என் மலர்
சேலம்
- சேலம், நாமக்கல், தரும புரி மாவட்டங்களுக்கு இடையே யான ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி சேலம் ஒய்.எம்.சி.ஏ.மை தானம், குகை சங்கீத் தியேட்டர் அருகில் உள்ள பொதுந லப்பிரியர் சங்க மைதானம் ஆகிய 2 இடங்களில் நடை பெற்றது.
- போட்டிகள் தேசிய நடுவர் திருச்சி கலி புல்லா, மாநில நடுவர்கள் ராஜராஜன், சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.
சேலம்:
சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களுக்கு இடையேயான ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி சேலம் ஒய்.எம்.சி.ஏ.மை தானம், குகை சங்கீத் தியேட்டர் அரு கில் உள்ள பொதுந லப்பிரியர் சங்க மைதானம் ஆகிய 2 இடங்களில் நடை பெற்றது. இதில் மொத்தம் 22 அணி கள் கலந்து கொண்டன.
தொடக்க விழாவில் மோதி லால் பூப்பந்து குழுவின் தலைவர் ராஜசேகர், செயலாளர் வெங்கடரமணன், துணை தலைவர் யுவராஜ், துணை செயலாளர்கள் சுரேஷ், கார்த்தி, மூத்த உறுப்பினர் சுப்பிர மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகள் தேசிய நடுவர் திருச்சி கலி புல்லா, மாநில நடுவர்கள் ராஜராஜன், சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தருமபுரி அணி முதல் இடத்தையும், சேலம் மோதிலால் பி அணி 2-ம் இடத்தையும், மாஞ்சோலை அணி 3-வது இடத்தையும், மோதிலால் ஏ அணி 4-வது இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- சேலம் மாநகரில் முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல காலை 7 மணி முதல் 11மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்தப் போக்குவரத்து தடையானது வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாநகரில் போக்கு வரத்து நெரிசல் காரணமாக விபத்துகளைத் தடுக்கவும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவல் நேரங்களில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையிலும் சேலம் மாநகரில் முக்கிய சாலைகளில் கனரக வாக னங்கள் செல்ல காலை 7 மணி முதல் 11மணி வரை யிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையி லும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்து தடையானது வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ள பகுதிகள் வருமாறு:-
சீலநாயக்கன்பட்டி பிரதான சாலை முதல் காந்தி சிலை (திருச்சி பிர தான சாலை) வரை, நெத்தி மேடு சந்திப்பு முதல் குகை (சங்ககிரி பிரதான சாலை), 5 ரோடு முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் (ஓமலூர் பிரதான சாலை), மணல் மார்க்கெட் முதல் வள்ளுவர் சிலை வரை (கமலா மருத்துவமனை, டவுன் ரெயில் நிலையம்),
சுந்தர் லாட்ஜ் முதல் மாவட்ட கலெக்டர் அலுவ லகம் (பிரட்ஸ் சாலை), சுந்தர் லாட்ஜ் முதல் அண்ணா பார்க் (காந்தி மைதானம்) ஆகிய சாலைக ளில் கனரக வாகனங்கள் செல்ல நிரந்தர தடை விதிக் கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய (பால், தண்ணீர், மருந்து) வாக னங்களுக்கு தடை ஏதும் இல்லை. இந்த நடவ டிக்கைக்கு வாகன ஓட்டு நர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
- தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களைக் கண்டறிந்து அவற்றிற்கு சல் வைக்க நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
- மாநகரில் 13 டாஸ்மாக் பார்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சேலம்:
தஞ்சையில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் போலி மது வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை யடுத்து தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களைக் கண்டறிந்து அவற்றிற்கு சல் வைக்க நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தர வின் பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்பு சாமி, கலால் உதவி ஆணை யர் மாறன் மற்றும் மது விலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் செல்வி ஆகி யோர் அடங்கிய குழுவினர் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கூடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரில், புதிய பேருந்து நிலையம், நெத்திமேடு, கொண்ட லாம்பட்டி, கந்தம்பட்டி உள்ளிட்ட மாநகரில் 13 டாஸ்மாக் பார்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது
இதேபோல ஊரக பகுதி களில் ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உள்பட புகர் பகுதியில் 14 டாஸ்மாக் மதுக்கூடங்கள் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த மொத்தம் 27 டாஸ்மாக் பார்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் கடை களில் நிர்ணயம் செய்யப் பட்ட விலையை விட கூடு தல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடையின் விற்ப னையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேற்று மாலை வந்தார்.
- ஆன்லைனில் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சங்ககிரி:
சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேற்று மாலை வந்தார். அப்போது, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தலைவர் கந்தசாமி தலைமையில், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்கோட்டுவேல், உபதலைவர் சின்னதம்பி , இணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பல இடங்களில் லாரிகள் இல்லாமலேயே ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர். எனவே ஆன்லைனில் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
- 10 ஆண்டுக்கு பின் கடந்த 23-ந் தேதி விமரிசையாக நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, 10 ஆண்டுக்கு பின் கடந்த
23-ந் தேதி விமரிசையாக நடைபெற்றது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் மஞ்சள் நீரா டலும், சக்தி இறக்கம் மற்றும் காப்பு அவிழ்த்தலும் நடை பெற்றது. நேற்றிரவு, மகா பாரத இதிகாசத்தில் குறிப்பி டப் பட்டுள்ளபடி, திரவுபதி அம்மன் அவிழ்ந்த கூந்தல் முடிதல் மற்றும் தருமராஜா பட்டாபிஷேகமும், யாக பூஜை கணபதி ஹோமத்து டன் நடைபெற்றது.
இதில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தர்ம ராஜரும், திரவுபதி அம்ம னும் மலர் மாலை அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 2463 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 2787 கன அடியாக அதிகரித்தது.
- தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியிலும் மிதமான அளவு தண்ணீர் வருகிறது.
இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 2463 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 2787 கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 103.72 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று103.78 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
- 30-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 30-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் அருகில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதாவது, ராசிபுரம்-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் வாழப்பாடி வழியாகவும் (வாழப்பாடி திம்மநாயக்கன்பட்டி சாலை), தம்மம்பட்டி-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் தம்மம்பட்டி-கெங்கவல்லி சாலையை பயன்படுத்தி மஞ்சினி வழியாக ஆத்தூருக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் முடியும் வரை கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் தேவகி தெரிவித்துள்ளார்.
- மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் முடியும் வரை கனரக வாகனங்கள் மாற்றுப்பாதை
- ராசிபுரம்-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் வாழப்பாடி வழி
சேலம்
சேலம் மாவட்டம் மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 30-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் அருகில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதாவது, ராசிபுரம்-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் வாழப்பாடி வழியாகவும் (வாழப்பாடி திம்மநாயக்கன்பட்டி சாலை), தம்மம்பட்டி-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் தம்மம்பட்டி-கெங்கவல்லி சாலையை பயன்படுத்தி மஞ்சினி வழியாக ஆத்தூருக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் முடியும் வரை கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக்கொள்ளு மாறு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் தேவகி தெரிவித்துள்ளார்.
- கள்ளி வகையை சேர்ந்த தாவரம், ‘பிரம்ம கமலம்
- இலையை வெட்டி வைத்தாலே வளரும் தன்மை
வாழப்பாடி:
ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய பிரம்ம கமலம் மலர்கள், வாழப்பாடியில் ஒரு வீட்டு தோட்டத்தில் பூத்து குலுங்கியது. எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையை சேர்ந்த தாவரம், 'பிரம்ம கமலம்' என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இத்தாவரம், இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும், தகவமைப்பும் கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், 'பிரம்ம கமலம்' பூக்கள் சிறப்பு இடத்தை பெற்றுள்ளது.
இலையை வெட்டி வைத்தாலே வளரும் தன்மையை கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை, சமீப காலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர். மேலும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.சேலம் மாவட்டம் வாழப்பாடி சுப்பராயர் தெருவைச் சேர்ந்த லட்சுமி தனபால், பிரம்ம கமலம் செடியை, ஓசூரில் இருந்து வாங்கி வந்து, 2 ஆண்டுகளாக வீட்டு தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.
இதில் தற்போது மலர்கள் பூத்துள்ளது. இந்த மலர்களை காண இப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டினர். மேலும் இந்த பிரம்ம காலம் மலர்களை வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
- சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காய்கறி, பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
- சில கடைகளில் முத்திரை இல்லாத, மறுமுத்திரையிடாத, தரப்படுத்தப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் மற்றும் விட்ட தராசுகள் பயன்படுத்தியது கண்டுபிடுக்கப்பட்டது.
சேலம்:
சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தலைமையில் தொழி லாளர் உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், முருகானந்தம், இளையராஜா, ரமணி, முத்திரை ஆய்வாளர்கள் வாசுகி, சந்திரன் மற்றும் போலீசார் நேற்று சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காய்கறி, பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சில கடை களில் முத்திரை இல்லாத, மறுமுத்திரையிடாத, தரப்படுத்தப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் மற்றும் விட்ட தராசுகள் பயன்படுத்தியது கண்டுபிடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 17 தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அரசு முத்திரை மற்றும் மறுமுத்திரை இல்லாமல் வணிகர்கள் பயன்படுத்திய 27 இரும்பு எடை கற்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ண வேணி கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் இந்த மாதத்தில் இதுவரை 30 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டன. இதில் 16 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் 28 கடைகளில் மற்றும் நிறுவனங்க ளில் ஆய்வு மேற்கொண்ட போது 10 முரண்பாடுகள் கண்டறி யப்பட்டது. இதுதவிர சினிமா தியேட்டர்கள், சுற்றுலா வழிபாட்டு தலங்கள் மற்றும் சிகரெட் பாக்கெட் நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதிகள் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 16 நிறுவனங்களில் 2 முரண் பாடுகள் கண்டறியப்பட்டது.
அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் இதுவரை முத்திரையிடப்ப டாமல் பயன்படுத்தும் எடையளவுகளை அந்தந்த பகுதிகளுக்கான முத்திரை ஆய்வாளர் அலுவலகங் களுக்கு சென்று முத்திரை யிட்டு கொள்ள வேண்டும். எடை அளவுகளை உரிய காலத்துக்குள் மறுமுத்திரை யிடாமல் இருந்தால் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக காரில் சேலம் வந்தனர்.
- டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் மோதி பள்ளத்தில் விழுந்தது.
காடையாம்பட்டி:
பெங்களூருவை சேர்ந்த 5 பேர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக காரில் சேலம் வந்தனர். உறவினரை பார்த்து விட்டு, சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது தீவட்டிப்பட்டி அடுத்த ஜோடிகுளி பகுதியில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் மோதி பள்ளத்தில் விழுந்தது.
கார் மோதிய வேகத்தில் மின்கம்பம் 3 துண்டுகளாக முறிந்து கார் மீது விழுந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா, மர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. நாளையுடன் கோடை விழா நிறைவடையும் நிலையில், பல்வேறு விதமான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்து மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருதால், அலங்கார வளைவுகள் மற்றும் பல்வேறு உருவங்களில் இருந்த மலர்கள் வாடின. இதைய டுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நேற்று வாடிய பூக்கள் அனைத்தையும் அகற்றினர்.
அதற்கு பதிலாக புதிய மலர்கள் கொண்டுவரப்பட்டு, மீண்டும் அலங்கரிக் கப்பட்டது. இதனிடையே, நேற்று மாலை ஏற்காட்டில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செல்லப்பிராணிகள்
கண்காட்சி
கோடைவிழாவின் 7-ம் நாளான இன்று, மலர்கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளதால் ஏற்காடு களை கட்டியுள்ளது. ஏற்காடு அண்ணா பூங்காவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மலர்களை அவர்கள் கண்டு ரசித்தனர். மலர்களால் வடிவ மைக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் முன்பும், வண்ணமயமான மலர்களுக்கு முன்பும் நின்று குடும்பத்துடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் இன்று சைக்கிள் போட்டி, இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய் மற்றும் வீட்டு வளர்ப்பு விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் காவல்துறையை சேர்ந்த நாய்களுக்கான கீழ்படிதல், சாகச காட்சிகள் ஆகியவைகளும் இடம் பெற்றன. தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, நாட்டிய நிகழ்ச்சி, நகைச்சுவை பட்டிமன்றம் மற்றும் இன்னிசை கச்சேரியும் நடத்தப்பட்டது.






