என் மலர்
ராமநாதபுரம்
- செய்யது ஹமீதா கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.
கீழக்கரை
முகம்மது சதக் அறக்கட்டளையின் பொன் விழாவினை முன்னிட்டு கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் தவசலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஹமிதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாசர் வாழ்த்த பேசினார்.
கீழக்கரை அல்பைனா பள்ளி ஆசிரியை முகமது ஜெய்லானி, சாயல்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மொத்தம் 50 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ், பொன்விழா கேடயம் ஆகியவை வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார். பேராசிரியை ஜக்கினா ஆமினா, சுபேர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.
- முழுமையாக இடிந்துவிழும் முன்பு கிறிஸ்தவ தேவாலாய சீரமைப்பை தொடங்க வேண்டும்.
- பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத் துள்ள தனுஷ்கோடி இலங் கைக்கு மிகவும் குறுகிய தொலைவில் உள்ளது. 1910-ம் ஆண்டு காலகட்டத் தில் மீன்பிடி தொழில் அதிக ளவில் இருந்து வந்தது. இதன் காரணமாக இந்திய இலங்கை பகுதியில் வணிக கப்பல்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்த ஆங்கிலேயர் கள் திட்டமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, 1914 ஆம் ஆண்டு பாம்பன் கால்வாய் பகுதியில் ரெயில் பாலம் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக் கப்பட்டது. இதன் பின்னர் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கி யது. இதன் காரணமாக தனுஷ்கோடி மிகப்பெரிய அளவிலான துறைமுக நக ரமாக மாறியது.
50 ஆண்டுகள் இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் கள் போக்குவரத்தில் அதிக ளவில் வியாபாரம் நடை பெற்று வந்தது. 1910-ம் ஆண்டு காலகட்டத்தில் தனுஷ் கடியில் கிறிஸ்தவ தேவாலாயம் கட்டப்பட்டது. 1964 ஆண்டு ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக தனுஷ்கோடி துறைமுக நகரம் சேதமடைந்தது.இதில், தேவாலாயம், ரெயில் நிலை யம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களும் தரை மட்டமானது.
தனுஷ்கோடியை சீர மைக்க முயன்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தனுஷ்கோடி யின் இயற்கை அழகை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ராமேசு வரம் வருகை தருகிறார்கள். அவர்கள் அனைவரும் முகுந்தராயர் சந்திரம் வரை சென்று அங்கிருந்த கடற் கரை வாகனங்களில் சென்று கடற்கரையின் பரந்து விரிந்த அழகை பார்த்து ரசித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் 50 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கப்பட்டது. ராமேசுவரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தடையின்றி தனுஷ்கோடி வரை சென்று வந்தனர். இதன் காரணமாக ஆண்டுக்கு 2 கோடி பேர் வந்து செல்லும் சுற்றுலா இடமாக தனுஷ்கோடி மாறி யது.
தனுஷ்கோடியை பழமை மாறமல் ரூ.5 கோடி மதிப் பீட்டில் தேவாலாயம் புதுப் பிபித்தல், சுற்றுலா பயணிக ளுக்கு தேவையான அடிப் படை கட்டமைப்பு களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தனுஷ்கோடி பகுதியை சீரமைக்க மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணி களை மேற்கொண்டு வரு கின்றனர்.
தேவாலாயம் தொடர்ந்து 80 சதவீதம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து சூறைக்காற்று வீசுவதால் முழுமையாக சேதமடைவதற்குள் பழமை மாறாமல் புதுபிக்க பணி களை விரைந்து தொடங்கிட வேண்டும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை கைது செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக் டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை கிராமத்தை சேர்ந்த வர் அஸ்லாம் மனைவி அல் ஜாமைமா(36). கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். உசிலங் காட்டு வலசை கிராமத்தை சேர்ந்தவர் மருங்கப்பன் மகன் ராஜசேகர்(36), அவர் அல்ஜாமைமா வீட்டுக்கு சென்று உங்களது கணவர் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறினார். அந்த பணத்தை உடனே வட்டியு டன் கொடுக்க வேண்டும் என்று கூறி அவரை மிரட்டி வீட்டின் கதவை பூட்டினார். அவருடைய குழந்தைகள் இருவரையும் பிடித்து வைத்துக்கொண்டு பணம் தந்தால் மட்டுமே விடுவிப்ப தாகவும் கூறியதாக தெரி கிறது.
இதையடுத்து அல்ஜாமை மா ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க ராஜிடம் புகார் அளித்தார். அவரது உத்திரவின் பேரில் உச்சிப்புளி சப்-இன்ஸ்பெக் டர் முனியாண்டி வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.
- தடை நீக்கத்திற்கு பிறகு கடல்பாசி சேகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- புயல், கடல் சீற்றம் உள்ள காலங்களில் பாசிகளை சேகரிப்பது சிரமமாக இருக்கும் என்றனர்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட் டத்தில் கடல்பாசிகள் சேகரிப்பதற்கான தடை நீக்கத்திற்கு பிறகு தற்போது கடல்பாசிகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடற்பாசிகள் 180 மீட்டர் வரையிலான ஆழ்கடல் பகுதிகள், பாறைபகுதிகள், பவளப்பாறை பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரை பகுதிகள், குஜராத், லட்சத்தீவு, அந்த மான் நிகோபார் கடலோர பகுதிகளில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 1,153 வகை கடற்பாசிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கடற்பாசிகளில் 60 வகைகள் வணிக முக்கி யத்துவம் பெற்றுள்ளன. இவைகள் உணவு , மருந்து பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன.
தமிழ்நாட்டில் ராமேசு வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான 1,863 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள கடல்பகுதிகளில் சுமார் 75 ஆயிரத்து 373 டன் கடற்பாசிகள் இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. இந்த கடற்பாசிகளை சேகரிக்கும் தொழிலில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிரா மங்களை சேர்ந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மண்டபம், தோணித்துறை, வேதாளை, சீனியப்பா தர்கா ஆகிய கடலோர பகுதிகளில் ஹப்பா பைகஸ் எனப்படும் கடற் பாசிகள் சுயஉதவி குழுக்கள் மூலம் கடலோர பகுதியில் செயற்கை முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதுதவிர கடலில் தானாகவே விளையும் சர்காஸம் எனப்படும் கட்டாக் கோரைபாசிகள் சேகரிப்பும் அதிக அளவில் நடந்து வருகிறது.
இந்த வகை பாசிகள் ஆழ்கடலில் பாறைகள் இருக்கும் பகுதியில் வளரு கின்றன. கடல் நீரோட்டம் மற்றும் கடல் அலைகள் அதிகமாக இருக்கும்போது வேருடன் பிடுங்கப்பட்டு இவைகள் கரைக்கு வந்து சேருகின்றன. இதுதவிர மீனவர்களும் நாட்டுபடகில் சென்று ஆழ்கடலில் முத்து குளிப்பதைபோல இந்த வகை பாசிகளை சேகரிக் கின்றனர்.
இதனை கடற்கரை பகுதிகளில் நன்றாக உலர வைத்து ஒரு டன்னிற்கு
ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இந்த பணிகளில் பெண்கள் அதிக ளவில் ஈடுபட்டு வரு கின்றனர்.
சர்காஸம் வகை கடற்பாசியில் இருந்து சோடியம் அல்ஜினேட் என்ற வேதிப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இது டெக்ஸ்டைல் தொழிலில் சாயம் சேர்க்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர மருத்துவம், உணவுப்பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப் படுகிறது.
இதுகுறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறுகையில், கடலோர பகுதிகளில் போதிய மீன்கள் கிடைக்காததால் குறைந்த வருமானமே கிடைக்கிறது. இந்த நிலையில் தற்போது கடல்பாசிகளை சேகரிக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கிறது. புயல், கடல் சீற்றம் உள்ள காலங்களில் பாசிகளை சேகரிப்பது சிரமமாக இருக்கும் என்றனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா பணிகள் தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வழமாவவூரில் கடந்த 2-ந்தேதி மீன்வளத்துறையின் மூலம் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி முருகன் ஆகியோர் ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் மூலம் 6 மாவட்ட மீனவமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
- கிராமங்களில் காவல் துறையின் அனுமதி யின்றி ஒலிபெருக்கி அமைக்க கூடாது.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாளை மறுநாள் 11-ந் தேதி இமானுவேல் சேகரன் நினைஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி கமுதி-கோட்டை மேட்டில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் வாடகை வாகனம், ஒலிபெருக்கி உரிமையா ளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், அபுதெல்கா விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வாடகை வாகன உரிமையாளர்கள், ஒலிபெருக்கி, பிளக்ஸ் பேனர் அச்சக உரிமையா ளர்கள், பேன்சி ஸ்டோர் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கமுதியை சுற்றியுள்ள கிராமங்களில் காவல் துறையின் அனுமதி யின்றி ஒலிபெருக்கி அமைக்க கூடாது, சாதி மோதல்களை தூண்டும் வகையில் தலைவர்களின் புகைப்படங்கள், வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை வைக்கக்கூடாது, வாடகை ஆட்டோக்கள் அத்தியா வசிய தேவைகளை தவிர்த்து, நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு இயக்க ஆட்ட உரிமையாளர் களுக்கு அனுமதி இல்லை, இளைஞர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் பேன்சி ஸ்டோர்களில் முகமூடி விற்க கூடாது என அறிவறுத்தப்பட்டது.
மேலும் அனுமதிக்கப் பட்ட வழித்தடத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும், மேற்கூரைகளில் பயணிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
- வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.
- விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.
அதேபோல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட இடங்களுக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமாகவும், இதர நாட்களில் வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.
அந்த வகையில், ராமேசுவரத்திற்கு விடுமுறை நாட்களில் குறைந்தது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை இருக்கும். இதனால் வியாபாரம் அதிகளவில் காணப்படும். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.
இந்நிலையில், தமிழகத்தில் காலாண்டு தேர்வு வருகிற 17-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் மிகுவும் குறைந்தே காணப்பட்டது.
அக்னி தீர்த்த கடல், கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடல், தரிசனம் செய்ய நீண்ட வரிசை என்று எதுவும் இல்லாமல் காணப்பட்டது. அதிலும் இன்று வந்த அதிக அளவிலான பக்தர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாகவும், தேர்வு முடிந்த பின்னரே பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்படும் என தெரிவித்தார். மேலும் பூஜை பொருட்கள், கலைப்பொருட்கள் விற்பனையும் பெரிதும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக் கப்படுவார்கள்.
ராமநாதபுரம்
பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி தியாகி இமானு வேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்ப டுவதையொட்டி பாது காப்பு பணியில் 8 ஆயி ரம் போலீசார் ஈடுபடுத் தப்பட உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானு வேல் சேகரன் நினைவு தினம் நாளை மறுநாள் (11- ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி மாவட்டம் முழுவதும் விரி வான பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3 போலீஸ் டி.ஐ.ஜி.க்கள், 25 போலீஸ் சூப்பிரண்டுகள், 30 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 70 துணை சூப்பிரண்டுகள் மற்றும் உ களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்று கண்டறியப் பட்ட 166 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தடையை மீறி யாரும் வாகனங்களில் செல்லவோ, வரவோ கூடாது. இதனை மீறி சென்றால் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விழா நடைபெறும் பகுதி உள்ளிட்ட பரமக்குடி முழுவதும் 200 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் வீடியோ காமிரா மூலம் வாகனங்க ளில் வருபவர்கள், வாக னங்களில் இருப்பவர்கள் பதிவு செய்து கண்கா ணிக்கப்பட உள்ளனர். நினைவிடத்திற்கு எக் காரணம் கொண்டு யாரும் இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது. இதனை மீறி யாராவது வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட வர்கள் என கண்டறியப்பட்ட 350 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஓராண்டுக்கு குற்ற செயலில் ஈடுபடமாட் டோம் என்ற உறுதிமொழி பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக் கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
- மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக சூறைகாற்று வீசி வருகிறது. இன்றும் கடற்பகுதியில் காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பு இருக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- சந்தேகத்திற்கு இடமாக கடற்கரையில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
- போதைப் பொருள் கடத்தலில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல் வழியாக எளிதில் இலங்கை பகுதியை சென்றடையலாம் என்பதால் இங்கிருந்து மஞ்சள், பீடி இலைகள், கஞ்சா உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் சமீபத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தல்காரர்கள் போலீசாரை கண்டதும் கடலில் தூக்கி வீசிச்சென்ற சம்பவமும் நடந்தது. இதையடுத்து கடலோர பகுதிகளில் இந்திய கடற்படையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து, வேதாளை கடற்கரை பகுதியில் டி.எஸ்.பி. உமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக கடற்கரையில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்து பார்சலை பிரித்து சோதனையிட்டபோது மெத்தா பெட்டமென் என்ற விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்திருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரிடமும் விசாரணை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த நாகுகுமார், சக்திவேல் என்பதும், இவர்கள் சென்னையில் இருந்து இலங்கை கடத்துவதற்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 6 கோடி ஆகும். ஐஸ் வகை போதை பொருளான இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? மேலும் இந்த போதைப் பொருள் கடத்தலில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேதாளையில் சமீப காலமாக போதைப்பொருள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் நடை பெற்று வருவது குறிப்பி டத்தக்கது.
- முதுகுளத்தூர், மானாமதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கண்ணன்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் சுப்பையா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. கண்ணன். ராதை வேடமிட்ட சிறுவர் சிறுமிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் செல்லையா, மணி, செந்தில் கண்ணன், சிவமுருகேசன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கவுன்சிலர் சத்தியநாதன், கா.வினோத்குமார், முத்துமணி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தரபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் குழந்தை கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. கோவில் முன்பு நூற்றுக்கணக்கான குழந்தைகள் ராதை கிருஷ்ணன் வேடமிட்டு கோலாட்டம் ஆடினார்கள். ஸ்வாமி வேடத்தில் வந்த குழந்தைகள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் சாஸ்தாநகர், அழகர் கோவில் தெரு, ெரயில்வே காலணி மற்றும் கொன்னக்குளம், வேதியேரேந்தல், செய்களத்தூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
- தொல்லியல் தடயங்களை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் என ஆய்வாளர் வலியுறுத்தினார்.
- 7-ம் வகுப்பு மாணவி ம.அபிநயாஸ்ரீ நன்றி கூறினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகிலுள்ள கொடிப்பங்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி நடந்தது.
பள்ளித் தலைமை யாசிரியை முத்துலட்சுமி தலைமை தாங்கினார். தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். எட்டாம் வகுப்பு மாணவன் செங்கதிர் செல்வன் வரவேற்றார்.
ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கி ணைப்பாளரும் தொல்லி யல் ஆய்வாளருமான ராஜ குரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில் நீண்ட கடல் பகுதி உள்ளதால் இயற்கை துறை முகங்களும் உப்பங்கழி களும் நிறைந்து உள்ளது. இங்கு, ரோமானியர், யூதர், சீனர் உள்ளிட்ட வெளி நாட்டு வணிகர்கள் வணிகம் செய்துள்ளனர். அஞ்சு வண்ணம் எனும் இஸ்லா மியர் தலைமையிலான வணிகக் குழுவினர் தீர்த்தாண்ட தானம் கோயில் மண்டபத்தை பராமரித்தாக கல்வெட்டு செய்தி உள்ளது. ஆனால் இன்று அம்மண்டபமும் கல்வெட்டும் அழிந்து சேதமடைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்கி முழு வீச்சில் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தொல்லியலை பள்ளி மாணவர்கள் கற்றுக் கொண்டு, உள்ளூரில் உள்ள தொல்லியல் தட யங்களை அடையாளம் கண்டு பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து நடந்த தொல் பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகளுடன் உலகப் பாரம்பரியச் சின்னங்கள், குடைவரைக் கோயில்கள், கற்றளிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.7-ம் வகுப்பு மாணவி ம.அபிநயாஸ்ரீ நன்றி கூறினார்.
- முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
- தி.மு.க. அயலக பொறியாளர் அணி செயலாளர் முத்துப்பேட்டை சபரிவாசன் வாழ்த்து தெரி வித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற வக்கீல், தி.மு.க. மாநில மாணவரணி தலைவர் இரா.ராஜீவ்காந்தி. இவர் தி.மு.க. செய்தி தொடர்பா ளராகவும் இருந்து வருகி றார்.
தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை 2.0 என்ற பெயரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இதனை சிறப்பாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மாநில இளைஞரணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னி லையில் இரா.ராஜீவ் காந்திக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்த நிலையில் நேற்று இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நினைவுப்பரிசை வழங்கி வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தார்.
மண்டபம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் (மேற்கு) வாலாந்தரவை பிரவீன் குமார் (மத்திய), தேர்போகி முத்துக்குமார், (கிழக்கு), புதுமடம் நிலோபர் கான் உள்ளிட்ட நிர்வாகிகளும், மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல் தி.மு.க. அயலக பொறியாளர் அணி செயலாளர் முத்துப்பேட்டை சபரிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.






