என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் பார்சல்"
- டெலிவரி செய்த வாலிபர், போன் அல்லது பணம் பெற்று தருவதாக உறுதி அளித்தார்.
- ஆன்லைனில் பதிவு செய்து பொருட்கள் வாங்கும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் கூறினார்.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 40). இவரது உறவினர் அய்யாதுரை என்பவருக்கு ஆன்லைன் செயலி மூலம் ரூ.11,400 மதிப்புள்ள மொபைல் போன் ஆர்டர் செய்தார்.
சில நாட்களில் பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, செல்போனுக்கு பதில் கல் இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆன்லைன் நுகர்வோர் உதவி மையத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து புகார் செய்தார். ஆனால் 3 வாரத்திற்கு மேலாகியும், மொபைல் போன் அல்லது அதற்குரிய பணம் திரும்ப வரவில்லை.
இந்த நிலையில் நேற்று பார்சல் டெலிவரி செய்ய வந்த ஊழியரை, தன்ராஜ் மற்றும் அவரது உறவினர் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். டெலிவரி செய்த வாலிபர், போன் அல்லது பணம் பெற்று தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவரை விடுவித்தனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து தீர்வு பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பார்சலில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்து பொருட்கள் வாங்கும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.