என் மலர்
சிவகங்கை
- அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே என்.வைரவன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பூமலர்ச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. இந்த கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
இதே போல் கண்டரமாணிக்கம் அருகே என்.கீழையூரில் ராக்காச்சி அம்மன், ஸ்ரீ வல்லநாட்டு கருப்பர் கோவில் மகா கும்பாபிஷேக விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெரிச்சி சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுகந்தனேஸ்வரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார், சமீப வள்ளியம்மாள் ஸ்ரீ காசி வைரவர் கோலில் திருப்பணி பாலாலயம் மற்றும் பால்குட திருவிழா நடைபெற்றது.
- இலங்கை தமிழர் வீடுகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் ஊரணியில் உள்ள இலங்கை தமிழர்கள் வசிக்கும் குடியிருப்பினை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் ஊரணியில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியிருப்புகள் ஏற்படுத்தித்தரும் 1990-ம் ஆண்டு அவசரத்தேவைகளை கருத்தில் கொண்டு தலா 100 சதுரஅடி பரப்பளவில 240 வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 183 குடும்பங்களைச் சேர்ந்த 588 பேர் வசித்து வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் முகாம் வாழ் தமிழர்களின் அடிப்படை மேம்பாட்டிற்காக குடும்பத்தலைவருக்கு ரூ.1,500-ம், 18 வயது நிரம்பிய உறுப்பினர்களுக்கு ரூ.1,000மும் மற்றும் குடிமைப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
முகாம் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது பொது சுகாதார வளாகம், தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பழைய வீடுகள் பயன்படுத்த ஏதுவாக இல்லாத வீடுகள் கண்டறியப்பட்டு புதிய வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கான இடம் தேர்வு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணி துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான தனி வட்டாட்சியர்உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சனிதேவி, சங்கரபரமேஸ்வரி, உதவிப்பொறியாளர்கள் தமிழரசி, தேவிசங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.
- ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகள்-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- நள்ளிரவு நேரத்தில் பீரோ வைக்கப்பட்டிருந்த வீட்டின் உள் அறையில் இருந்து சத்தம் கேட்டிருக்கிறது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர். சம்பவத்தன்று இரவு வீட்டின் ஒரு அறையில் அவரும், அவரது மகனும் படுத்து தூங்கினர்.
இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் பீரோ வைக்கப்பட்டிருந்த வீட்டின் உள் அறையில் இருந்து சத்தம் கேட்டிருக்கிறது. தனது மனைவி தான் அந்த அறையில் உறங்குவதாக ஆனந்தகுமார் நினைத்துள்ளார். காலையில் அந்த அறை கதவு திறக்கப்படாததால் எதிர் வீட்டில் வசிக்கும் தனது மகளை அழைத்து, அம்மா உள்ளறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்என்று கூறினார்.
அப்போது அவரது மகள், அம்மா எங்கள் வீட்டில் தான் இருக்கிறார், அங்கு எப்படி இருப்பார் என்று கேட்டுள்ளார். அந்த அறைக்கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் ஆனந்தகுமாரும், அவரது மகனும் பின்பக்கமாக சென்று பார்த்தபோது, ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்தது.
யாரோ மர்மநபர்கள் ஆனந்தகுமாரின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் ஜன்னலை உடைத்து புகுந்து உள்பக்கமாக கதவை தாழிட்டுக்கொண்டு பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம், வெள்ளி பொருட்கள், வைர நகையை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்.
மொத்தம் 40 பவுன் தங்க நகைகள், வைர மோதிரம் , ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஆனந்தகுமார் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டினுள் ஆட்கள் இருக்குபோதே, ஆனந்தகுமாரின் வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கும் சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிவகங்கை அருகே உள்ள அல்லூர் கிராமத்தில் கருப்பையா சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி, புறா பந்தயம் நடந்தது.
- விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள அல்லூர் கிராமத்தில் கருப்பையா சாமி கோவில் உள்ளது. இங்கு புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி, புறா பந்தயம் நடந்தது.
இப்பந்தயத்தை தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அல்லூர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரியமாடு மற்றும் சிறிய மாடுகளுக்கு பந்தயத்தூரம் முறையே 7, 9 கி.மீ. என்று நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதனைதொடர்ந்து குதிரைவண்டி பந்தயமும் நடந்தது. குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதேபோன்று பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக ரூ 8 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறிய மாடுகளுக்கான பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசு தொகையை விழாகமிட்டியார் வழங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் போடக்கூடாது என பேரூராட்சி நிர்வாகம் வலியுறுத்துகின்றனர்.
- வருகிற 8-ந் தேதி முதல் கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட திண்டுக்கல் ரோடு, காரைக்குடி ரோடு, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
போக்குவரத்து காவல் அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து வருகிற 8-ந் தேதி முதல் கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் கடைகள் போட்டு வியாபாரம் செய்பவர்கள் நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் கடைகளை அமைத்து வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு வியாபாரம் செய்ய வரும் நபர்களுக்கு வேளாண் வணிகத்துறை சார்பில் தராசு, மின்விளக்கு, பாத்ரூம் வசதி, தொழில் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை செய்து தர காத்திருக்கிறது என்றும், ஆகவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் விளை பொருட்களை விற்கக் கூடாது.
அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள உழவர் சந்தையை பயன்படுத்தி வளம் பெற வேண்டும் என பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், செயல் அதிகாரி ஜான் முகமது ஆகியோர் தெரிவித்தனர்.
- அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
- புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் மானாமதுரை விளாக்குளத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
இதையொட்டி மானாமதுரை வைகைஆற்று கரையில் குதிரை பொம்மைகள், சுவாமி சிலைகள் மற்றும் பல்வேறு தெய்வங்கள் உள்ளிட்ட பொம்மைகளும் செய்து வைக்கப்பட்டிருந்தன. விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புரவி எடுப்பதற்காக கிராமத்தில் இருந்து ஊர்வலமாக மானாமதுரைக்கு வந்தனர். தயார் நிலையில் இருந்த புரவிகளுக்கும், பொம்மைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து மழை ேவண்டி வழிபாடு செய்தனர்.
அதைத் தொடர்ந்து புரவி எடுப்பு நிகழ்வு தொடங்கியது. ஆண்கள் புரவிகளை தோளில் சுமந்தும், பெண்கள் பொம்மைகளை தலையில் சுமந்தும் விளாக்குளம் கிராமத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தொடங்கிய புரவி எடுப்பு ஊர்வலம் மானாமதுரை நகரின் வீதிகளில் வலம் வந்து அதன் பின்னர் விளாக்குளம் கிராமத்திற்கு சென்றடைந்தது.
அங்குள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலில் புரவிகள் இறக்கி வைக்கப்பட்டு புரவிகளுக்கும், அய்யனார் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் மானாமதுரை விளாக்குளத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பா.ஜ.க. உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- நகர துணை தலைவர் ஜோதிசண்முகம் நன்றி கூறினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து காரைக்குடி 5 விளக்கு அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார்.முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில், வருகிற ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்மு 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார்.
தி.மு.க. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் ரூ.1000, பழைய ஓய்வூதிய திட்டம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட எதையும் நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஆட்சியை ராஜினாமா செய்துவிடுங்கள் என்றார்.
மாநில இளைஞரணி துணை தலைவர் வேலங்குடி பாண்டித்துரை, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் துரைப்பாண்டி, மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர் உள்ளிட்ட பலரும் பேசினர்.
தேசிய செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், நகர தலைவர் பாண்டியன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவி கோமதி நாச்சியார், மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், நகர செயலாளர் சுரேஷ்நாத், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நிர்வாகி பூப்பாண்டி, மாவட்ட துணை தலைவர் இலுப்பகுடி நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.நகர துணை தலைவர் ஜோதிசண்முகம் நன்றி கூறினார்.
- சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் உதவி மையம் திறப்பு விழா நடந்தது.
- மக்கள் உதவி மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுக்களின் வசதிக்காக கலெக்டர் மதுசூதன்ரெட்டி மக்கள் உதவி மையத்தினை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமிருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமாக வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டும், நேரு யுவகேந்திரா அமைப்பின் மூலம் மக்கள் உதவி மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் உதவி மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளி இடங்களை விட குறைந்த செலவில் நகல் எடுத்துத்தருவது, லேமினேசன் மற்றும் ஸ்பைரல் பைண்டிங் செய்து தருதல், கணினி சம்பந்தமான சேவைகள் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் பற்றிய தகவல்களை தெரிவித்து அதன்மூலம் சரியான அலுவலகத்திற்கு செல்ல வழிவகை செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் அலுவலர்களை சந்திக்க அழைத்துச் செல்லுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மக்கள் உதவி மையமானது அரசு வேலைநாட்களில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட உள்ளது. பொதுமக்கள் மக்கள் உதவி மையத்தினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினாார்.ந்த நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி, நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் மற்றும் அமைப்பின் தன்னார்வ லர்கள் உடனிருந்தனர்.
- கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த கடைகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை ெரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மீன் கடைகளால் துர்நாற்றம் வீசுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை யடுத்து மீன் கடை களை ஆய்வு செய்து அதில் வைக்கப்பட்டிருந்த அழு கிப்போன மீன்களையும், நண்டுகளையும் சிவகங்கை நகரசபை தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன், சுகாதார அலுவலர் முத்துகணேஷ், கவுன்சிலர்கள் அயூப்கான், சீமான் கார்த்திகேயன் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த கடைகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். தரமற்ற மீன்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- சிறந்த விவசாயிக்கான சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
- இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பொறியாளர் வி.என்.ஆர். நாகராஜன். இவர் தான் பணியாற்றும் கட்டிட பொறியாளர் பணியோடு விவசாயத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவராக திகழ்ந்து வந்துள்ளார்.
இவரின் முயற்சியை பாராட்டும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிறுகள் பயிரிடுவதில் சிறந்து விளங்கிய விவசாயி என்ற அடிப்படையிலும், தரிசு நிலங்களை விவசாய பூமியாக மாற்றியமைத்தற்காகவும் மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி நாகராஜனுக்கு நற்சான்றிதழையும், பணமுடிப்பையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதனை அறிந்த வாராப்பூர் ஊராட்சி கிராம மக்கள், பொன்னமராவதி பகுதியை சேர்ந்த வணிகர்கள், லயன்ஸ் கிளப் சங்கத்தினர் நாகராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- சாகிர்உசேன் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
- கணித பேராசிரியை கல்பனா பிரியா தொகுத்து வழங்கினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆய்வக திறப்பு, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது. முதல்வர் முஹம்மது முஸ்தபா வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முஹம்மது உசைன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் பேசினர். உடற்கல்வி துறை ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் கோகுல் சமர்ப்பித்தார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
பொருள் அறிவியல் உதவிப்பேராசிரியர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். கணித பேராசிரியை கல்பனா பிரியா தொகுத்து வழங்கினார்.
- காரைக்குடி கல்லூரியில் பட்டமளிப்பு-விருது வழங்கும் விழா நடந்தது.
- கல்லூரி இயக்குனர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2016-2022ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கல்லூரி நிறுவனர்- தலைவர் சேதுகுமணன் தொடங்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முன்னாள் காவல்துறை இயக்குனர் ரவி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். 41 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் ரவி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது குறித்து பேசினர்.
விழாவில் பெங்களூரு அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் செங்கப்பா, புளோரிடா பல்கலைக்கழக இளைஞர் நலன் மற்றும் சமுதாய அறிவியல் துறை பேராசிரியர் முத்துசாமி குமரன் சிறப்புரையாற்றினர்.
கல்லூரி இயக்குனர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பேராசிரியை விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.






