என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old man arrested முதியவர் கைது"

    • மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 60) என்பவருக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது.
    • இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பிரமணி அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 60) என்பவருக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது.

    இதனால் சுப்பிரமணி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பிரமணி அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார்.

    இதில் அந்த பெண் 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவார் சுப்பிரமணியனை கைது செய்தனர். மாற்றுத்திறனாளி பெண்ணை முதியவர் கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • பராசக்தி நகர் பங்களா தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
    • ரத்தினம்மாளை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. மேலும் அவரை கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி கேட், பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 56). இவர் பராசக்தி நகர் பங்களா தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் காட்டில் வேலை செய்தபோது ஊஞ்சக்காடு ராமசாமி பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் (64) என்பவர் வீட்டின் விசேஷத்திற்காக வாழைத் தார்கள் பார்க்க வந்தார்.

    அப்போது ரத்தினம்மாள் காட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் வாழைத் தார் ஏதும் பார்க்க வேண்டாம் என அவரிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர்

    ரத்தினம்மாளை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. மேலும் அவரை கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது. சத்தம் கேட்டு காட்டில் வேலை செய்யும் பெண்கள் அங்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதில் படுகாயமடைந்த ரத்தினம்மாள் லைன்மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பெண்களை துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் ஜெயவேலை கைது செய்தனர்.

    • 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் தீவிர விசாரணையில் கொலை செய்தவர் அந்த பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 65) என்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதையடுத்து அழகாபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள், அந்த முதியவர் உடலை பரிசோதிக்கையில், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தினர். இவர் அந்த பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார் என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார், கொைல வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடம் அருகில் சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர். மேலும் கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    போலீசார் தீவிர விசாரணையில் கொலை செய்தவர் அந்த பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 65) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே கொலையுண்ட முதியவர் பெயர்? மற்றும் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. எனவே அவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் ெபாதுமக்கள் உடனடியாக ேபாலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு அழகாபுரம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×