சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது வழக்கு

சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது வழக்கு செய்தனர்.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது  வழக்கு
Published on

சேலம்:

சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் செல்வம் என்பவர் சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், செல்வத்தை கண்டித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுமி குளித்து கொண்டிருந்ததை செல்வம் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com