என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வந்தே பாரத் ரெயில் மூலம் சேலத்தில் இருந்து 3.50 மணி நேரத்தில் சென்னை பயணம்
- சேலத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வணிகர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் சென்னைக்கு சென்று வருகின்றனர்.
- சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் மூலம், விமானத்தில் சென்னை சென்றடையும் நேரத்தை விட குறைவான நேரத்தில் சென்னை சென்றடைய முடியும்.
சேலம்:
கோவை-சென்னை இடையே சேலம் வழியாக வந்தேபாரத் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இது சேலம் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வணிகர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் சென்னைக்கு சென்று வருகின்றனர். சாதாரண ரெயில்களில் சென்னை செல்ல குறைந்தது 6 மணி முதல் 6 1/2 மணி நேரம் வரை ஆகிறது.
இந்த நிலையில், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் மூலம், விமானத்தில் சென்னை சென்றடையும் நேரத்தை விட குறைவான நேரத்தில் சென்னை சென்றடைய முடியும்.
ஏற்கனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட விமானத்தில் பயண நேரம் 1 மணி நேரம். ஆனால் சேலத்தில் இருந்து காமலாபுரம் செல்ல 30 நிமிடம், விமானம் வருவதற்கு முன் காத்திருக்கும் நேரம் 1 1/2 மணி நேரம், சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியில் வருவதற்கு 45 நிமிடம், சென்னை மாநகருக்கு செல்ல குறைந்தது 1 மணி நேர பயணம் என குறைந்தபட்சம் 4.50 மணி நேரம் செலவிட வேண்டும்.
தற்போது அதைவிட குறைவாக 3.50 மணி நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல முடியும். மேலும் விமான கட்டணத்தோடு ஒப்பிடுகையில் இந்த ரெயிலுக்கு நிர்ணய கட்டணமும் குறைவானது என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
இதனால் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.