சேலத்தில் 90 வயது மூதாட்டி தீக்குளித்து சாவு

சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்த குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.
சேலத்தில் 90 வயது மூதாட்டி தீக்குளித்து சாவு
Published on

சேலம்:

சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி குழந்தையம்மாள் (வயது 90). இவர் மேல்மாடியில் வசித்து வருகிறார். கீழ் மாடியில் மகன் மாதேஷ் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பேரன் பாட்டிக்கு காபி கொடுப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.

இது குறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.

இதனால் மன உடைந்த அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தது தெரியவந்ததுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com