search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில தலைவரை தாக்கியவர்கள் கைது நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம் வாபஸ்
    X

    மாநில தலைவரை தாக்கியவர்கள் கைது நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம் வாபஸ்

    • கடந்த 20 நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட போவதாக் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்திருந்தது.

    இதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட தலைந கரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே மாநிலத் தலைவர் ஜெயசந்திரனை தாக்கியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்த னர். இதையடுத்து நியாய விலைக்கடை பணியா ளர்கள் தங்கள் போராட் டத்தை வாபஸ் பெற்றனர்.

    சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கணே சன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில பொருளா ளர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தை தொடர்ந்து மாநில துணைத்தலைவர் கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடராக கடந்த 20 நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இன்று மாலைக்குள் கைது செய்வதாக உறுதி அளித்ததால், போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது. நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×