என் மலர்

  நீங்கள் தேடியது "For the girl"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டில் இருந்த காய்ச்சல் மருந்தை, விளையாட்டாக ஜீவித் எடுத்து குடித்துவிட்டாள். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்துள்ளார்.
  • ஜீவித் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு பதறிய பெற்றோர், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  சேலம்:

  சேலம் பழைய சூரமங்கலம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் சையத் சலீம். இவரது 2 வயது மகள் ஜீவித். நேற்று இரவு வீட்டில் இருந்த காய்ச்சல் மருந்தை, விளையாட்டாக ஜீவித் எடுத்து குடித்துவிட்டாள். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்துள்ளார்.

  ஜீவித் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு பதறிய பெற்றோர், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் விசாரித்ததில், குளிர்பானம் என நினைத்து காய்ச்சல் மருந்தை குடித்தது தெரியவந்தது. இதையடுத்து ஜீவித்திற்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது வழக்கு செய்தனர்.
  • இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

  சேலம்:

  சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் செல்வம் என்பவர் சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், செல்வத்தை கண்டித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுமி குளித்து கொண்டிருந்ததை செல்வம் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

  ×