புனித வெள்ளியையொட்டி சிலுவைப் பாதை ஊர்வலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமை யில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. 7 வார்த்தைகளையும் தியானம் செய்து கொண்டு அமைதி ஊர்வலமாக சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தனர்.
சிலுவைப் பாதை தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டதை படத்தில் காணலாம். 
சிலுவைப் பாதை தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டதை படத்தில் காணலாம். 
Published on

ஆத்தூர்:

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த துக்க தினம் புனித வெள்ளியாக இன்று கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் அனு சரிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமை யில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சிறப்பு சிலுவைப்பாதை பவனி, ஆலயத்திலிருந்து உடையார்பாளையம் கல்லறைத்தோட்டம் வரை நடைபெற்றது.

இதில், இயேசு சிலுவையை சுமந்து சென்றபோது, சாட்டையால் அடித்து அவரை துன்புறுத்து வது போன்ற தத்ரூபமான காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

இந்த சிலுவைப்பாதை யில் ஏராளமான கிறிஸ்த வர்கள் கலந்து கொண்டு, 14 சிலுவைப்பாதை நிலைகளையும், இயேசு சிலுவையில் மொழிந்த 7 வார்த்தைகளையும் தியானம் செய்து கொண்டு அமைதி ஊர்வலமாக சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com