என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    விளையாட்டுத்துறையில் சர்வதேச/தேசிய அளவி லான போட்டிகளில் வெற்றி களை பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழ கத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றி ருக்க வேண்டும். மேலும் அதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    மத்திய அரசு, பல்கலைக்கழகங்கள் நடத்திய போட்டிகள், ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு அமைச்சகம் நடத்திய போட்டிகளில் விளையா டியிருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவ ராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்ற வராகவும் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய-மாநில அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப் பிக்க முடியாது.

    மேற்கண்ட தகுதியுடை யவர்கள் www.sdat.tn.gbv.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மாரியம்மன் கோவில் பூக்குழி விழா இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் காமன்கோட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா விமரிசையாக நடந்து வருகிறது.

    கடந் 4-ந் தேதி விழா தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். விழாவில் நேற்று முன்தினம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதனை தொடர்ந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஆயிரங்கண் பானை, கரும்பாலை தொட்டி, அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் களை செலுத்தினர்.

    நேற்று பெண்கள் உள்பட திரளானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் ெசலுத்தினர். பின்னர் பால்குட ஊர்வலமும் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாளையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை காமன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் பாண்டியன், ஊர் தலைவர் சரவணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • தொண்டி அருகே பாஸ்கு திருவிழா நடந்தது.
    • கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் புனித செங்கோல் மாதா திருத்தலம் உள்ளது. இங்கு 128-ம் ஆண்டு பாஸ்கு திருவிழா நடந்தது. கடந்த 2 நாட்களாக இரவு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், சிலுவை பாதை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    முதல் நாள் பங்குத் தந்தை அருள் ஜீவா, 2-ம் நாள் சம்பை இணைப்பங்குப் பணியாளர் அருட்தந்தை லாரன்ஸ் ஆகியோர் தலைமையில் ஆர். எஸ். மங்கலம் வட்டார அதிபர் அருட் தந்தை கிளமெண்ட், செங்குடி பங்குத் தந்தை வின்சென்ட் அமல்ராஜ், முத்துப்பட்டினம் பங்குத் தந்தை அற்புத அரசு. இணைப்பணியாளர் அருட்தந்தை ரீகன், நகரிகாத்தான் பங்குப் பணியாளர்கள் சூசை மிக்கேல் ராஜ், பிரிட்டோ, தங்கச்சிமடம், ஒலைக்குடா பங்குப் பணியாளர்கள் அருட்தந்தை சாமிநாதன், அருட்தந்தை ஜான்சன், இணைப் பணியாளர்கள் முன்னிலையில் பாஸ்கு திருவிழா நடந்தது.

    இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது.
    • யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் யோகம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் செங்கப்படை, புதுக்கோட்டை, ஒ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு இயற்கை ஊட்டச்சத்து மாவை பெற்றுக்கொண்டனர். மேலும் இந்த மாவின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து, விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார். தனியார் சோலார் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி ஜெனார்தனன், தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் யோகேஷ் மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதவள மேம்பாடு சபரீஷ், வழக்கறிஞர் அப்துல்சமதுசேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார். முகாமில் 93 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்து 573 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் ஜெயகுமார், தனி துணை வட்டாட்சியர் மாரிசெல்வராஜ், மண்டல துணை வட்டாட்சியர் முருகேசன், வருவாய் அலுவலர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நீர் மோர் பந்தல் நடந்தது.
    • மாவட்ட தலைவர் தரணி முருகேசன் திறந்து வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை மாவட்ட தலைவர் தரணி முருகேசன் திறந்து வைத்தார். மாநில பொதுச் செயலாளரும், பெருங்கோ ட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம், தேசிய பொது குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன், மாநில மகளிரணி துணை தலைவி கலா ராணி, செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பிரவீன், ராமச்சந்திரன், ரஜினிகாந்த், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்மா கார்த்திக், மணி மாறன், பவர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நூற்பாலை மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்யக்கோரி நூற்பாலை மேலாளரிடம் மனு அளித்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இங்கு ஊழியராக பணியாற்றி வந்தவர் லட்சுமி (வயது48), மாற்றுத்திற னாளி. இவர் கடந்த மாதம் 31-ந் தேதி வேலையை முடித்து விட்டு, நூற்பாலைக்கு வெளியே வந்தபோது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இவரது உடல் தகுதிக்கு ஏற்ப வேலை கொடுக்கா மல் கடுமையான பணிகள் ஒதுக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர் என்றும், மாற்றுத்திறனாளி பெண் லட்சுமி மரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மேற்பார்வையாளர் கொடுத்த பணி சுமை தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அவரை பணி நீக்கம் செய்ய கோரி அண்ணா தொழிற் சங்கம் சார்பில் நூற்பாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கினார். அச்சங்குளம் நூற் பாலை அண்ணா தொழிற்சங்க தலைவர் முத்துச்சாமி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கர்ணன், ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, முத்தையா, குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் நூற்பாலை மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்யக்கோரி நூற்பாலை மேலாளரிடம் மனு அளித்தனர்.

    • ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகி கருப்பு முருகானந்தம் பேசினார்.
    • கூட்டு முயற்சியால் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய முடியும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச்செய லாளரும், கோட்ட அமைப் பாளருமான கருப்பு முருகா னந்தம் பேசியதா வது:-

    தனி நபருக்காக பாரதீய ஜனதா கட்சி இல்லை. இது மிகப்பெரிய கட்சி. தேர்தலில் கட்சி வெற்றி பெற எந்த மாற்றமும் நடக்கும். வருகிற பாராளு மன்ற தேர்தலில் ராமநாத புரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்று தமிழக நிர்வாகிகள் வற்புறுத்தி இருக்கிறோம். இந்த கோரிக்கை நிறைவேறினால் ராமநாதபுரம் தொகுதி மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

    கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு முயற்சி யால் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய முடியும். எனவே ஒவ்வொரு தொண்டனின் பணியும் முக்கியமானது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யும் வகையில் நமது பணி இருக்க வேண்டும். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாவட்ட பார்வை யாளர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன்,மாநில மகளிர் அணி துணைத்தலைவி கலா ராணி, செயலாளர் மற்றும் மாநில பொறுப்பா ளர்கள் மாநில பொறுப்பா ளர்கள் பிரவீன் ஜி, ராமச்சந்திரன்,ரஜினிகாந்த் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்மா கார்த்திக், மணி மாறன், பவர் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 85 படுக்கை வசதிகளுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பொது இடங்களில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா முன்னேற்பாடு தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தற்போது ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.

    கொரோனா முன்னேற்பாடு நடவடிக்கை யாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 70 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 15 படுக்கை வசதிகள் என மொத்தம் 85 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    மேலும் ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருத்து வர்கள் ஆலோச னையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக பொது இடங்களில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும். சிறிய வர்கள் முதல் பெரியவர்கள் வரை சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் போது எந்த நோயும் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது.

    இவர் அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் செந்தில் குமார், மருத்துவமனை கண்காணிப் பாளர்கள் மலர்வண்ணன், மனோஜ்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரம் தமிழகத்தில் எதிர்பார்ப்பு மிகுந்த தொகுதியாக மாறி உள்ளது.
    • கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருந்த கதிரவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தரணிமுருகேசன் நியமிக்கப்பட்டார்.

    புதிய மாவட்ட தலைவர் நியமிக்கப்பட்ட பிறகு முதல் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கருப்பு முருகானந்தம் பேசியதாவது:-

    இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்று தமிழக நிர்வாகிகள் வற்புறுத்தி இருக்கிறோம்.

    ராமநாதபுரம் தமிழகத்தில் எதிர்பார்ப்பு மிகுந்த தொகுதியாக மாறி உள்ளது. இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக மாவட்ட கட்சி நிர்வாகத்தில் எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் கட்சி தலைமை செய்யும்.

    கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2 ½ வயது ஆண் குழந்தைக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்வது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கைதிகள் உள்பட 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த 2 ½ வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த குழந்தை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொது இடங்களில் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்வது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மத நல்லிணக்க புனித ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

    கீழக்கரை ரோட்டரி சங்கத்தலைவர் சுல்தான் சம்சூல் கபீர் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட டவுன் தலைமை ஹாஜி அல்ஹாஜ் சலாகுதீன் ஆலிம், ஓய்வு பெற்ற ஆசிரியர் காசி கணேசன், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் ஆகியோர் நோன்பின் மகிமை பற்றி பேசினர்.

    இதில் கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானஸ் ஆபிதா, சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கே.ஆர்.டி.கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர்கள் மீரான்அலி, பயாஸ், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் ஷேக் தாவூது, பேராசிரியர்கள் மரியதாஸ், பாலகிருஷ்ணன், எபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ரோட்டரி சங்க செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பொருளாளர் சிவகார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×