என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இழப்பீடு-காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் -முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி
    X

    முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி.

    இழப்பீடு-காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் -முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி

    • வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு-காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.
    • அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளார்.

    தேவகோட்டை

    தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தேவகோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு இழப்பீடு, காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் தாய், மகளை கொலை செய்து 60 பவுன் நகை கொள்ளை யடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த தங்கநகை, வெள்ளி பொருட்களை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தபட்டவர்கள் போலீசார் கைப்பற்றிய பொருட்கள் தங்கள் வீட்டில் திருடப்பட்டது இல்லை என கூறியுள்ளனர்.

    இதனால் வழக்கின் உண்மை தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. வழக்கு குறித்து போலீசாரும் சரியான பதிலளிக்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    கண்ணங்கோட்டை இரட்டை கொலை வழக்கை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தேவைப்பட்டால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைப்போம். காவல்துறை உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×