என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 ½ வயது ஆண் குழந்தைக்கு கொரோனா சிகிச்சை
- 2 ½ வயது ஆண் குழந்தைக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்வது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்.
ராமநாதபுரம்
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கைதிகள் உள்பட 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த 2 ½ வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அந்த குழந்தை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொது இடங்களில் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்வது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story






