என் மலர்
சேலம்
- ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரிந்த சுமார் 22 -க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர்.
- பின்னர் அந்த நாய்களை சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள அந்தோணிபுரம் ஓடைப்பகுதியில் சமீபகாலமாக தெரு நாய் கடித்துக் குதறியதில் 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள், தெரு நாய்களை பிடிக்க கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் சூரமங்கலம் மண்டல உதவி கமிஷனர் செல்வராஜ் மேற்பார்வையில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் , அந்தோணிபுரம் ஓடைப்பகுதி, ஆசாத் நகர், தர்ம நகர், அம்பேத்கர் நகர், ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரிந்த சுமார் 22 -க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர். பின்னர் அந்த நாய்களை சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.
தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களை தொடர்ந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
- இதை முன்னிட்டு இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவிலில் தை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை மாரியம்மன் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நாளை மாலை சக்தி அழைத்தல் மற்றும் அம்மனுக்கு கும்பம் போடுதல், 8-ந் தேதி கோவிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி வண்டி வேடிக்கையும், 10-ந் தேதி மாரியம்மன் கோவில் திடலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.
11-ந் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சிறப்பிக்கும்படி கோவில் நிர்வாக கமிட்டியினர் கேட்டுக் கொண்டனர்.
- மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளவீரன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
- அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், கொளத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளவீரன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், கொளத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மறியல் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் மற்றும் நகராட்சி பொறியாளர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், அந்த வழியாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- குளிக்க சென்ற பட்டதாரி வாலிபர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அவருடைய மகன் மாயக்கண்ணன் (வயது 24). பொறியியல் பட்டதாரியான இவர், சம்பத்தன்று மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான திப்பம்பட்டி காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
அப்போது அவர் ஆற்றின் ஒரு கரையிலிருந்து, மறுக்கரைக்கு நீந்தி செல்ல முயன்றார். சிறிது தூரம் நீந்தி சென்ற மாயக்கண்ணனால், ஆற்றில் நீண்ட நேரம் நீந்த முடியவில்லை. இதனால் தண்ணீரில் தத்தளித்த அவர், திடீரென ஆற்றில் மூழ்கினார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள், மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பரிசலில் சென்று, சுமார் அரை மணி நேரம் தேடி மாயக்கண்ணனை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குளிக்க சென்ற பட்டதாரி வாலிபர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று 103.74 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 103.75 அடியானது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,466 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,454 கன அடியாக சரிந்தது. இந்த நிலையில் இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 1,466 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம், நேற்று 103.74 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 103.75 அடியானது.
- குடிபோதையில் இருந்த 2 பேர் அரசு பஸ்சை மறித்து கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
- 2 பேரும் இருசப்பனை கல்லால் தாக்கி கீழே தள்ளி காதை கடித்துள்ளனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஆண்டி கரையை சேர்ந்தவர் இருசப்பன் (வயது 36). மேட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு காவல் பணிக்காக வீட்டில் இருந்து மேட்டார் சைக்கிளில் மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். மங்கனூர் காலனி அருகே சென்றபோது குடிபோதையில் இருந்த 2 பேர் அரசு பஸ்சை மறித்து கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் பஸ்ஸில் இருந்த பெண்கள், குழந்தைகள், அச்சத்துடன் இருந்தனர். இதனைப் பார்த்த போலீஸ்காரர் இருசப்பன் அந்த நபர்களை தட்டி கேட்டு உள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் இருசப்பனை கல்லால் தாக்கி கீழே தள்ளி காதை கடித்துள்ளனர். இதனால் முகத்திலும், காதிலும் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து இருசப்பன் கருமலை கூடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் போலீஸ்காரரை தாக்கியது தானம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் முத்துராஜ் (45), சிவசக்தி (53), என்பது தெரியவந்தது. இவர்கள் குடிபோதையில் தங்களை கண்டு மக்கள் பயப்பட வேண்டும் என்பதற்காக அரசு பஸ்சை நிறுத்தி தகராறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிவசக்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துராஜை தேடி வருகிறார்கள்.
- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 60) என்பவருக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது.
- இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பிரமணி அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார்.
சேலம்:
சேலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 60) என்பவருக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது.
இதனால் சுப்பிரமணி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பிரமணி அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார்.
இதில் அந்த பெண் 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவார் சுப்பிரமணியனை கைது செய்தனர். மாற்றுத்திறனாளி பெண்ணை முதியவர் கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய வாலிபர்கள்.
- அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார்.
காடையாம்பட்டி:
காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 50),இவர், 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று தோட்டம் தார் சாலை அருகே ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார். அங்கிருந்த பொதுமக்கள் மேட்டார்சைக்கிளை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு வாலிபரை பிடித்த பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து எஸ்.ஐ. கருப்பண்ணனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆடு திருட்டில் ஈடுப்பட்டவர் காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த மெக்கானிக் கோவிந்தராஜ் (25), என்பதும் இவர் ஏற்கனவே கஞ்சநாயக்கன்பட்டி, கருவள்ளி, பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் ஆடுகளைத் திருடி விற்பனை செய்து மது குடித்து வந்ததும் தெரிய வந்தது. இவருடன் வந்தவர் பொம்மிடி பகுதியை சேர்ந்த வேடியப்பன் மகன் பாபு என்பதும் தெரிய வந்தது. கோவிந்தராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது.
- அப்போது நாற்காலி யார் முன்பு போடுவது என்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
காடையாம்பட்டி;
காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தீவட்டிப்பட்டியை சேர்ந்த குமார் மகன் ஜெகன் (வயது 21), என்பவர் தனது உறவினரின் குழந்தைகள் நடனம் ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தீவட்டிப்பட்டி கீழ் வீதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் ரோகித் (22), செல்லையன் மகன் அஜித் (21), ஆகிய இருவரும் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நாற்காலி யார் முன்பு போடுவது என்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கலை நிகழ்ச்சி முடிந்த பின் பள்ளியில் இருந்து வெளியே ஜெகன் வந்தபோது, அஜித் மற்றும் ரோகித் ஆகியோர் வழிமறித்து தாக்கினார். இது குறித்து ஜெகன் அளித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் அஜித் மற்றும் ரோகித்தை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார்.
- அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.
காடையாம்பட்டி:
தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 42).இவர்கள் கொத்தனார் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தருமபுரியில் இருந்து சேலத்தை நோக்கி வரும்போது தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார். அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். முனுசாமி லேசான காயத்துடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்த குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.
- விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.
சேலம்:
சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி குழந்தையம்மாள் (வயது 90). இவர் மேல்மாடியில் வசித்து வருகிறார். கீழ் மாடியில் மகன் மாதேஷ் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பேரன் பாட்டிக்கு காபி கொடுப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.
இது குறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.
இதனால் மன உடைந்த அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தது தெரியவந்ததுள்ளது.
- வருகிற 19-ந்தேதி அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக திருமணமுத்தாற்றில் ஆரத்தி விழா.
- நதிக உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரியில் கலக்கும் இடம்வரை பாதயாத்திரை செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு மலையில் பிறக்கிறது திருமணி முத்தாறு. இந்த நதி சேலம் நகரத்தில் நுழைந்து சேலம், நாமக்கல் மாவட்டம் வழியாக சுமார் 120 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே நஞ்செய் இடையாறு என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது.
மிகவும் பழமையான, புனிதம் நிறைந்த இந்த நதி, மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்து எடுக்கப்பட்டது. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள்.
அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது.
சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று 'சேலம் மணிமுத்தா நதியின் ஒரு திவலை நீர் உண்டால் உடல் பாதகங்கள் அகலும் பரம ஞானம் உண்டாகும்' என்கிறது.
திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை.
இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை.
திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். தற்போது இந்த நதி சுருங்கி சாக்கடைகளால் புனிதம் கெட்டு காட்சியளிக்கிறது.
இந்த நதியின் புனிதத்தை காக்கவும், இழந்த அதன்பெருமைகளை மீட்டெடுக்கவும் ஆன்மீக அமைப்புகள் திரண்டுள்ளன. அதன் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக திருமணமுத்தாற்றில் ஆரத்தி விழா நடத்தவும், நதிக உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரியில் கலக்கும் இடம்வரை பாதயாத்திரை செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலத்தில் இன்று நடை பெற்றது. இதில் பல்வேறு சங்கங்கள், சமூக, ஆன்மீக அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திருமணி முத்தாறு நதியின் புனிதம் காக்க தீர்மானிக்கப்பட்டது. நதி ஆரத்தி விழாவை பிரமாண்டமாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.






