இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக் டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.
இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
Published on

மண்டபம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை கிராமத்தை சேர்ந்த வர் அஸ்லாம் மனைவி அல் ஜாமைமா(36). கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். உசிலங் காட்டு வலசை கிராமத்தை சேர்ந்தவர் மருங்கப்பன் மகன் ராஜசேகர்(36), அவர் அல்ஜாமைமா வீட்டுக்கு சென்று உங்களது கணவர் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறினார். அந்த பணத்தை உடனே வட்டியு டன் கொடுக்க வேண்டும் என்று கூறி அவரை மிரட்டி வீட்டின் கதவை பூட்டினார். அவருடைய குழந்தைகள் இருவரையும் பிடித்து வைத்துக்கொண்டு பணம் தந்தால் மட்டுமே விடுவிப்ப தாகவும் கூறியதாக தெரி கிறது.

இதையடுத்து அல்ஜாமை மா ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க ராஜிடம் புகார் அளித்தார். அவரது உத்திரவின் பேரில் உச்சிப்புளி சப்-இன்ஸ்பெக் டர் முனியாண்டி வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com