என் மலர்
சேலம்
- அரிசிபாளையத்தில் நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் சையத் கபூர் தெருவை சேர்ந்தவர் பரணி என்கிற பழனி (வயது 45). இவர் தம்மண்ணன் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர்.
இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைந்து கிடந்தது.
மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து பழனி உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதே போல் அரிசிபாளையம் நாராயணசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளி சக்திவேல் (45) என்பார் வீட்டிலும் நேற்று மதியம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
- திருமலைகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற குமாபிஷேக விழாவின் போது, அந்த பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது, அவரை மற்றொரு சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தினர்.
- ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கோவில் பூட்டப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற குமாபிஷேக விழாவின் போது, அந்த பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது, அவரை மற்றொரு சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும் அந்த இளைஞரை, கோவிலினுள் நுழைந்ததற்காக பொதுமக்கள் முன்னிலையில் தி.மு.க. பிரமுகர் மாணிக்கம் ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கோவில் பூட்டப்பட்டது.
மேலும் இளைஞரை திட்டிய மாணிக்கம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்தது. இந்த நிலையில் இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், மாணிக்கம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அனைத்து சமுதாய மக்களும், கோவிலில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ராஜா தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியோடு நேற்று அந்த பகுதியை சேர்ந்த பட்டியல் இன மக்கள் அழைத்து வரப்பட்டனர். கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்த கோவில் திறக்கப்பட்டு, கோவிலுக்குள் அவர்கள் அழைத்து செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய வைத்தனர். இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கட்சியினர் சம்பந்தப்பட்ட மாரியம்மன் கோவிலுக்குள் சென்று பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து இளைஞர்கள் கோவிலுக்குள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதற்கிடையே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
- போக்சோ தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படம் திரையிட்டு, மாணவ, மாணவிகளுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் சிறார்கள் பாலியல் தொந்தரவு தடுக்கும் போக்சோ சட்டம், குழந்தைத் திருமணங்கள் மற்றும் இணைய குற்றங்கள் தடுப்பு குறித்து, பள்ளிகள் தோறும் ஆசிரியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வெங்கடாசலம் வரவேற்றார்.
இதில் வாழப்பாடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலா, தலைமை காவலர் வைரமணி ஆகியோர் போக்சோ தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படம் திரையிட்டு, மாணவ, மாணவிகளுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இக்கருத்தரங்கில், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தற்காப்பு மற்றும் விழிப்புணர்வோடு செயல்படுவதாக உறுதியேற்றனர்.
- பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதற்காக, கழிவறை வாசலில் பையை வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். பிரின்ஸ்மணி திரும்பி வந்து பார்த்தபோது, வைத்த இடத்தில் பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அவருடைய பை மற்றும் அதிலிருந்த ரூ.1000-த்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதால், செய்வதறியாது திகைத்த பிரின்ஸ் மணி பள்ளப்பட்டி போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.
சேலம்:
கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை அருகே உள்ள விளங்கமுறி பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் மணி (வயது 30). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதற்காக, கழிவறை வாசலில் பையை வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். பிரின்ஸ்மணி திரும்பி வந்து பார்த்தபோது, வைத்த இடத்தில் பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவருடைய பை மற்றும் அதிலிருந்த ரூ.1000-த்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதால், செய்வதறியாது திகைத்த பிரின்ஸ் மணி பள்ளப்பட்டி போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- (ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தையொட்டி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது.
- எனவே இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூடப்பட வேண்டும்.
சேலம்:
சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தையொட்டி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூடப்பட வேண்டும்.
அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பதை சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்கவும், மாநகராட்சியின் அறிவிப்பை செயல்படுத்தாத இறைச்சி கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- தனியார் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மூலம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
- முகாமில் தொழு நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதை எவ்வாறு தடுக்க முடியும் என்று விளக்கி கூறப்பட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மூலம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமை ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமையில், ஏற்காடு வட்டார மருத்துவம்மல்லா மேற்பார்வையாளர் மாதேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் புருஷோத்தமன் ஆகியோர் நடத்தினர்.
முகாமில் தொழு நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதை எவ்வாறு தடுக்க முடியும் என்று விளக்கி கூறப்பட்டது. மேலும் உடலில் ஏற்படும் நிறமாற்றம், சிவந்த வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், தோலில் எண்ணெய் பூசியது போன்ற மினுமினுப்பு, காது மடல்கள் தடித்திருந்தல் போன்ற ஆரம்ப அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
பின்னர் இது குறித்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மலை கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி, நோய் அறிகுறிகள் உள்ளதா என்று சோதனை செய்தனர்.
- சஞ்சய் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
- மகள் சஞ்சயுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி ரோட்டில் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் (வயது 18). இவர் சேலம் தனியார் சட்டக்கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். அதே கல்லூரியில் கரூர் மாவட்டத்தை மாணவி தாய்-தங்கையுடன் கல்லூரி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மாணவன் சஞ்சய் மாணவியை பார்ப்பதற்காக அடுக்குமாடி சென்றுள்ளனர். இருவரும் மொட்டைமாடிக்கு சென்று பேசிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென மாணவியின் தாய் எழுந்து பார்த்தபோது மகளை காணாமல் திடுக்கிட்டார். இதனால் அவரை தேடி தேடி மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு மகள் சஞ்சயுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சஞ்சய் அங்கிருந்து செல்வதற்காக 50 உயரமுள்ள மாடியில் இருந்து குதித்தார். இதில் படுகாயம் அடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்தில் அஸ்தம்பட்டி சரக காவல் உதவி ஆணையாளர் லட்சுமி பிரியா ,இரவு ரோந்து பொறுப்பு காவல் உதவி ஆணையாளர் பாபு, கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் பயின்ற போதே சஞ்சய்க்கும் அந்த மாணவிக்கும் இடையே காதல் இருந்து வந்ததும், கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்ததும் தெரியவந்தது.
மகன் இறந்தது குறித்த தகவல் அறிந்த சஞ்சையின் பெற்றோர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து சஞ்சய்யின் தந்தை சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சஞ்சய் இறந்த செய்தியை அறிந்த உடன் தங்கி இருந்த மற்றும் கல்லூரியின் சக மாணவர்கள் மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்வதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று 1,454 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1,466 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து காவிரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 103.72 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 103.73 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
- வீட்டில் இருந்த காய்ச்சல் மருந்தை, விளையாட்டாக ஜீவித் எடுத்து குடித்துவிட்டாள். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்துள்ளார்.
- ஜீவித் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு பதறிய பெற்றோர், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் பழைய சூரமங்கலம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் சையத் சலீம். இவரது 2 வயது மகள் ஜீவித். நேற்று இரவு வீட்டில் இருந்த காய்ச்சல் மருந்தை, விளையாட்டாக ஜீவித் எடுத்து குடித்துவிட்டாள். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்துள்ளார்.
ஜீவித் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு பதறிய பெற்றோர், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் விசாரித்ததில், குளிர்பானம் என நினைத்து காய்ச்சல் மருந்தை குடித்தது தெரியவந்தது. இதையடுத்து ஜீவித்திற்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
- சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் வட மாநில தொழிலாளி தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
- அப்போது கழிவறையில் இருந்து திடீரென அவரின் அலறல் சத்தம் கேட்டது. கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு மயங்கி கிடந்தார்.
சேலம்:
ஒடிசா மாநிலம் ஜெரபேடா அடுத்த கஞ்சிரா பகுதியைச் சேர்ந்தவர் சரோஜ்குமார் பேரா (வயது 38). இவர் தனது நண்பர்களுடன் சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை சரோஜ்குமார், தான் தங்கி இருந்த வீட்டு கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறையில் இருந்து திடீரென அவரின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவருடன் தங்கியிருந்த நண்பர்கள், கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு சரோஜ்குமார் மயங்கி கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சரோஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகார் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சரோஜ்குமாருக்கு ஊர்வசி என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர்.
- சேலம் கொண்டலாம்–பட்டி அருகே நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்–பட்டி அருகே உள்ள மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியில் ஜெயராமன் என்பவர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தின் மீது ஏற்கனவே தனியார் வங்கியில் தொழில் கடன் பெறப்பட்டுள்ளது.
கடனுக்கான வட்டியை மாதம்தோறும் செலுத்தி வந்த நிலையில் திடீரென இந்த இடத்தை வேறு நபருக்கு வங்கி மூலம் எழுதிக் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் நிலத்தை காலி செய்யும்படியும் கடந்த 2 மாதங்களாக ஜெயராமை வங்கி நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.
இதனிடையே இன்று வங்கி ஊழியர்கள் போலீசாருடன் வந்து நிலத்தை காலி செய்யுமாறு கூறினர். இதனால் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கி சார்பில் இருந்து இடத்தை சுற்றி வேலி அமைப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இடத்தை விட்டு தர மாட்டோம் மீறி, நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- சேலம் சீலநாயக்கன்பட்டியில் திடீரென அங்கு வந்தபவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுப்பட்டார்.
- அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டம், பனம ரத்துப்பட்டி அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). கொத்தனார். இவர் நேற்று சீலநாயக்கன்பட்டி பைபாஸ் இரட்டைக் கோவில் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மூர்த்தியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கினார்.
பின்னர் அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நிர்மல் தாஸ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.






