கமுதியில் நீர் மோர் பந்தல்

கமுதியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.
கமுதியில் நீர் மோர் பந்தல்
Published on

பசும்பொன்

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கூடும் இடங்களில் நீர்மோர் பந்தல் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பஸ் நிலையம் முன்பு நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார்.

பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி, பப்பாளி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, முன்னாள் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் நேதாஜி சரவணன், காங்கிரஸ் வடக்கு வட்டார தலைவர் ஆதி, தி.மு.க. இளைஞரணி ஆதி ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் இதில் முத்து ராமலிங்கம், காங்கிரஸ் நகர தலைவர் சிதம்பர ராஜன், வழக்கறிஞர் நிறை பாண்டியன்,ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com