என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manchus"

    • பெரிச்சி கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
    • மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு பணியில் திருக்கோஷ்டியூர் போலீசார் ஈடுபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிச்சி கோவில் ஊராட்சியில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு சொந்தமானசுகந்தனே ஸ்வரர் என்ற ஆண்ட பிள்ளை நாயனார், சமீப வள்ளியம்மாள், ஸ்ரீ காசி வைரவர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பாலாலயம் மற்றும் பால்குட திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டு வரப்பட்டு கண்மாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கு அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது.

    மஞ்சுவிரட்டை காண கள்ளிப்பட்டு, வெளியாறி,தெற்கு நைனார்பட்டி,ஊடனேந்தல் பட்டி, கொங்கரன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்தும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இந்த மஞ்சுவிரட்டுக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் இளம் பருதி என்ற வைரமணி, தான கருணம், வைரவன் பிள்ளை, கோட்டைச்சாமி, மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்துஇருந்தனர்.

    மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு பணியில் திருக்கோஷ்டியூர் போலீசார் ஈடுபட்டனர்.

    ×