என் மலர்
ராமநாதபுரம்
- ராமேசுவரத்தில் 300 விசைப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்றனர்.
- வருகிற 15-ந்தேதி தடைக்காலம் தொடங்குகிறது.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்ப டகுகள் உள்ளன. கிறிஸ்த வர்களின் தவக்கா லத்தை யொட்டி ஏராளமான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசு வரம் மீனவர்களுக்கு அடிக்கடி நெருக்கடி கொடுத்து வருவதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
தினமும் குறைவான அளவிலே மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். ராமேசு வரத்தில் இருந்து 300 விசைப்படகுகள் மட்டும் இன்று மீன் பிடிக்க சென்றன.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதி க்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் வருகிற 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கு கிறது. ஏப்ரல் 15-ந்தேதி ஜூன் 15-ந் ேததி வரை மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போது ஆழ்கடல் சென்று மீன் பி டிக்க விசைப் படகு மீனவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
ஜூன் 16-ந்தேதிக்கு பிறகே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். அதுவரை நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலில் மீன்பிடித்து வருவார்கள். அந்த நேரத்திலும் மீனவர்க ளுக்கு வருவாய் இருக்காது.
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் தேவதாஸ் கூறும்போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு அதிக தொல்லை கொடுத்து வருவதாலும், மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதாலும் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது குறைந்துவிட்டது என்றார்.
- கொலையுண்ட முகேசின் உறவினர்கள் ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- முகேசை கொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தினர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவிலில் கடந்த 5-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். ராமேசுவரம் புதுரோடு ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த முகேஷ்(வயது24) என்பவரும் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வந்தார்.
அவர் என்.எஸ்.கே.வீதியில் சென்றபோது அவர் வைத்திருந்த செல்போன் தவறி கீழே விழுந்து விட்டது. அதனை மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த முகேஷ் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த வாலிபர்களிடம் தனது செல்போனை எடுத்திருந்தால் கொடுத்து விடும்படி கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், முகேசை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவரை ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து ராமேசுவரம் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷை தாக்கிய மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பாலமுருகன்(24) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ராம்கி(20), கணேஷ்(25), ராம்குமார்(25), புஷ்பராஜ்(18), ராஜகுரு(20), இன்னொரு பாலமுருகன் (25), ரமேஷ், பாரதிராஜா, வினோத்குமார் உள்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலையுண்ட முகேசின் உறவினர்கள் ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முகேசை கொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கீழக்கரையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
- இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கீழக்கரை
வுமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரையில் நகர தலைவர் முபினா தலைமையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி ஆகியோர் கலந்து கொண்டனர். வுமன் இந்தியா மூவ்மெண்ட் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் மற்றும் மாவட்ட செயலாளர் சித்தி நிஷா ஆகியோர் பேசினர். ஜகாங்கீர் அரூஷியின் பிரார்த்தனையோடு இப்தார் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் காதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கீழக்கரை நகர துணைத் தலைவர் ரீகான் நன்றி கூறினார்.
- ராமநாதபுரத்தில் சிறப்பு ஓமியோபதி மருத்துவ முகாம் நடந்தது.
- ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ஆயிர வைசிய மகா ஜன சபை மற்றும் ஆரோக்கியா ஓமியோ கேர் மருத்துவமனை இணைந்து இலவச சிறப்பு ஓமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆயிர வைசிய மகாஜன சங்க பொதுச் செயலாளர்கள் ஜெயக்குமார், நாகராஜன், தலைவர் ஜெயராமன், தொழிலாளர்கள் சசிகுமார் செந்தில்குமார் ஆகியோர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் வித்யா தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர்.
- கமுதியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார்
- ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.
பசும்பொன்
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கூடும் இடங்களில் நீர்மோர் பந்தல் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பஸ் நிலையம் முன்பு நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி, பப்பாளி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, முன்னாள் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் நேதாஜி சரவணன், காங்கிரஸ் வடக்கு வட்டார தலைவர் ஆதி, தி.மு.க. இளைஞரணி ஆதி ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் இதில் முத்து ராமலிங்கம், காங்கிரஸ் நகர தலைவர் சிதம்பர ராஜன், வழக்கறிஞர் நிறை பாண்டியன்,ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கீழக்கரை ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
- பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.
கீழக்கரை
மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கீழக்கரையில் பல்வேறு வங்கி கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.பெரும்பாலான வங்கிகள் தானியங்கி பணம் எடுக்கும் ஏ.டி.எம்.எந்திரங்களை நிறுவியுள்ளது.
தற்போது இஸ்லாமி யர்களின் ரமலான் மாதம் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் ரமலான் தேவைக்காகவும், ஸதகா, ஜகாத் தேவைக்கா கவும் ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுப்பார்கள்.
கீழக்கரையில் செயல் படும் பல்வேறு வங்கிகளின் தானியங்கி எந்திரங்களில் பணம் எடுக்க முடியவில்லை.குறிப்பாக தேசிய மயமாக் கப்பட்ட பல்வேறு ஏ.டி.எம்.எந்திரங்களில் பணம் இருப்பதில்லை. இதில் ஆறுதலான ஒரு தகவல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் முறையாக செயல்படுகிறது.
ரமலானை கருத்தில் கொண்டு கீழக்கரையில் செயல்படும் வங்கிகளின் அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை வைத்து முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது.
- இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் சார்பில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது. ஆலய பங்குதந்தை பாஸ்கர் டேவிட் தலைமை வகித்தார். தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் தாளாளர் ஆரோக்கியம், பள்ளி முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கீழ ஈரால் பங்குத்தந்தை அலெக்ஸ் கலந்து கொண்டார்.
சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாதா ஆலய தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோகராஜ், முன்னாள் தலைவர்கள் ஜெயராஜ், அந்தோணிராஜ், முன்னாள் செயலாளர்கள காமராஜ், அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- முதுகுளத்தூரில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
- போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் பி.கே மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 6 கி.மீ தூரத்துக்கு மினி மாரத்தான ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் 21 வயதிற்குட்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதுகுளத்தூர்- கடலாடி நெடுஞ்சாலையில் நடந்தது. போட்டியை மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசும், 2-வது இடம் பிடித்தவருக்கு 5,100 ரொக்கப்பரிசும், 3-வது இடம் பிடித்தவருக்கு ரூ.3100 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
10 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் முதல் பரிசாக ரூ.2,100-ம், 2-ம் பரிசாக ரூ.1,500-ம், 3- பரிசாக ரூ.1,100-ம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் பூவலிங்கம் என்ற மாரி, மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை விரயமின்றி சேமித்து கொள்ள வேண்டும்.
- இந்த தகவலை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதை சேமிப்பு என்பது விதை அறுவடை செய்த காலம் முதல் அடுத்த பருவத்திற்கு நடவு செய்யும் காலம் வரை அதிகபட்ச முளைப்புத்திறன், புறத்தூய்மை மற்றும் வீரியம் ஆகியவற்றை பராமரித்தலே விதை சேமிப்பின் முக்கிய நோக்கமாகும். விதை உற்பத்தியில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு விதைகளை பூச்சி மற்றும் நோய்களிங் இருந்து பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடை பணி முடிவுற்ற நிலையில் விதைகளை அதன் விதைப்பு பருவம் வரை தங்களது இடங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் விதைகளில் ஈரப்பதம் 13 சதவீதத்திற்கு மேல் இருந்தால் அவைகள் எளிதில் பூச்சி நோய் தாக்குதலுக்கு உட்படுகிறது.
இதனால் விதைகளின் தரம் பெரிதும் பாதிக்கப் படுகிறது. விதைகளை பாதுகாக்கும் முறைகள்:-
விதைகளை சேமிக்க புதிய கோணிப்பைகள் அல்லது சுத்தமான தீவன சாக்குகளை பயன்படுத்த வேண்டும். விதை சேமிக்கும் குதிர்கள் மற்றும் கிடங்கு களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குப்பைகள், தூசிகள், பூச்சி தாக்கப்பட்ட விதைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
ஈரப்பதத்தை அந்தந்த விதைகளின் தன்மைக்கு தகுந்தாற் போன்று 9 முதல் 13 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு காயவைத்து விதைகளை நொச்சி அல்லது வசம்பு கிழங்குகளை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து சேமிக்க வேண்டும். வேதியியல் முறையில் 1 கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் கால்சியம் குளோரைடு கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்பு தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையினை பயன்படுத்தி விதையை சேமித்து வைக்க வேண்டும்.
விதை மூட்டைகளை சீரான காற்றோற்றத்துடன் தரையில் அடுக்காமல் கட்டைகளின் மேல் அடுக்க வேண்டும். சுவற்றில் இருந்து 1 அடி இடைவெளி விட்டும் ஒரு அட்டியிலிருந்து மற்றொரு அட்டிக்கு 6 அடி இடைவெளி விட்டும் அடுக்க வேண்டும்.ஒரு அட்டியில் மூட்டைகளை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைக்கும் போது 6 மூட்டைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
15 நாட்களுக்கு ஒருமுறை மூட்டைகளில் பூச்சி தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட யுக்திகளை கையாண்டு தரமான விதைகளை சேமிப்புக்கால இழப்பு இல்லாமல் சேமித்து வைத்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவேண்டும் என கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
- சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலை, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வருகிற 10 மற்றும் 24-ந் தேதிகளில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை அந்தந்த பள்ளிகளில் சிறப்பு மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்த திட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் பள்ளிகளில் படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கும் வகையில் அனைவரும் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
இந்த கூட்டத்தின் நோக்கம், பள்ளிகளில் படிப்பை தொடராத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவருக்கு தேவையான படிப்பை தொடரும் வகையில் துணை தேர்வு எழுதுவதற்கான ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த ஆலோசனை வழங்குவதே ஆகும்.
எனவே மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று வரும் காலத்தில் இடைநிற்றல் என்ற சொல்லே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏழைகளுக்கு உணவுப்பொருள்களை தொகுத்து வழங்கினார்.
- எம் .கே. இ. உமர் மற்றும் அவரது துணைவியார் ஹாரித் உமர் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
கீழக்கரை
கீழக்கரையை சேர்ந்த மர்ஹூம் பி.எஸ். அப்துல் ரகுமான். மர்ஹூம் தாசிம் பீவி அப்துல் காதர் ஆகியோர்களின் நினைவாக புனித ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்காக ஒரு மாத காலத்திற்கான உணவுப் பொருள்கள் வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் (ரூ. 4500 மதிப்புள்ள) 30 வகையான உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை அனைத்து ஜமாத் பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 ஏழை எளிய மக்களுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் டிரஸ்டி மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் அவர்களின் மகன்கள் ஹாலித் புகாரி. செய்யது முஹம்மது புகாரி ஆகியோர் பியேரல் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் எம் .கே. இ. உமர் மற்றும் அவரது துணைவியார் ஹாரித் உமர் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் பொது துணை மேலாளர் சேக் தாவுது மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா ஆகியோர் செய்திருந்தனர்.
- சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
- சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார்.
திருவாடானை
ராமநாதபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன்(வயது45). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் ராமநாத புரத்தில் இருந்து திருவாடா னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சி.கே.மங்கலத்திலிருந்து ஆர்.எஸ். மங்கலம் சவேரியார் பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவா டானை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி என்ப வரை கைது செய்தனர்.






