என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assaulter of teenager arrested வாலிபரை"

    • காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது.
    • அப்போது நாற்காலி யார் முன்பு போடுவது என்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    காடையாம்பட்டி;

    காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தீவட்டிப்பட்டியை சேர்ந்த குமார் மகன் ஜெகன் (வயது 21), என்பவர் தனது உறவினரின் குழந்தைகள் நடனம் ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தீவட்டிப்பட்டி கீழ் வீதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் ரோகித் (22), செல்லையன் மகன் அஜித் (21), ஆகிய இருவரும் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நாற்காலி யார் முன்பு போடுவது என்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கலை நிகழ்ச்சி முடிந்த பின் பள்ளியில் இருந்து வெளியே ஜெகன் வந்தபோது, அஜித் மற்றும் ரோகித் ஆகியோர் வழிமறித்து தாக்கினார். இது குறித்து ஜெகன் அளித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் அஜித் மற்றும் ரோகித்தை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×