என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem district news எஸ். பி தலைமையிலான தனிப்படை அதிரடி S. Individual action led by B"

    • கண்காணிப்பு கேம ராக்கள் மற்றும் ரகசிய விசாரணை
    • இரவு நேரங்களில் யாரும் காவலர்கள் இல்லை

    தாரமங்கலம்

    தாரமங்கலம் ஊர்ச்சா வடி அருகில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட 3 சிலைகளும், அரை அடி உயரம் கொண்ட 5 சிலைகளும் உள்ளன.

    கடந்த 21-ந்தேதி கோவில் பூசாரி குமரவேல் வழக்கம்போல் பூஜைகள் முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலில் கவலாளிகள் யாரும் இல்லாத நிலையை பயன்ப டுத்தி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே இருந்த 7 சிலைகளை திருடி சென்றனர்.

    கருடாழ்வார் சிலை மட்டும் தப்பியது. மறுநாள் கோவிலுக்கு வந்த பூசாரி குமரவேல் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.கொள்ளையர்களை பிடிக்கவும், சிலைகளை மீட்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, தாரமங்க லம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

    தாரமங்கலம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேம ராக்கள் மற்றும் ரகசிய விசாரணைகள் மூலம் சிலை திருடியவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த 7 ஐம்பொன் சிலைகளையும் மீட்டனர்.விசாரணையில் அவர் நங்கவள்ளி அருகிலுள்ள பெரியசோரகை கிராமம் குள்ளானுர் பகுதியை சேர்ந்த போலி சாமியார் சக்திவேல் (50) என்பது தெரியவந்தது.கைதான போலி சாமி யார் சக்திவேல் போலீசாரி டம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் திருமணம் முடிந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தேன். திருமண வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நான் ஆன்மிக பணியில் ஈடுபாடு கொண்டு சாமியாரானானேன். கடந்த 18 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள எனது வீட்டில் பல்வேறு சாமி உருவ சிலைகளை வைத்து அமாவாசை. பவுர்ணமி தினங்களில் பூஜைகள் செய்து வந்தேன். பொதுமக்களிடம் பில்லி. சூனியம். மாந்திரிகம் மற்றும் குழந்தைபேறு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறியாதால் என்னிடம் வந்து நிறைய பேர் அருள்வாக்கு பெற்று சென்றனர்.அப்பகுதி ஆண்களிடம் ஆண்மை சக்தி பெறவும், ஆண்மை சக்தி இழக்கவும் பூஜைகள் செய்து வருமானம் பெற்று வந்துள்ளேன். மேலும் நான் இந்த பகுதியில் ஒரு கோவில் கோவில் கட்ட திட்டமிட்டு வந்தேன். அதற்கு பணம் திரட்ட எதாவது கோவில் சிலைகளை திருட பல்வேறு இடங்களில் நோட்டமிட்டு வந்தேன். அப்போது நான் இந்த பெருமாள் கோவிலுக்கு வந்து பகல் நேரங்களில் படுத்து ஓய்வு எடுத்து கொண்டும் சிலைகள் இருப்பதையும் நோட்டமிட்டு வந்தேன்.

    தனால் இரவு நேரங்களில் யாரும் காவலர்கள் இல்லை என்பதை அறிந்து சம்பவத்தன்று நள்ளிரவு கோவிலுக்கு வந்து சிறிய கடப்பாரை. சுத்தியல் கொண்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று 7 சிலைகளையும் எடுத்து சென்று என்னுடைய வீட்டில் பதுக்கி வைத்து இருந்தேன் இந்நிலையில் நேற்று அதிரடியாக வீட்டிற்கு வந்த போலீசார் என்னை பிடித்து கொண்டு வீட்டில் இருந்த சிலைகளை யும் மீட்டு வந்துள்ளனர் என்று கூறினார்.காணாமல் போன கோவில் சிலைகளை மீட்ட தனிப்படையினர் போலீஸ் நிலையத்தில் வைத்து கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்க ளிடம் சிலைகளை ஒப்படை க்கும் நடைமுறைகளை மேற்கொண்டனர். அப்போது இந்த தனிப்படை யில் தீவிரமாக செயல்பட்டு சிலைகளை மீட்ட போலீசா ரை எஸ்.பி. சிவக்குமார் வெகுவாக பாராட்டினார்.அதனை தொடர்ந்து தாரமங்கலம் நகராட்சி மன்ற தலைவர் குணசேக ரன். ஊர் நாட்டான்மைகாரர் இனியன் ஆகியோர் தலை மையில் கோவில் சிலை களை உடனடியாக மீட்டு கொடுத்த மாவட்ட கண்கா ணிப்பாளர் சிவக்குமார். ஓமலூர் டி எஸ் பி சங்கீதா. தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பி யன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் முரளிதரன். அழகுதுரை.தனிபிரிவு போலீசார் பழனிசாமி. சிவப்பிரகாசம் உள்ளிட்ட அனைத்து போலீசாருக்கும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

    ×