என் மலர்
சேலம்
- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.
- கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயி லின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும்.
சேலம்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயி லின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி யதில் இருந்தே தமிழகத்தின் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து இருந்தது.
அக்னி நட்சத்திரம்
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்தி ரம் தொடங்கியது. அதன் பிறகு மே மாதம் 8-ந்தே திக்கு மேல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மதிய நேரத்தில் வெயில் சுட்டெரித்தது.
சேலத்தில் அதிகபட்சமாக 106 பாரன்ஹீட் வெப்ப நிலை நிலவியது. இதனால் கூலி வேலைக்கு செல் ேவார், தொழிலா ளர்கள், அலுவலக வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டி கள், பாதசாரி கள் கடும் அவதிக்குள்ளா கினர். இர வில் கடும் புழுக்கம் ஏற்பட்ட தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளா கினர்.
இன்றுடன்...
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (29-ந்தேதி) முடிவடைகிறது. இதனால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- காலையில் கடும் வெயிலும், மாலையில் கோடை மழையும் பெய்து வருகிறது.
- அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயிலும், மாலையில் கோடை மழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக கரிய கோவில், ஆனைமடுவு, வீராணம், ஆத்தூர் உள்பட பல பகுதி களில் கனமழை கொட்டி யது. இந்த மழையால் சாலை களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது.தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்ச மாக கரிய கோவிலில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதேபோல், ஆனைமடு 14, வீராணம் 13, ஆத்தூர் 11.2, கெங்கவல்லி 9, தம்மம்பட்டி 7, ஏற்காடு 2.6 மில்லிமீட்டர் என மாவட்டம் முழுவதும் 84.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.
- மேட்டூர் நகராட்சியில் 99 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
- இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சம்பளத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை.
மேட்டூர்:
மேட்டூர் நகராட்சியில் 99 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சம்பளத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை. இந்த சம்பள பணத்தை வழங்க வலியுறுத்தி இன்று காலை வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து நகராட்சி அதிகாரிகள், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்ைத நடத்தி வருகிறார்கள். தொழிலாளர்களின் இந்த போராட்டத்தினால், மேட்டூர் நகர் புறங்களில் குப்பைகள் மலைேபால் தேங்கும் நிைல ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் இதேபோன்று அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டபோது கடந்த வாரம் வெள்ளிக் கிழமைக்குள் சம்பளத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று நகராட்சி நிர்வா கத்தினர் தெரிவித்தனர். ஆனால் கூறியபடி வெள்ளிக்கிழமை (19-ந் தேதி) சம்பள பணம் நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.
இதனால் தான் இன்று மீண்டும் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளதாக தெரி வித்தனர். இந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 3 மாதம் அல்லது 4 மாத ங்களுக்கு ஒரு முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்கள் சம்பளத் தொகையை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், சுவர் இடிந்து விழுந்தது. அதில் செல்வி தலையில் பலத்த காயமடைந்தார்.
- தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதேபோல், சந்தனகிரி பகுதியில் மாரியம்மன், விநாயகர் உள்ளது. இதன் அருகே இருந்த பழமை வாய்ந்த அரசமரம், வேப்பமரம் ஆகியவை நேற்று பெய்த மழையில் கோவில் கலசத்தின் மேல் சாய்ந்தது. இதில் கோவில் சுவர் இடிந்தது. இதனால் பக்தர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து மீண்டு வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.ஆத்தூர் நகரில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆத்தூர் பஸ் நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நேரம் காப்பாளர் அலுவலகமும் மழையால் சேதமடைந்தது.
இதேபோல் தலைவாசல் அருகே உள்ள சார்வாய் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது 40). இவர் ஆடுகள் மேய்த்து வருகிறார். நேற்று மாலை தலைவாசல் பகுதியல் மழை பெய்தது. இதையடுத்து மழைக்கு ஒதுங்குவதற்காக, செல்வி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்த ஹாலோ பிளாக்ஸ் கல்லால் கட்டப்பட்ட வீட்டின் அருகே ஆடுகளுடன் ஒதுங்கியுள்ளார்.
அப்போது, தொடர் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் செல்வி தலையில் பலத்த காயமடைந்தார். ஒரு ஆடு உடல் நசுங்கி பலியானது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜூன் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி வரையிலான காலம் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது.
- கடல் போன்ற பிரம்மாண்டமான நீர் பரப்பில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரிய அளவிலான மீன்களாக சில மாதங்களில் வளர்ச்சியடைந்து, ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு கிடைத்துவருகிறது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களின் பாசனத்துக்கான நீரை வழங்கி, விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக திகழ்வது மேட்டூர் அணை. இந்த அணை மீன் உற்பத்தி மூலமாக, மீனவர்கள் பல ஆயிரம் பேருக்கு வாழ்வளித்து வருகிறது. மேட்டூர் அணை மீன்களுக்கு சுவை அதிகம். கர்நாடகாவுடன் குடகுவில் உற்பத்தியாகும் காவிரி ஒகேனக்கல் வழியாக பல அற்புதமான மூலிகைகளை கடந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. இந்த மூலிகை நிறைந்த நீரில் வளரும் மீன்கள் என்பதால் மேட்டூர் அணை மீன்களுக்கு இயல்பாகவே ருசி அதிகமாக உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனைப் பயன்படுத்தி மேட்டூர் மீன் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாக அணையில் மீன் குஞ்சுகள் விடப்படும். இதை மீன் விதைப்பு என்பார்கள்.
ஜூன் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி வரையிலான காலம் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பரப்பு 53 சதுர மைல் கொண்டது. அது மட்டுமல்ல, அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும்போது, அணையில் தேங்கும் நீரானது அடிபாலாறு தொடங்கி காவிரியில் ஒகேனக்கல் வரையிலும் தேங்கி நிற்கும்.
எனவே, கடல் போன்ற பிரம்மாண்டமான நீர் பரப்பில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரிய அளவிலான மீன்களாக சில மாதங்களில் வளர்ச்சியடைந்து, ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு கிடைத்துவருகிறது.
காவிரி ஆறு வனப்பகுதி வழியாக பாய்ந்து வருவதால், இயற்கையாகவே அதில் மீன்களுக்கு தேவையான சத்துகள், உணவுகள் இருக்கும். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் முன்னர் மேட்டூர் அணையின் கரையோரங்கள், காவிரி கரையோரங்களில் கிராம மக்கள் கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை உட்பட பல்வேறு பயிர்களை பல நூறு ஏக்கருக்கு மேல் நடவு செய்திருப்பர்.
காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, உடனடியாக, பயிர்களை அறுவடை செய்துவிடுவர். அந்த அறுவடை எச்சங்கள் அணை நீரில் மூழ்கிவிடும்போது, அவை மீன்களுக்கு மிகச்சிறந்த உணவாக அமைந்து விடுகிறது.
எனவே, மேட்டூர் அணையில் மீன்கள் செழித்து வளருவதுடன், சுவையானவையாகவும் இருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்திலேயே சுவை மிகுந்த மீன்கள் கிடைப்பது மேட்டூர் அணையில்தான். எனவே, மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் மீன்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வர்.
மீன்பிடி தொழில் அணையில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு மட்டுமல்லாது, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டம் வரை காவிரி கரையோர மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்து வருகிறது.
இந்த சுவையான மீன்கள் மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் முயற்சியால் சமீபத்தில் தமிழக சட்டசபைக்கும் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ.க்கள் மேட்டூர் அணை மீன் உணவை சுவைத்து சாப்பிட்டனர். தற்போது இந்த மீன்கள் கேரளாவுக்கும் செல்கின்றன.
மேட்டூரில் செயல்பட்டு வரும் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில், கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்களின் வளத்தை பெருக்கும் வகையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப் படுகின்றன.
அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்தின் மீன் வளத்துறைக்கும், அண்டை மாநிலத்துக்கும் மீன் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. தற்போது, மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இன முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்யும். அப்போது, மீன் குஞ்சுகளை கண்டறிந்து சேகரித்து வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதனால் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தாய், தந்தை மீன்களை வளர்த்து ஊசி மூலம் ஹார்மோன் செலுத்தப்படுகிறது.
பின்னர், 4-வது நாளில் நுண் மீன் குஞ்சுகள் சேகரிக்கப்பட்டு, 1 மாதத்துக்கு விரலிகளாக வளர்க்கப்படுகின்றன. 15 முதல் 17 நாட்களில் இள மீன் குஞ்சுகளாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கேராளவில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய தேவையான வசதிகள், இடங்கள் இல்லாததால் மேட்டூர் அரசு மின் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட இடைவெளியில் வாங்கிச் செல்கின்றனர். அதன்படி, 15 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால் நுண்மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்துக்கு 6 லட்சம் நுண் குஞ்சுகள், 1.52 லட்சம் இள மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டன என்றனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 2,787 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1,850 கன அடியாக சரிந்தது.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியிலும் மிதமான அளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 2,787 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1,850 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.78 அடியாக உயர்ந்த அணையின் நீர்மட்டம், இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.
- சம்பந்தப்பட்ட கார் 4 மாதங்களுக்கு முன்பு இந்த பட்டறைக்கு டிங்கரிங் வேலைக்காக கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- குடும்ப தகராறு காரணமாக சுகன்யா முதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த ராமநாதபுரம் ரஷ்யா காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 28). இவர் அதே பகுதியில் மிலிட்டரி ரோட்டில் கார் மெக்கானிக் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது தங்கையின் திருமணத்திற்காக கடந்த 22-ந் தேதி பட்டறைக்கு பூட்டு போட்டு விட்டு சென்றுள்ளார்.
திருமணம் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மாணிக்கம் மீண்டும் கார் பட்டறைக்கு வந்தார். அப்போது பட்டறைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து அந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது, காருக்குள் சுமார் 7 வயது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காருக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுவன் யார்? எந்த பகுதியை சேர்ந்தவன்? அவனது பெற்றோர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட கார் 4 மாதங்களுக்கு முன்பு இந்த பட்டறைக்கு டிங்கரிங் வேலைக்காக கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் காருக்குள் சிறுவன் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பட்டறையில் பூட்டி நிறுத்தப்பட்டு இருந்த காரில் சிறுவன் எப்படி வந்தான்? என்றும், அல்லது சிறுவனை யாராவது கொலை செய்து உடலை காருக்குள் வைத்து விட்டு சென்றிருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மீட்கப்பட்ட சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதே இடத்தில் டாக்டர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுபற்றி போலீசார் கூறியதாவது:-
பிணமாக கிடந்த சிறுவன், அதே பகுதியை சேர்ந்த சுகன்யா (27) என்பவரின் மகன் சிலம்பரசன் (7) என அடையாளம் தெரிந்தது. சுகன்யாவுக்கும், கண்ணன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிலம்பரசன் என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர்.
குடும்ப தகராறு காரணமாக சுகன்யா முதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வசித்து வந்த கட்டிட தொழிலாளி வினோத் (31) என்பவருடன் சுகன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் அவர்கள் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கணவன்-மனைவியாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிலம்பரசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவன் கோலாத்து கோம்பையில் உள்ள அவனது தந்தை வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று நாங்கள் தேடவில்லை என சிறுவனின் தாய் சுகன்யா கூறினார். அவர் கூறுவது உண்மையா? என்பது குறித்து அவரிடமும், வினோத்திடமும் விசாரித்து வருகிறோம்.
மேலும், நண்பர்களுடன் சிலம்பரசன் விளையாடியபோது, காருக்குள் ஏறிவிட்டு அதன்பிறகு வெளியே வரமுடியாமல் மூச்சு திணறி இறந்தானா? என்ற கோணத்திலும் கார் பட்டறை உரிமையாளரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் சிறுவன் எப்படி இறந்தான்? என்ற முழு விவரம் தெரியவரும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
- தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
- அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
சேலம்:
சேலம் எருமாபாளையம் ராமானுஜர் கோவில் செல்லும் வழியில் ஜெயகோபால் என்பவருக்கு சொந்தமான காட்டன்மில் உள்ளது. இந்த மில்லில் பஞ்சு மற்றும் நூல் குவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு சேலத்தில் தொடர் மழை பெய்தபோது மின்னல் மற்றும் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது. அப்போது காட்டன் மில் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. அவுட்டர் மிஷின் மீது மின்னல் தாக்கியதில், அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, மில்லில் உள்பகுதியில் இருந்த பால்சீலிங் தீப்பி டித்தது. இந்த தீ குபு, குபுவென எரிய தொடங்கியது. இதனால் ஆலை முழுவதும் கரும்புகை மூட்டம் நிலவியது.
இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உதவி மாவட்ட அதிகாரி சிவகுமார், தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்ட காரணத்தினால், தீ ஆலையில் உள்ள பஞ்சு மற்றும் நூல்களில் பரவாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம். சி. காலனி பகுதி சேர்ந்தவர் ஹரி (வயது 50). வெள்ளி வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மது குடிக்கும் பழக்கம் உள்ள ஹரி இன்று காலை சீலநா யக்கன்பட்டி அடுத்த சிவ சக்தி நகர் நேதாஜி தெருவில் உள்ள ஒரு சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரி யின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பஸ் சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது மோதியது
- இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சேலம்
சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள ஓமலூர் சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு வந்த அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இருந்த வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கண்காணிப்பு கேம ராக்கள் மற்றும் ரகசிய விசாரணை
- இரவு நேரங்களில் யாரும் காவலர்கள் இல்லை
தாரமங்கலம்
தாரமங்கலம் ஊர்ச்சா வடி அருகில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட 3 சிலைகளும், அரை அடி உயரம் கொண்ட 5 சிலைகளும் உள்ளன.
கடந்த 21-ந்தேதி கோவில் பூசாரி குமரவேல் வழக்கம்போல் பூஜைகள் முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலில் கவலாளிகள் யாரும் இல்லாத நிலையை பயன்ப டுத்தி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே இருந்த 7 சிலைகளை திருடி சென்றனர்.
கருடாழ்வார் சிலை மட்டும் தப்பியது. மறுநாள் கோவிலுக்கு வந்த பூசாரி குமரவேல் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.கொள்ளையர்களை பிடிக்கவும், சிலைகளை மீட்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, தாரமங்க லம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
தாரமங்கலம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேம ராக்கள் மற்றும் ரகசிய விசாரணைகள் மூலம் சிலை திருடியவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த 7 ஐம்பொன் சிலைகளையும் மீட்டனர்.விசாரணையில் அவர் நங்கவள்ளி அருகிலுள்ள பெரியசோரகை கிராமம் குள்ளானுர் பகுதியை சேர்ந்த போலி சாமியார் சக்திவேல் (50) என்பது தெரியவந்தது.கைதான போலி சாமி யார் சக்திவேல் போலீசாரி டம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் திருமணம் முடிந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தேன். திருமண வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நான் ஆன்மிக பணியில் ஈடுபாடு கொண்டு சாமியாரானானேன். கடந்த 18 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள எனது வீட்டில் பல்வேறு சாமி உருவ சிலைகளை வைத்து அமாவாசை. பவுர்ணமி தினங்களில் பூஜைகள் செய்து வந்தேன். பொதுமக்களிடம் பில்லி. சூனியம். மாந்திரிகம் மற்றும் குழந்தைபேறு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறியாதால் என்னிடம் வந்து நிறைய பேர் அருள்வாக்கு பெற்று சென்றனர்.அப்பகுதி ஆண்களிடம் ஆண்மை சக்தி பெறவும், ஆண்மை சக்தி இழக்கவும் பூஜைகள் செய்து வருமானம் பெற்று வந்துள்ளேன். மேலும் நான் இந்த பகுதியில் ஒரு கோவில் கோவில் கட்ட திட்டமிட்டு வந்தேன். அதற்கு பணம் திரட்ட எதாவது கோவில் சிலைகளை திருட பல்வேறு இடங்களில் நோட்டமிட்டு வந்தேன். அப்போது நான் இந்த பெருமாள் கோவிலுக்கு வந்து பகல் நேரங்களில் படுத்து ஓய்வு எடுத்து கொண்டும் சிலைகள் இருப்பதையும் நோட்டமிட்டு வந்தேன்.
தனால் இரவு நேரங்களில் யாரும் காவலர்கள் இல்லை என்பதை அறிந்து சம்பவத்தன்று நள்ளிரவு கோவிலுக்கு வந்து சிறிய கடப்பாரை. சுத்தியல் கொண்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று 7 சிலைகளையும் எடுத்து சென்று என்னுடைய வீட்டில் பதுக்கி வைத்து இருந்தேன் இந்நிலையில் நேற்று அதிரடியாக வீட்டிற்கு வந்த போலீசார் என்னை பிடித்து கொண்டு வீட்டில் இருந்த சிலைகளை யும் மீட்டு வந்துள்ளனர் என்று கூறினார்.காணாமல் போன கோவில் சிலைகளை மீட்ட தனிப்படையினர் போலீஸ் நிலையத்தில் வைத்து கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்க ளிடம் சிலைகளை ஒப்படை க்கும் நடைமுறைகளை மேற்கொண்டனர். அப்போது இந்த தனிப்படை யில் தீவிரமாக செயல்பட்டு சிலைகளை மீட்ட போலீசா ரை எஸ்.பி. சிவக்குமார் வெகுவாக பாராட்டினார்.அதனை தொடர்ந்து தாரமங்கலம் நகராட்சி மன்ற தலைவர் குணசேக ரன். ஊர் நாட்டான்மைகாரர் இனியன் ஆகியோர் தலை மையில் கோவில் சிலை களை உடனடியாக மீட்டு கொடுத்த மாவட்ட கண்கா ணிப்பாளர் சிவக்குமார். ஓமலூர் டி எஸ் பி சங்கீதா. தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பி யன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் முரளிதரன். அழகுதுரை.தனிபிரிவு போலீசார் பழனிசாமி. சிவப்பிரகாசம் உள்ளிட்ட அனைத்து போலீசாருக்கும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
- நிர்மலா (வயது 26). இவர் மும்பையில் போலி நகை கொடுத்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை மும்பை பாந்த்ரா போலீசார் தேடி வந்தனர்.
- நிர்மலா சேலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சேலம் வந்த போலீசார் அன்னதானப்பட்டி போலீசார் உதவியுடன் நிர்மலாவை கைது செய்தனர்.
சேலம்:
சேலம் பாதுகாப்பட்டி சண்முகா நகர் அடுத்த ஜவகர் நகர் பகுதி சேர்ந்த வெங்கடேசன். இவரது மகள் நாகமணி என்கிற நிர்மலா (வயது 26). இவர் மும்பையில் போலி நகை கொடுத்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை மும்பை பாந்த்ரா போலீசார் தேடி வந்தனர்.
நிர்மலா சேலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சேலம் வந்த போலீ சார் அன்னதானப்பட்டி போலீசார் உதவியுடன் நிர்மலாவை கைது செய்தனர். பின்பு அவரிடம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசா ரணை நடத்தி னர். விசா ரணையில், நிர்மலா தனது கூட்டாளிக ளுடன் மும்பை பாந்த்ரா பகுதியில் பகுதியில் உள்ள நகை கடையில் பழைய நகையை மாற்றி புது நகை எடுப்பது போல் காண்பித்து கவரிங் நகையை கொடுத்து மோசடி யில் ஈடுபட்டது தெரிய வந்தது.
நகைக்கடை உரிமையா ளர் கொடுத்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்து நிர்மலாவின் கூட்டாளி களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சேலத்திற்கு வந்து நிர்ம லாவை கைது செய்துள்ள னர். இதை தொடர்ந்து நிர்மலாவை போலீசார் சேலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 4-ல் ஆஜர் படுத்தினர். இதை தொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் நிர்மலாவை மும்பைக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.






