-ந் தேதி இரவு 7.15 மணிக்கு மின்சார தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.
- தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடந்த போட்டி கண்ட தேவி ஊரணியை சுற்றி சுற்றுப்பந்தயமாக நடந்தது.
இதில் சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 38 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு ஊரணியை 7 சுற்றுகளும், சின்ன மாட்டு வண்டிக்கு 5 சுற்றுகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 ஜோடி வண்டிகள் கலந்து கொண்டதில் முதலாவதாக மதுரை மாவட்டம் வெள்ளலூர் நாடு பர்மா காளி, 2-வதாக புதுக்கோட்டை மாவட்டம் பரளி கணேஷ், 3-வதாக சிவகங்கை மாவட்டம் தானாவயல் வெங்கடாசலம், 4-வதாக சிவகங்கை மாவட்டம் சாத்திகோட்டை கருப்பையா, 5-வதாக தினையாகுடி சிவா மாடுகள் வெற்றி பெற்றன.
சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 22 ஜோடிகளை 2 சுற்றுக்களாக பிரிக்கப்பட்டது. முதல் சுற்றில் முதலாவதாக தேவகோட்டை குறிஞ்சி மளிகை ஸ்டோர், 2-வதாக தேவகோட்டை மாணிக்கம் செட்டியார், 3-வதாக மாத்தூர் குமார், 2-வது சுற்றில் முதலாவதாக துறை யனூர், 2-வதாக மேலூர் சூரக்குண்டு, 3-வதாக பீர்க்கலை காடு மாடுகள் வெற்றி பெற்றன.
வெற்றிபெற்ற மாடுகளுக்கு வேட்டி-துண்டு, மாலைகள் அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
- தேவகோட்டையில் ரத்ததான முகாம் நடந்தது.
- 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி யில் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி (காரைக்குடி), நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பால முருகன் ஆகியோர் அனை வரையும் வரவேற்றனர்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திருமால் செல்வம் வாழ்த்தி பேசினர். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் சாம் சேசுரான், மருத்துவர் அழகு தாஸ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ ஆலோசகர் சூசை ராஜ் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.
இதில் ரத்த தானம் செய்தவர்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு ரத்த குழுமத்தால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- விளையாட்டு தின விழாவில் பல்வேறு போட்டிகள் நடந்தன.
- 3 ஆண்டுகள் போட்டிகள் நடைபெறாமல் இந்த ஆண்டு நடந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு தினவிழா போட்டிகள் நடந்தன. தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பாட்டிலில் நீர் நிரப்புதல், தவளை ஓட்டம், நொண்டி அடித்து ஓட்டம், மியூசிக்கல் சேர், ஓட்டப் பந்தயம், ஊசி நூல் கோர்த்து ஓட்டம், சாக்கு ஓட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், லெமன் ஸ்பூன் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை மேடையில் நிறுத்தி கை தட்டி பாராட்டினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் போட்டிகள் நடைபெறாமல் இந்த ஆண்டு நடந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கொலை தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- அக்கம்பக்கத்து வீட்டினர் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள வீரவலசை கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(வயது 35). விவசாயியான இவரது வீட்டின் அருகே மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏலம்மாள் (65) என்ற மனைவியும், கோவிந்தசாமி (46) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று ஏலம்மாள் தனது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தின் ஓலையை ஆட்களை வைத்து வெட்டினார். அப்போது அந்த ஓலை முனியசாமி வீட்டுக்கு செல்லும் மின்வயர் மீது விழுந்தது. இதன் காரணமாக முனியசாமி வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த முனியசாமி, ஏலம்மாளிடம் அதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்தனர்.
ஆனாலும் பிரச்சினை நீடித்ததால் இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து இனிமேல் தகராறு செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் கோபத்தில் இருந்தனர்.
போலீஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த ஏலம்மாள், அவரது மகன் கோவிந்தசாமி ஆகியோர் மீண்டும் முனியசாமியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே தாய், மகன் ஆகியோர் கத்தியால் முனியசாமியை சரமாரியாக குத்தினர்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி முனியசாமி பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முனியசாமியை கத்தியால் குத்திக்கொன்ற ஏலம்மாள், கோவிந்தசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அக்கம்பக்கத்து வீட்டினர் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உடற்கல்வி முக்கியமானதாக கருதப்பட வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறினார்.
- உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் நன்றி கூறினார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரியில் 53-வது ஆண்டு விளையாட்டு விழா 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் லட்சுமணன் செட்டியார், துணைத்தலைவர் சேவுகன் செட்டியார், செயலாளர் சாந்தி ஆச்சி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக கார்த்திக் சிதம்பரம் எம்.பி., கலந்து கொண்டார்.
கல்லூரியில் முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
விழா தொடக்கத்தில் 11 துறைகள் சார்பாக அணி வகுப்பு நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் 18பேர் ஒலிம்பிக் தீபம் ஏந்தி வந்து மைதானத்தில் ஜோதியை ஏற்றி வைத்தனர்.
இங்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி. சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
நமது சமூகம் பரீட்சை நடத்தும் சமூகமாக இருக்கிறது. 1 கிலோ மீட்டர் தூரத்தை 6 அல்லது 8 நிமிடத்தில் கடக்கக்கூடிய மாணவ- மாணவிகளை மட்டும்தான் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி என்பது மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும்.
மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க நல்ல உடற்கல்வி ஆசிரியர் தேவை. தமிழ்நாடு அரசு ஸ்போர்ட்ஸ் சென்டர் கட்டப்போவதாக தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். உடற்கல்வி ஆசிரியருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அடிக்கடி விளையாட்டு விழா நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். முடிவில் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் நன்றி கூறினார்.
- தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
- பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 6 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படியும் தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா வழிகாட்டுதலின் படியும் சிவகங்கை மாவட்டத்தில் 3 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நீதிமன்றங்களில் போக்சோ நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதிகள் சுந்தரராஜ், கீதா, வக்கீல்கள் ராமலிங்கம், சவுந்திரபாண்டியன், குருமூர்த்தி. சேது ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 102 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 6 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை வழக்கா டிகளுக்கு கிடைத்தது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.
- பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்
- மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி உடையநேந்தல் கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் கண்மாய் நிரம்பியது.
விவசாயத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். இன்று நடந்த மீன்பிடி திருவிழாவில் செண்பகம் பேட்டை, இரணியூர், கீழசெ வல்பட்டி, குன்றக்குடி கும்மங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.சிறுவர்கள், பெரிய வர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
- 58 அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியது.
- ராஜ சேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் திருப்பாச்சேத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சரால் 2022-23-ம் நிதியாண்டில் ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேவையான புதிய வகுப்பறை கட்டிட பணிகளை மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் 58 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 120 வகுப்ப றைகள் எண்ணிக்கையில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.17.25 கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் வருகிற கல்வி யாண்டு தொடங்குவதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தர விட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயங்கண்ணி, ராஜ சேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆலோசனை நடந்தது.
- பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடந்தது.
இதில் தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், பிரதமரின் பசல் பீமா யோஜனா, சமக்ர சிக்சா, தேசிய சமூக உதவித் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம், தீன்தயாள் உபாத்தியாய்-அந்தியோதயா யோஜனா, சத்துணவுத் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம்-கிராமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், தேசிய ரூர்பன் திட்டம், பிரதமரின் ஆதர்ஸ் கிராம் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய, மாநில அரசின் துறைகள் ரீதியாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை களையும் முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரை செய்து, நிதி மற்றும் சலுகைகளை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் வெண்ணிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சேகர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






