என் மலர்
நீங்கள் தேடியது "மின் கம்பத்தில் மோதி"
- சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக காரில் சேலம் வந்தனர்.
- டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் மோதி பள்ளத்தில் விழுந்தது.
காடையாம்பட்டி:
பெங்களூருவை சேர்ந்த 5 பேர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக காரில் சேலம் வந்தனர். உறவினரை பார்த்து விட்டு, சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது தீவட்டிப்பட்டி அடுத்த ஜோடிகுளி பகுதியில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் மோதி பள்ளத்தில் விழுந்தது.
கார் மோதிய வேகத்தில் மின்கம்பம் 3 துண்டுகளாக முறிந்து கார் மீது விழுந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பலமாக மோதியது.
- கார்த்திக் தூக்கி வீசப்பட்டு உடலில் படுகாயங்களுடன் சாலையில் கிடந்தார்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணி இந்திராநகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). இவர் கூத்தம்பூண்டி ரைஸ் மில் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே உணவகம் ஒன்றை நடத்தி கொண்டு அங்கு குடியிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திக் சத்தியமங்கலம்-பவானி சாலையில் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நல்லிகவுண்ட ன்புதூர் பஸ் நிறுத்தத்திற்கு அடுத்துள்ள வளைவில் சென்ற போது திடீரென கார்த்திக் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கி ள் நிலை தடுமாறி சாலை யோரம் இருந்த மின் கம்பத்தில் பலமாக மோதியது.
இதில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டு உடலில் படுகாயங்களுடன் சாலையில் கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் தனி யார் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கார்த்திக்கை மீட்டு ஆப்பக்கூடலில் உள்ள தனியார் மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச் சைக்காக அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்து போன கார்த்திக் என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.






