சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி

சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலியானார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார்.
சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

திருவாடானை

ராமநாதபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன்(வயது45). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் ராமநாத புரத்தில் இருந்து திருவாடா னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சி.கே.மங்கலத்திலிருந்து ஆர்.எஸ். மங்கலம் சவேரியார் பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவா டானை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி என்ப வரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com