மின்கம்பத்தில் மோதி பெண் பலி

சாயல்குடி அருகே மின்கம்பத்தில் மோதி பெண் பலியானார். இது குறித்த புகாரின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மின்கம்பத்தில் மோதி பெண் பலி
Published on

சாயல்குடி

சாயல்குடி அருகே உள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவரது மனைவி கலைச்செல்வி (வயது35). இவர் குளிப்பதற்காக துணிகளை வட்டையில் எடுத்துக்கொண்டு நடந்து சென்றார். அவருக்கு பின்னால் குடிநீர் கொண்டு சென்ற டிராக்டரின் டேங்கர் கலைச்செல்வி துணி கொண்டு சென்ற வட்டையில் உரசியதில் தடுமாறி எதிரில் இருந்த மின்கம்பத்தில் மோதினார்.

இதில் படுகாயமடைந்த கலைச்செல்வியை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com