கேரள வாலிபரின் பையை திருடிய மர்ம நபர்கள்

பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதற்காக, கழிவறை வாசலில் பையை வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். பிரின்ஸ்மணி திரும்பி வந்து பார்த்தபோது, வைத்த இடத்தில் பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவருடைய பை மற்றும் அதிலிருந்த ரூ.1000-த்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதால், செய்வதறியாது திகைத்த பிரின்ஸ் மணி பள்ளப்பட்டி போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.
கேரள வாலிபரின் பையை திருடிய மர்ம நபர்கள்
Published on

சேலம்:

கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை அருகே உள்ள விளங்கமுறி பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் மணி (வயது 30). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதற்காக, கழிவறை வாசலில் பையை வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். பிரின்ஸ்மணி திரும்பி வந்து பார்த்தபோது, வைத்த இடத்தில் பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவருடைய பை மற்றும் அதிலிருந்த ரூ.1000-த்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதால், செய்வதறியாது திகைத்த பிரின்ஸ் மணி பள்ளப்பட்டி போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com