என் மலர்tooltip icon

    சேலம்

    • வாழப்பாடி யிலுள்ள மருத்துவர் செல்வம்பாள் மருத்துவ மனைக்கு வியாழக்கிழமை இரவு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
    • மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான 22 வயது இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகி யதில் கர்ப்பமானார். இது பெற்றோருக்கு தெரிய வந்ததால், வாழப்பாடி யிலுள்ள மருத்துவர் செல்வம்பாள் மருத்துவ மனைக்கு வியாழக்கிழமை இரவு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.

    சிறுமியின் வயிற்றில் 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், அந்த குறை மாத குழந்தையை, மருத்துவர் செல்வாம்பாள் பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெய செல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவ லர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், மருத்துவர் செல்வாம்பா ளிடம் விசாரணை நடத்தினர்.

    இதனையடுத்து, திருமண மாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீஸார், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் செல்வாம்பாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் தெரியவந்ததால் சோர்ந்து காணப்பட்ட மருத்துவர் செல்வாம்பாள், நேற்றிரவு வாழப்பாடியிலுள்ள அவரது மருத்துவமனை யிலேயே மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக இவர் அரசு மருத்துமனையில் அனும திக்கப்பட்டுள்ளதால், போலீசார் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.வாழப்பாடியில் சிறுமி உயிரிழந்த வழக்கு விசாரணை:

    மயங்கி விழுந்த பெண் மருத்துவர் மருத்துமனையில் அனுமதி

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு
    • இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    சேலம்:

    கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்ப டும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்க ளால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்கா லத்தின் இறுதி வாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கி யது. அதனைதொடர்ந்து பெரிய வியாழன் நடை பெற்றது. ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்ற நிகழ்ச்சியே பெரிய வியா ழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நேற்றுமுன்தினம் புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை, சிலுவை பாதை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஈஸ்டர் கொண்டாட்டம்

    அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தேவா லயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொண்டனர்.

    சேலம் சூரமங்கலம் இருதய ஆண்டவர் பேரா லயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயம், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தேவாலயத்தி லும் ஈஸ்டரை முன்னிட்டு பண்டிகை சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.

    ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி ஆலயம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயம், கோட்டை லெக்லர் ஆலயம், சன்னியாசிகுண்டு புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல்லில் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதேபோல் சேலம் சாலையில் உள்ள அசெம்பளி ஆப் காட் திருச்சபையிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

    • சேலத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வணிகர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் சென்னைக்கு சென்று வருகின்றனர்.
    • சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் மூலம், விமானத்தில் சென்னை சென்றடையும் நேரத்தை விட குறைவான நேரத்தில் சென்னை சென்றடைய முடியும்.

    சேலம்:

    கோவை-சென்னை இடையே சேலம் வழியாக வந்தேபாரத் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இது சேலம் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வணிகர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் சென்னைக்கு சென்று வருகின்றனர். சாதாரண ரெயில்களில் சென்னை செல்ல குறைந்தது 6 மணி முதல் 6 1/2 மணி நேரம் வரை ஆகிறது.

    இந்த நிலையில், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் மூலம், விமானத்தில் சென்னை சென்றடையும் நேரத்தை விட குறைவான நேரத்தில் சென்னை சென்றடைய முடியும்.

    ஏற்கனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட விமானத்தில் பயண நேரம் 1 மணி நேரம். ஆனால் சேலத்தில் இருந்து காமலாபுரம் செல்ல 30 நிமிடம், விமானம் வருவதற்கு முன் காத்திருக்கும் நேரம் 1 1/2 மணி நேரம், சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியில் வருவதற்கு 45 நிமிடம், சென்னை மாநகருக்கு செல்ல குறைந்தது 1 மணி நேர பயணம் என குறைந்தபட்சம் 4.50 மணி நேரம் செலவிட வேண்டும்.

    தற்போது அதைவிட குறைவாக 3.50 மணி நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல முடியும். மேலும் விமான கட்டணத்தோடு ஒப்பிடுகையில் இந்த ரெயிலுக்கு நிர்ணய கட்டணமும் குறைவானது என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

    இதனால் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • கடந்த 20 நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட போவதாக் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்திருந்தது.

    இதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட தலைந கரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே மாநிலத் தலைவர் ஜெயசந்திரனை தாக்கியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்த னர். இதையடுத்து நியாய விலைக்கடை பணியா ளர்கள் தங்கள் போராட் டத்தை வாபஸ் பெற்றனர்.

    சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கணே சன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில பொருளா ளர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தை தொடர்ந்து மாநில துணைத்தலைவர் கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடராக கடந்த 20 நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இன்று மாலைக்குள் கைது செய்வதாக உறுதி அளித்ததால், போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது. நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

    • சேலத்தை அடுத்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது.
    • ஒரே நேரத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்ததால், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புனித வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாளாக அமைந்துள்ளது.

    இதனால் சேலத்தை அடுத்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. ஒரே நேரத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்ததால், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து செல்வது போல நின்றன.

    உற்சாகம்

    ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஏரி பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் மலர் செடிகளையும் இயற்கையையும் ரசித்து உற்சாகம் அடைந்தனர்.

    பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், மஞ்ச குட்டை காட்சி முனை, சேர்வராயன் கோவில் உள்பட பல இடங்களுக்கும் சென்று இயற்கை அழகை கண்டு களித்தனர்.

    மேலும் கிளியூர் நீர்வீழ்ச்சி, மஞ்சக்குட்டை அடுத்த நல்லூர் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களிலும் ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.

    ஆனைவாரி முட்டல் ஏரி

    இதேபோல், ஆத்தூர் அடுத்த ஆனைவாரி, முட்டல் சுற்றுலா தலத்திலும் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்திருந்தனர். முட்டல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் ஆனைவாரி முட்டல் அருவியில் கொட்டும் குளிர்ச்சியான நீரில் பலரும் நீராடி மகிழ்ந்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால், அருவியில் குளிக்க பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். இதேபோல், மேட்டூர் அணை பூங்காவிலும் நேற்று பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. மேட்டூர் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் பூங்காவுக்கு வந்து பொழுதைக் கழித்து மகிழ்ந்தனர்.

    • தி.மு.க. ஒப்பந்ததாரர் உத்தர சாமி என்பவர் அ.தி.மு.க கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த சுவர்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக தெரி கிறது.
    • மேலும் இதுபற்றி தகவல் அறிந்து அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி 12-வது வார்டு பிள்ளையார் நகர் பகுதியில் அ.தி.மு.க கொடி கம்பம், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

    இந்த நிலையில், அந்தப் பகுதியில் சாலை விரி வாக்கம் என்ற பெயரில் தி.மு.க. ஒப்பந்ததாரர் உத்தர சாமி என்பவர் அ.தி.மு.க கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த சுவர்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக தெரி கிறது.இதுகுறித்து அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அங்கு வந்து கேட்டதற்கு, எந்த ஒரு பதிலும் அளிக்கா மல் உத்தரசாமி வாகனத்தை எடுத்து சென்றார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்து அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    தி.மு.க ஒப்பந்ததாரர், அ.தி.மு.க கொடிக்கம்பத்தை இடித்து அகற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • விபத்தில் பலியான லாரி டிரைவர் மற்றும் கிளீனர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஊட்டி நோக்கி நேற்று ஒரு சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள திமிரிகோட்டை அருகே பஸ் வந்துகொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து வந்த லாரி, எதிர்பாராதவிதமாக சொகுசு பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னப்பன், மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கிளீனர் முத்துசாமி ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதும் சொகுசு பஸ் டிரைவர் குதித்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பஸ்சில் பயணம் செய்த பிரபா என்ற பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் காயமின்றி தப்பினர். இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான லாரி டிரைவர் மற்றும் கிளீனர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழப்பாடியிலுள்ள மருத்துவர் செல்வாம்பாள் என்பவரது தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
    • குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறையாத ஒரு சிறுமியும், இந்திரா நகரைச் சேர்ந்த இவரது உறவினரான ஒரு வாலிபரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சிறுமி கர்ப்பமானார். இது பெற்றோருக்கு தெரியவந்ததால், தனது மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளனர்.

    வாழப்பாடியிலுள்ள மருத்துவர் செல்வாம்பாள் என்பவரது தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றுள்ளனர்.

    சிறுமியை பரிசோதித்த டாக்டர் செல்வாம்பாள், 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், கருவை கலைக்க முடியாது என்பதால், பிரசவ முறையில் சிகிச்சை அளித்து, சிறுமியின் வயிற்றில் இருந்த குறை மாத குழந்தையை பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் அவசர சிகிச்சை வாகனத்தில் வைத்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வாழப்பாடி போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தினர்.

    திருமணமாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த பெண் டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் குறை மாதத்தில் சிறுமியால் பிரசவிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் நெகிழித் தொட்டியில் உயிருடன் கிடந்த பெண் குழந்தை மீட்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு இன்குபேட்டர் கருவியில் வைத்து சிகிச்சை அளித்து, குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு, பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் மீதும், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், தனலட்சுமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

    • டெலிவரி செய்த வாலிபர், போன் அல்லது பணம் பெற்று தருவதாக உறுதி அளித்தார்.
    • ஆன்லைனில் பதிவு செய்து பொருட்கள் வாங்கும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 40). இவரது உறவினர் அய்யாதுரை என்பவருக்கு ஆன்லைன் செயலி மூலம் ரூ.11,400 மதிப்புள்ள மொபைல் போன் ஆர்டர் செய்தார்.

    சில நாட்களில் பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, செல்போனுக்கு பதில் கல் இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆன்லைன் நுகர்வோர் உதவி மையத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து புகார் செய்தார். ஆனால் 3 வாரத்திற்கு மேலாகியும், மொபைல் போன் அல்லது அதற்குரிய பணம் திரும்ப வரவில்லை.

    இந்த நிலையில் நேற்று பார்சல் டெலிவரி செய்ய வந்த ஊழியரை, தன்ராஜ் மற்றும் அவரது உறவினர் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். டெலிவரி செய்த வாலிபர், போன் அல்லது பணம் பெற்று தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவரை விடுவித்தனர்.

    இதுபற்றி போலீசார் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து தீர்வு பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பார்சலில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்து பொருட்கள் வாங்கும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • நேற்று 102.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. எனினும் சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது.

    நேற்று விநாடிக்கு 1,723 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 1,873 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 102.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.

    • சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல துப்புரவு பணியாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள், மற்றும் இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளிடம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

    சேலம்

    சேலம் குமரகிரியில் பங்குனி உத்திரம் திருவிழா நடைபெற்றது. விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல துப்புரவு பணியாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள், மற்றும் இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளிடம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். சேலம் மாநகர காவல் துறை சார்பாக 50 பேருக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.

    • கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலாளர் தலைமை தாங்கினார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இங்கு சமையல் கேஸ் சிலிண்டரில் நிரப்பப்பட்டு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்பட பல்வேறு ஆகிய மாவட்ட மக்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    இங்கு கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலா ளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஓசூர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலை துணை மேலாளர் சரத் சந்திரா, சேலம் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், அதனைத் தொடர்ந்து கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே அதிநவீன தண்ணீர் வெளியேறி அணைக்கும் பயிற்சியும் மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது,

    தொழிற்சாலை பாதுகாப்பு துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அலுவ லர்கள், தொழி லாளர்கள், ஊழியர்களுக்கு விபத்து ஏற்படும்போது விழிப்பு ணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கப்பட வேண்டும் உயிர் காக்கும் கருவிகள் அணிந்து கொண்டு பணி புரிய வேண்டும் என்றார், முகாமில் கேஸ் ஏஜென்சி மேலாளர் முருகேசன்,கருப்பூர் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பழகன், தீயணைப்பு வீரர்கள், பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் தொழிற்சாலை மேலாளர் சிவராம கிருஷ்ணன் பயிற்சி அளித்த போது எடுத்த படம் அருகில் இணை இயக்குனர் சபீனா, உள்ளார்.

    ×