சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்

சேலம் மோகன் நகர் மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் இவர், 14 வயது சிறுமி குளித்துக்கொண்டிருந்த போது எட்டி பார்த்தார்.இதையடுத்து பெற்றோர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சரவணன் மீது புகார் கொடுத்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்
Published on

சேலம்:

சேலம் மோகன் நகர் மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர், 14 வயது சிறுமி குளித்துக்கொண்டிருந்த போது எட்டி பார்த்தார். இது பற்றி சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சரவணன் மீது புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்ேசா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு சரவணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, வாலிபர் சரவணனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com