என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரத்தில் மோசடி அதிகரித்துள்ளதால் சைபர் கிரைம் போலீசார், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- இதுகுறித்து தொழில்நுட்ப அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம்.கார்டினை புதுப்பிக்க வேண்டும் என்று ரகசிய எண்ணை பெற்று மோசடி செய்து வந்த நிலையில் அதன்பின்னர் பரிசு விழுந்திருப்பதாக கூறியும், செல்போன் டவர் அமைக்க இடம் தேவைப்படுவதாக கூறியும், ஆன்லைனில் பரிசு விழுந்திருப்பதாக கூறி அதனை பெற முன்பணம் செலுத்துமாறு கூறியும், முகநூல் பதிவில் பண உதவி கேட்டும், ஆபாச வீடியோ லிங்க் மூலம் பணம் கேட்டு மோசடி என பல்வேறு மோசடிகள் நாள்தோறும் நடந்து வருகிறது.
இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இன்றளவும் படிக்கா தவர்கள் மட்டு மல்லாது படித்தவர்களும் பேராசையின் மிகுதியால் ஏமாந்து கொண்டுதான் வருகின்றனர். இந்த மோசடி சம்பவங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடியால் பலர் ஏமாந்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் துண்டு பிரசுரங்கள் வினி யோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் நூதன மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதுகுறித்து தொழில்நுட்ப அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் யாரும் பணம் மற்றும் வங்கி தொடர்பான எந்த குறுந்தகவல்களை கண்டு கொள்ளக்கூடாது. எந்த தகவலாக இருந்தாலும் சிரமம் பார்க்காமல் வங்கிக்கே நேரடியாக சென்று விசாரித்து கொள்ள வேண்டும்.
ஆன்லைன் மூலம் பணமோசடி செய்து யாரையும் ஏமாற்றினால் 24மணி நேரத்திற்குள் 1930 என்ற தேசிய சைபர் கிரைம் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்தால் மோசடி செய்து பெறப்பட்ட பணத்தினை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கினை முடக்கி யாரும் எடுக்காதவாறு கடும் நடவடிக்கை எடுத்து விடலாம்.
அந்த பணத்தினை பல வங்கி கணக்கிற்கு மாற்றியிருந்தாலும் அனைத்து வங்கி கணக்கினையும் முடக்கி விடலாம். இதன்பின்னர் வழக்குபதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அந்த பணத்தினை திரும்ப பெற்றுவிடலாம். எனவே, இந்த 1930 என்ற எண் குறித்து மக்களிடம் தெளிவுபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- செல்வநாயகபுரத்தில் குடிநீர் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் சண்முகப்பிரியா ராஜேஸ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கண்ணகி முன்னிலை வகித்தார். ஆணையாளர் ஜானகி வரவேற்றார். கவுன்சிலர் முருகன் (அ.ம.மு.க.) செல்வநாயகபுரம் கிராமத்திற்கு குடிநீர் கிணறு அமைக்க நிதி வழங்கிய யூனியன் தலைவருக்கு நன்றி தெரிவித்தார். கலைசெல்வி ராஜசேகர் (வெங்கலக்குறிச்சி) வெண்ணீர்வாய்க்கால் பள்ளி சாலையை பேவர் பிளாக் சாலையாக அமைக்க கோரிக்கை விடுத்தார். மேலும் விளங்குளத்தூர் உயர்நிலைப்பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்கவும் கோரிக்கை விடுத்தார்.
- ராமநாதபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் த.மு.மு.க, ம.ம.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. த.மு.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். இதில் ஹூசைன் ஆலிம் சிறப்புரையாற்றினார். அவைத்தலைவர் சைபுதீன், ராமநாதபுரம் நகரசபைத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முகமது அலி ஜின்னா, த.மு.மு.க மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகீம், செயலாளர் அப்துல் ரஹீம், நகர செயலாளர் முகமது தமீம், நகர் தலைவர் முகமது அமீன், மாவட்ட செயலாளர் முகமது ஆசிக் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.
- இலவச தையல் எந்திரம் வழங்க ராமநாதபுரம் கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 3 மாத கால பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் முத்தமிழ் அறக்கட்டளை சார்பாக பல்வேறு பொதுநல சேவைகளை செய்து வருகின்றனர். பசியில்லா தமிழகம் என்ற திட்டம் மூலம் தினந்தோறும் இலவச உணவு வழங்கி ஏழை எளியோரின் பசியை போக்கி வருகின்றனர். மேலும் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் குழு ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு சிறு தொழில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி முதல் கட்டமாக 30 பெண்களுக்கு ராமநாதபுரம் நேருயுவகேந்திராவுடன் இணைந்து தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 மாத கால பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.
பயிற்சி பெற்ற 30 பெண்களும் இலவச தையல் எந்திரம் வழங்க கோரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். கலெக்டரும் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன், தையல் பயிற்சியாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
- கடும் வறட்சியால் நீர் நிலைகளில் வைகை நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமநாதபுரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்கள், 11 யூனியன் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள், யூனியன் கண்மாய்கள் மற்றும் தனிநபர் ஊரணிகள், பொதுப்பயன்பாட்டில் உள்ள ஊரணிகள் உள்ளன.
அபிராமம் பகுதியிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்மாய் ஊரணிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழை காலங்களில்தான் பெரும்பாலான கண்மாய் ஊரணிகள் தண்ணீர் நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கண்மாய், ஊரணிகள் குளங்கள் நிரம்பவில்லை.
கடந்த ஆண்டு பாசன வசதிக்கும், குடிநீர் தேவைக்கும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டும், அபிராமம் பகுதியை சுற்றியுள்ள பொதுப்பணி துறை கண்மாய், யூனியன் கண்மாய். ஊரணிகளில் தண்ணீர் நிரப்ப முடியாமல் போனதாலும் கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததாலும் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது.
தற்போது கண்மாய், குளங்கள், ஊரணிகள் வறண்டுள்ளது. அபிராமம், தரைக்குடி, வல்லகுளம் என பல கிராமங்களில் உள்ள கண்மாய், குளம், ஊரணிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன. இதனால் குளிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீர் ஆதாரத்தை பெருக்கவும், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும் வைகை அணையில் இருந்து தண்ணீர் வந்து ராமநாதபுரம், பரமக்குடி தாலுகாக்களில் மட்டுமே தண்ணீரை கண்மாய், குளங்க ளில் தேக்கி வைக்க முடிகிறது. ஆனால் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதி கண்மாய், குளங்கள், ஊரணிகள் வறண்டு காணப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து மாவட் டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து தர கண்மாய், குளம், ஊரணி களில் வைகை தண்ணீரை கொண்டு சென்று நிரப்புவ தற்கான திட்டத்தை செயல் படுத்த வேண்டும்.
கண்மாய், குளம், ஊரணிகளை தூர்வாரியும், வரத்துக்கால்களை தூர் வாரியும் இனிவரும் பருவமழை காலங்களில் தண்ணீர் தேக்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே அபிராமம் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
- ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
- ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்க ளிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களை கண்டறிந்து மாவட்ட அளவில் நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்று அதில் தேர்வான 4 மாணவ-மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். அவர்களுக்கு அறிவியல் பேரவையின் சார்பில் "வானவில் அறிவியல்" விருதினையும் தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி சாதனை படைத்திட வேண்டும் எனவும், மாணவ-மாணவிகளின் பெற்றோர்களையும் பாராட்டி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
அப்போது சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளி தாளாளர் வாசன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- கமுதியில் நடந்த தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- 24 மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி மைதானத்தில் கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் தென்மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில் சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி உட்பட 24 மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டியில் மதுரை என்.ஏ.சி.சி. அணியை வீழ்த்தி மதுரை வேலவன் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதலிடம் பெற்ற இந்த அணிக்கு ரூ.50ஆயிரம், பசும்பொன் ஊராட்சிமன்ற தலைவர் ராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் வேலவன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் போஸ் செல்லப்பா ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டது.
2-ம் இடம் பெற்ற மதுரை என்.ஏ.சி.சி. அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு தொகை, கோட்டை மேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் வழங்கப் பட்டது. 3-ம் இடம் பெற்ற கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தொகை, நாராயணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேல்மயில் முருகன், வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சிரஞ்சீவி ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டது.
4-ம் இடம் பிடித்த திருப்பூரை சேர்ந்த 22யார்ட்ஸ் கார்மெண்ட்ஸ் அணிக்கு ரூ.10ஆயிரம் பரிசு தொகை, முன்னாள் வடக்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் நேதாஜி சரவணன் சார்பில் வழங்கப்பட்டது.
முதல் 4 இடம் பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டது. அவைகள் முன்னாள் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் ராமையா சார்பில் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் வழங்கினார்.
இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் தலைவர் காளிமுத்து மற்றும் பலர் செய்திருந்தனர்.
தென் மண்டல அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நடத்திய கோட்டைமேடு நண்பர்கள் அணியை இப்பகுதி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
- சாயல்குடி அருகே மின்கம்பத்தில் மோதி பெண் பலியானார்.
- இது குறித்த புகாரின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாயல்குடி
சாயல்குடி அருகே உள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவரது மனைவி கலைச்செல்வி (வயது35). இவர் குளிப்பதற்காக துணிகளை வட்டையில் எடுத்துக்கொண்டு நடந்து சென்றார். அவருக்கு பின்னால் குடிநீர் கொண்டு சென்ற டிராக்டரின் டேங்கர் கலைச்செல்வி துணி கொண்டு சென்ற வட்டையில் உரசியதில் தடுமாறி எதிரில் இருந்த மின்கம்பத்தில் மோதினார்.
இதில் படுகாயமடைந்த கலைச்செல்வியை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அஜித்குமார் சென்னையில் செயல்படும் ஒரு பேக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 4-ந் தேதி சொந்த கிராமத்திற்கு வந்தார்.
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 சிறுமி பிளஸ்-1 வரை படித்துள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதியில் தங்கி முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் தொத்தார் கோட்டையை சேர்ந்த உறவினர் ராஜேந்திரன் மகன் அஜித்குமார் (வயது25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அஜித்குமார் சென்னையில் செயல்படும் ஒரு பேக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரும், சிறுமியும் 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்குமார் அடிக்கடி சிறுமியை சந்தித்து வந்தார். அப்போது சென்னை திருவான்மியூரில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்று சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 4-ந் தேதி சொந்த கிராமத்திற்கு வந்தார்.
பின்னர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் காளையார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருவாடானை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கணவரின் மறைவுக்கு பிறகு பேரையூர் கிராமத்தில் உள்ள தனது தாய்வழி சொந்தங்களுடன் வசித்து வருகிறார்.
- ராமாயி பாட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈஸ்டர் தினத்தில் ஊர் மக்களுக்கு பாயாசம் செய்து இலவசமாக வழங்கி வந்துள்ளார்.
முதுகுளத்தூர்:
பெற்றோரை வயதான காலத்தில் பெற்ற பிள்ளைகளே கவனிக்காமல் விட்டுவிடும் அவலம் பல இடங்களில் நடக்கிறது. அப்படியே தங்களுடன் வைத்து கவனித்தாலும், அவர்களது சந்தோஷம், தேவையை அறிந்து பெரும்பாலானோர் செயல்படுவது கிடையாது.
அதனால் பல முதியோர்கள் தங்களது கடைசி கால கட்டத்தில், ஏதோ வாழ வேண்டும் என்ற மனநிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கை நிலையில், யாரும் இல்லாத 110 வயது மூதாட்டிக்கு கிராம மக்களே சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் வசித்து வருபவர் 110 வயது பாட்டி ராமாயி. 1913-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறுவயதிலேயே திருமணமாகிவிட்டது. திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவரும் இறந்து விட்டார். ராமாயிக்கு குழந்தைகளும் இல்லை.
கணவரின் மறைவுக்கு பிறகு பேரையூர் கிராமத்தில் உள்ள தனது தாய்வழி சொந்தங்களுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் வசித்து வந்தாலும் தனக்கு தேவையான உணவை அவரே சமைத்து சாப்பிடுகிறார். சுளுக்கு, மூச்சு பிடிப்பு போன்ற பிரச்சினைகளையும், குழந்தைகளுக்கு ஏற்படும் 'மாந்தம்' பிரச்சினையும் குணப்படுத்துவதில் மூதாட்டி ராமாயி கைதேர்ந்தவர் ஆவார்.
தான் வசிக்கும் கிராமத்தில் உள்ள மக்களுக்கு மேற்கண்ட பிரச்சினைகளை பல ஆண்டுகளாக குணப்படுத்தி வருகிறார். ராமாயியின் இந்த சேவை பேரையூர் கிராம மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட பேரையூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், விளையாட்டு கழகத்தினர் மற்றும் ஊர் மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி ராமாயி பாட்டியின் 110-வது பிறந்தநாளை அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அவருக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து ராமாயி பாட்டி பேரையூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்-சிறுமிகள் முன்னிலையில் கேக் வெட்டினார்.
பின்பு அதனை அனைவருக்கும் வழங்கினார். 110 வயது ஆன போதிலும் ராமாயி பாட்டி கம்பீரமாக நின்று கேக் வெட்டியது கிராம மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ராமாயி பாட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈஸ்டர் தினத்தில் ஊர் மக்களுக்கு பாயாசம் செய்து இலவசமாக வழங்கி வந்துள்ளார்.
தற்போது வயது முதிர்வு காரணமாக அதனை நிறுத்தி விட்டார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாயாசம் தயாரித்து, அவரது கையால் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பாட்டி ராமாயி வழங்கிய கேக் மற்றும் பாயாசத்தை சாப்பிட்ட கிராம மக்கள், அவரிடம் ஆசி பெற்றனர்.
ஊர் மக்கள் தன் மீது வைத்துள்ள அன்பை பார்த்து பாட்டி ராமாயி நெகிழ்ச்சி அடைந்தார். ராமாயி பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
- பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
- நேரு பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த மாதம் இந்த போட்டி நடந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 181 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கடந்த மாதம் நடந்தது. இந்த போட்டியில் பெரியபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் ஜான் பீவி பேத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் மகளுமான பெரியபட்டினம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவி அர்ஷியா வெற்றி பெற்றார்.அவருக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் சிறப்பு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிச்செல்வி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சபீர்பானு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கோடை கால நீர்-மோர் பந்தலை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி திறந்து வைத்தார்.
- தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகில் கோடைகால நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் ஏற்பாட்டில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட பேரவை செயலா ளர் சேது பாலசிங்கம், மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிகட்டி, மாவட்ட மீனவர் கூட்டுறவு சம்மேளன தலைவர் வேலுச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ் ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






