என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,723 கனஅடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,723 கனஅடியாக அதிகரிப்பு

    • காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. எனினும் சில பகுதிகளில் கோடை மழை பெய்வதால் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிக்கிறது.

    நேற்று விநாடிக்கு 1,561 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 1,723 கனஅடியாக வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    குறைந்த அளவு தண்ணீரே அணையில் இருந்து திறக்கப்பட்டாலும், நீர்வரத்து குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    நேற்று 102.71 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 102.70 அடியானது.

    Next Story
    ×