என் மலர்
சேலம்
- லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
- இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி யில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
முதலில் விநாயகர், 2-வதாக சோமேஸ்வரர், சவுந்தரவல்லி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. 3-வதாக பெரிய தேரில் லட்சுமி நரசிம்மர், ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி னார்.
தேரோட்டத்தை சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி, வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று மாலை தொடங்கிய தேரோட்டம், தாரமங்கலம் பிரிவு சாலையில் சென்று நிலை நிறுத்தப்பட்டது.
2-வது நாளான இன்று மாலை தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து நங்கவள்ளி பஸ் நிலையம் வரையிலும், நாளை 8-ந் தேதி பஸ் நிலையத்தில் இருந்து நங்கவள்ளி பேரூராட்சி அலுவலகம் வரையிலும், நாளை மறுநாள் 9-ந் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தோப்பு பிரிவு தோப்பு தெரு பிரிவு வரையிலும், 10ம் தேதி தோப்பு தெரு பிரிவிலிருந்து கோவில் முன்பு தேர் நிலை சேர்கிறது.
இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமை யில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
- 7 வார்த்தைகளையும் தியானம் செய்து கொண்டு அமைதி ஊர்வலமாக சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தனர்.
ஆத்தூர்:
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த துக்க தினம் புனித வெள்ளியாக இன்று கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் அனு சரிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமை யில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சிறப்பு சிலுவைப்பாதை பவனி, ஆலயத்திலிருந்து உடையார்பாளையம் கல்லறைத்தோட்டம் வரை நடைபெற்றது.
இதில், இயேசு சிலுவையை சுமந்து சென்றபோது, சாட்டையால் அடித்து அவரை துன்புறுத்து வது போன்ற தத்ரூபமான காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இந்த சிலுவைப்பாதை யில் ஏராளமான கிறிஸ்த வர்கள் கலந்து கொண்டு, 14 சிலுவைப்பாதை நிலைகளையும், இயேசு சிலுவையில் மொழிந்த 7 வார்த்தைகளையும் தியானம் செய்து கொண்டு அமைதி ஊர்வலமாக சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தனர்.
- 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பயணிகளிடம் காசு கேட்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.
- அவர் உடல்நிலை சரியில்லாமல் சாலையோரம் படுத்து கிடந்தார்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பயணிகளிடம் காசு கேட்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தார். பின்னர் அவர் உடல்நிலை சரியில்லாமல் சாலையோரம் படுத்து கிடந்தார். கடந்த வாரம் அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அந்த முதியவர் திடீரென உயிரிழந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் நெய்க்கா ரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
- மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர்.
சேலம்:
கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு செல்லும் கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16382) சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெய்க்கா ரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டி ருந்தது.
அப்போது மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர். இதில் ரெயிலின் ஏ1 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியின் கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் முறையிட்டனர்.
அவர், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், சேலம் ரெயில்வே கோட்ட போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாது காப்பு படையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய மர்மந பர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.கல்வீச்சு நடந்த பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- பழைய மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சக்தி காளி யம்மன், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
- 29-ந் தேதி இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் பழைய மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சக்தி காளி யம்மன், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி கொடி யேற்றுதல் மற்றும் பூச்சாற்று தல், நந்தா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 29-ந் தேதி இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
4-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து முப்போடு அழைத்தல், 5-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து சக்தி அழைத்தல், பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்து சூரசம்காரம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் கருவறைக்குள் சென்று தாங்களாக அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை காவிரி ஆற்றில் இருந்து அக்னி கிரகம், மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காலை பூ மிதித்தல் மற்றும் சாமிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப அலங்காரத்துடன் சாமி திருவீதி உலா மற்றும் வான வேடிக்கை நடைபெற்றது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா குப்புசாமி தலைமையில் கோவில் நிர்வாக கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
- சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.
இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
- மாற்றுத்தி றனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- இதில், 21 மாற்றுத்தி றனா ளிகளுக்கு குறைதீர்ப்புக்கு கூட்டத்திலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்தி றனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
உதவி கலெக்டர் தணி காச்சலம் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலு வலர் மகிழ்நன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி கள் வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகை உட்பட 75 மனுக்களை உதவி கலெக்டரிடம் கொடுத்தனர்.
இதில், 21 மாற்றுத்தி றனா ளிகளுக்கு குறைதீர்ப்புக்கு கூட்டத்திலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மேட்டூர்அரசு மருத்துவமனை டாக்டர் சுரேந்திரன், விவேகானந்தன், மேட்டூர் தாசில்தார் முத்துக்குமார், மண்டல துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்ப ழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
- இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனி யார் தொழிற்நிறுவனங்க ளில் காலியாக உள்ள தொழிற்பழகுனர் இடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்ப ழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாணவர்ள் தங்க ளுக்கு உரிய தொழிற்பழ குனர் இடங்களை தேர்வு செய்து உதவித்தொகை யுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற அழைக்கப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.
ஏனவே இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி முடிக்காத ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாண வர்கள் அனைவரும் தங்க ளது அனைத்து உண்மை சான்றுகள் மற்றும் சுய விவரத்துடன் (பயோ டேட்டாவுடன்) தொழிற்பழ குநர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுகொண்டுள்ளார்.
- 8 மாத கர்ப்பிணி ஆன இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் பிரசவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- இளம்பெண்ணில் உடல்நிலை திடீரென மோசமானது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியான நிலையில் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரித்தபோது அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றும், வாலிபர் ஒருவரிடம் பழனியதால் அவர் கர்ப்பம் ஆனதும் தெரியவந்தது.
8 மாத கர்ப்பிணி ஆன நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் பிரசவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
அதேநேரம் இளம்பெண்ணில் உடல்நிலை மோசமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் அந்த இளம்பெண்ணை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். வழியிலேயே இளம்பெண் பரிதாபமாக இறந்தார். திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்ற இளம்பெண் பிரசவத்தின்போது இறந்த சம்பவம் வாழப்பாடிபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல் சிகிச்சை அளித்த டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
- காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. எனினும் சில பகுதிகளில் கோடை மழை பெய்வதால் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிக்கிறது.
நேற்று விநாடிக்கு 1,561 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 1,723 கனஅடியாக வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
குறைந்த அளவு தண்ணீரே அணையில் இருந்து திறக்கப்பட்டாலும், நீர்வரத்து குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
நேற்று 102.71 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 102.70 அடியானது.
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலாசாரத்தை ஒன்றிணைப்பதே மத்திய அரசின் நோக்கம்.
- காசியில் நடந்த கலாசாரங்கள் மற்றும் மொழிகளின் சங்கமத்தில் நீங்கள் சிறந்த அனுபவத்தை பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நீலாம்பூர்:
கடந்த ஆண்டு நவம்பரில் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் பங்கேற்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டது.
இந்த ரெயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தமிழர்கள், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அந்த வகையில் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த துளசி அம்மாள், ராஜாமணி ஆகியோரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 2 பேரும் சொந்த ஊருக்கு வந்தனர்.
பின்னர் 2 பேரும், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தமைக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தும், காசி தமிழ் சங்கம நிகழ்வுகள் குறித்தும் கடிதம் எழுதி அனுப்பினர்.
இந்நிலையில் கோவை பெண்களின் பாராட்டு கடிதத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதுவும் அந்த கடிதத்தை தமிழிலேயே எழுதி அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், இந்தியா ஒரு பன்முக தன்மை கொண்ட நாடு. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலாசாரத்தை ஒன்றிணைப்பதே மத்திய அரசின் நோக்கம். காசியில் நடந்த கலாசாரங்கள் மற்றும் மொழிகளின் சங்கமத்தில் நீங்கள் சிறந்த அனுபவத்தை பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நம் நாட்டின் பன்முகத் தன்மையை கண்டு உலகமே வியக்கிறது. அந்த பன்முகத்தன்மையே நம்மை பிணைக்கும் ஒற்றுமையின் இழையாகும். காசிக்கும், தமிழக மக்களுக்கும் இடையேயான உவு, பண்பாட்டு ஒற்றுமையை வெளிக்காட்டுகிறது.
பல பகுதிகளின் கலாசாரம் மற்றும் நாகரிக பிணைப்புகளை வலுப்படுத்துவதே ஒரே பாரதம் என்பதன் நோக்கமாகும். காசி தமிழ் சங்கத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பும், ஈடுபாடும் நாட்டை ஒன்றிணைக்கும் எனது முயற்சிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. என பிரதமர் மோடி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தாங்கள் பாராட்டி எழுதிய கடிதத்திற்கு, நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியதை நினைத்து துளசியம்மாளும், ராஜாமணியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து துளசி அம்மாள் கூறியதாவது:-
காசி தமிழ் சங்க நிகழ்வுக்கு சென்றதும், அங்குள்ள மக்கள் எங்களை வரவேற்றதும் மன மகிழ்ச்சியை தருகிறது. நான் அங்கு சென்ற போது, அங்குள்ள கோவில்கள், ராமர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று தரிசித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழர்களையும், தமிழையும்வளர்க்க உதவும்.
சாதாரண கிராமத்து வாசியான நான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதுவும் தமிழிலேயே கடிதம் அனுப்பியது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமரின் இந்த செயல், தமிழக மக்கள் மீதும், தமிழ் மீதும் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
- சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 22 ஆயிரத்தது 599 மாணவர்கள் 21 ஆயிரத்து 965 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 564 பேர் எழுதினர்.
சேலம்:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 22 ஆயிரத்தது 599 மாணவர்கள் 21 ஆயிரத்து 965 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 564 பேர் எழுதினர்.
மாற்று திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் பங்கேற்க உள்ளனர். அரசு விதிகளின் படி தேர்வு எழுத உரிய சலுகை கள் வழங்கப்பட்டிருந்தன. பொது தேர்வு பணியில் 70 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 71 வழித்தட அலுவலர்கள் , 344 முதன்தமை கண்காணிப்பா ளர்கள், 344 துறை அலுவலர்கள் 5 ஆயிரத்து 859 அறை கண்காணிப்பா ளர்கள் சொல்வதை எழுதுபவர்கள் 844 பேர், 490 நிலையான படையினர், 579 ஆசிரியரல்லா பணி யாளர்கள் நியமனம் செய்ய பட்டு கண்காணித்த னர்.
சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவ்அர் கூறினார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.






