search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க வேண்டும்-கலெக்டர் அறிவுரை
    X

    மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க வேண்டும்-கலெக்டர் அறிவுரை

    • மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவேண்டும் என கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    • சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலை, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வருகிற 10 மற்றும் 24-ந் தேதிகளில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை அந்தந்த பள்ளிகளில் சிறப்பு மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்த திட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் பள்ளிகளில் படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கும் வகையில் அனைவரும் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    இந்த கூட்டத்தின் நோக்கம், பள்ளிகளில் படிப்பை தொடராத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவருக்கு தேவையான படிப்பை தொடரும் வகையில் துணை தேர்வு எழுதுவதற்கான ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த ஆலோசனை வழங்குவதே ஆகும்.

    எனவே மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று வரும் காலத்தில் இடைநிற்றல் என்ற சொல்லே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×