search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quality seeds"

    • ஆன்லைன் வர்த்தக சேவையை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைய தளத்தை பயன்படுத்தி வேளாண் சார்ந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார வேளாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேளாண்விளை பொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு உற்பத்தி சார்ந்த பொருட்களை எளிதாக கொள்முதல் செய்ய உதவவும் ஆன்லைன் வர்த்தக சேவையை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைய தளத்தை பயன்படுத்தி வேளாண் சார்ந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். முதல் கட்டமாக 15 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்.

    மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களும் விற்பனை செய்ய நடவடி க்கை எடுக்கபட்டு வருகிறது.

    இந்த இணையதளம் வாயிலாக, நெல், மக்காச்சோளம், பயிறு வகைகள், எண்ணைவித்து, பயிர் பூஸ்டர்கள், இடுபொருட்கள், காய்கறி விதைகளை ஆர்டர் செய்து உரிய கட்டணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

    விவசாயத்தில் நல்லமகசூல் கிடைக்க வேண்டுமானால், நல்ல தரமான விதைகளின் பயன்பாடு முக்கியம். உற்பத்தி செய்து இருப்பில் விற்ப னைக்கு தயாரான தரமான விதைகளை விவசாயிகள் வாங்குவதற்கு வசதியாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முகவரியில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    விவசாயிகள் மற்றும் பொது மக்கள் இந்த இணைய தளம் மூலம் பருவத்திற்கு மற்றும் தங்களின் தேவைக்கு ஏற்ற தமிழ்நாடு வோளா ண்மைப் பல்கலை கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தரமான நெல் விதைகள், மக்காச்சோளம், காய்கறி விதை பாக்கெட், எண்ணை வித்துகள், பயிர் பூஸ்டர்கள், உயிரியல் இடுபொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு வசதியாக இணையதள மூலம் பெற்று பயன்அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை விரயமின்றி சேமித்து கொள்ள வேண்டும்.
    • இந்த தகவலை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதை சேமிப்பு என்பது விதை அறுவடை செய்த காலம் முதல் அடுத்த பருவத்திற்கு நடவு செய்யும் காலம் வரை அதிகபட்ச முளைப்புத்திறன், புறத்தூய்மை மற்றும் வீரியம் ஆகியவற்றை பராமரித்தலே விதை சேமிப்பின் முக்கிய நோக்கமாகும். விதை உற்பத்தியில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு விதைகளை பூச்சி மற்றும் நோய்களிங் இருந்து பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடை பணி முடிவுற்ற நிலையில் விதைகளை அதன் விதைப்பு பருவம் வரை தங்களது இடங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் விதைகளில் ஈரப்பதம் 13 சதவீதத்திற்கு மேல் இருந்தால் அவைகள் எளிதில் பூச்சி நோய் தாக்குதலுக்கு உட்படுகிறது.

    இதனால் விதைகளின் தரம் பெரிதும் பாதிக்கப் படுகிறது. விதைகளை பாதுகாக்கும் முறைகள்:-

    விதைகளை சேமிக்க புதிய கோணிப்பைகள் அல்லது சுத்தமான தீவன சாக்குகளை பயன்படுத்த வேண்டும். விதை சேமிக்கும் குதிர்கள் மற்றும் கிடங்கு களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குப்பைகள், தூசிகள், பூச்சி தாக்கப்பட்ட விதைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

    ஈரப்பதத்தை அந்தந்த விதைகளின் தன்மைக்கு தகுந்தாற் போன்று 9 முதல் 13 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு காயவைத்து விதைகளை நொச்சி அல்லது வசம்பு கிழங்குகளை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து சேமிக்க வேண்டும். வேதியியல் முறையில் 1 கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் கால்சியம் குளோரைடு கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்பு தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையினை பயன்படுத்தி விதையை சேமித்து வைக்க வேண்டும்.

    விதை மூட்டைகளை சீரான காற்றோற்றத்துடன் தரையில் அடுக்காமல் கட்டைகளின் மேல் அடுக்க வேண்டும். சுவற்றில் இருந்து 1 அடி இடைவெளி விட்டும் ஒரு அட்டியிலிருந்து மற்றொரு அட்டிக்கு 6 அடி இடைவெளி விட்டும் அடுக்க வேண்டும்.ஒரு அட்டியில் மூட்டைகளை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைக்கும் போது 6 மூட்டைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    15 நாட்களுக்கு ஒருமுறை மூட்டைகளில் பூச்சி தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட யுக்திகளை கையாண்டு தரமான விதைகளை சேமிப்புக்கால இழப்பு இல்லாமல் சேமித்து வைத்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிசான பருவத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் பயிரிட விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர்.
    • விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும் விவசாயிகள் கீழ்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிசான பருவத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் பயிரிட விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும் விவசாயிகள் கீழ்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விற்பனை ரசீது பெற்று விதைகள் வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், விற்பனையாளர் கையொப்பம் முதலிய விபரங்கள் இருக்க வேண்டும்.

    விதைச் சிப்பத்தில் உள்ள விபர அட்டையில் குறிப்பிடப்பட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து பின் வாங்க வேண்டும். நெல் மற்றும் உளுந்து பயிர்களில் விதைச்சான்று மற்றும் அங்கச்சான்றுத் துறையின் சான்றட்டை பொருத்திய விதைகளை வாங்குவது சிறந்தது.

    விவசாயிகள் தங்களிடம் உள்ள சொந்த நெல் மற்றும் உளுந்து விதைகளை பயன்படுத்தும் முன்னர் மேற்படி விதைகளின் மாதிரிகளை நெல்லை விதை பரிசோதனை நிலையத்தில் மாதிரி ஒன்றுக்கு கட்டணம் ரூ.80 செலுத்தி முளைப்புத் திறன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி விதைகள் விதை விற்பனை நிலையங்களுக்கு தற்போது வரப்பெற்றுள்ளது. திருவேங்கடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் 14 விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பதிவுச் சான்று மற்றும் முளைப்புத் திறன் பரிசோதனை அறிக்கை பெறப்படாத 3355 கிலோ மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதை குவியல்கள் மதிப்பு ரூ.12,19,000 விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அனைத்து விதை குவியல்களிலும் விதை மாதிரி எடுக்கப்பட்டு, முளைப்புத் திறன் பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×