காய்ச்சல் மருந்து குடித்த 2 வயது சிறுமிக்கு சிகிச்சை

வீட்டில் இருந்த காய்ச்சல் மருந்தை, விளையாட்டாக ஜீவித் எடுத்து குடித்துவிட்டாள். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்துள்ளார். ஜீவித் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு பதறிய பெற்றோர், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காய்ச்சல் மருந்து குடித்த 2 வயது சிறுமிக்கு சிகிச்சை
Published on

சேலம்:

சேலம் பழைய சூரமங்கலம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் சையத் சலீம். இவரது 2 வயது மகள் ஜீவித். நேற்று இரவு வீட்டில் இருந்த காய்ச்சல் மருந்தை, விளையாட்டாக ஜீவித் எடுத்து குடித்துவிட்டாள். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்துள்ளார்.

ஜீவித் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு பதறிய பெற்றோர், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் விசாரித்ததில், குளிர்பானம் என நினைத்து காய்ச்சல் மருந்தை குடித்தது தெரியவந்தது. இதையடுத்து ஜீவித்திற்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com