என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரத்தில் அம்பேத்கர்-பெரியார் சிலை அமைக்க வேண்டும்.
- தெருமுனை பிரசார கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரண் மனை முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் அம்பேத்க ரின் 132-வது பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தை சிவா முன்னிலை வகித்தார். இந்திய இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் பன்னீர் செல்வம் வரவேற்று பேசினார்.
பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ் முருகன், ஐந்திணை மக்கள் கட்சி மாநில ஒருங்கி ணைப்பாளர் ஸ்டீபன்ராஜ், மாவட்ட செயலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமநாத புரத்தில் அம்பேத்கர், பெரியார் சிலைகளை அமைக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம்,கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிசை படு கொலை ெசய்ததை வன்மையாக கண்டிக்கி றோம். அவரை கொலை செய்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பிர சாரத்தில் அருந்ததியர் சமுதாய மக்களை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தொண்டி புதிய பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- மணிமுத்தாறு பாலம் இருபுறமும் அலங்கார விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவி ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். தொண்டி புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும். பஸ் நிலையத்தின் இருபுறமும் நுழைவு வாயிலை பொது நிதியில் இருந்து கட்ட வேண்டும், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், செயல் அலுவலர், கணிணி அறைகளை மராமத்து செய்ய வேண்டும், கிழக்கு கடற்கரை சாலையில் மாலை நேர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை பழைய பஸ் நிலையம், கைக்குளவர் ஊரணி அருகில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.
சரக்கு வாகனங்களை காலை 11 மணி முதல் 3 மணி வரை இயக்க வேண்டும். மணிமுத்தாறு பாலம் இருபுறமும் அலங்கார விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருங்குளத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் குழந்தைவேலு, வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் வரவேற்றார். கமுதி நகரச் செயலாளர் பாலமுருகன், மற்றும் கிளைச் செயலாளர்கள், அவைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் முத்து, துணைச் செயலாளர் தங்கலட்சுமி, பாரதிதாசன், காசிலிங்கம், தொ.மு.ச. அவைத் தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அபிராமத்தில் நடந்த தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு நகரச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், தொகுதி பொறுப்பாளர் எரிக்ஜூடு முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட முஷ்டகுறிச்சியில் ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமையிலும், தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெருநாழியில் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- கூடுதல் மாவட்டக்கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்
- ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கடந்த காலங்களில் பள்ளி கல்வித்துறையில் இடைநிலைக்கல்விக்கு ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி என கல்வி மாவட்ட அலுவலகங்களும், தொடக்கக்கல்விக்கு ராமநாதபுரம் முழுவதும் ஒரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவல கமும் செயல்பட்டு வந்தன.
இவைகளை முழுமையாக கண்காணிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலகம் செயல் பட்டு வந்தது.
கடந்த ஆட்சியில், தொடக்கக்கல்வித்துறை யில் உள்ள பள்ளிகளை கண்காணித்து ஆய்வு செய்து வந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை ரத்து செய்து விட்டு, மாவட்ட நிர்வாகத் தில் தனித்தனியாக இயங்கி வந்த பள்ளிக்கல்வி (இடை நிலைக்கல்வி)பள்ளிகள் மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் உள்ள பள்ளி களை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, 2 அலகுகளையும் மாவட்டக் கல்வி அலுவலர் நிர்வாகம் செய்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக கல்வித்துறை பல குளறுபடிகளுடன் இயங்கி வந்தது.
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பள்ளிகளை ஒரே ஆளுகையின்கீழ் கொண்டு வந்ததால் மாவட்டக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்வதில் சிரமத்தை எதிர்க்கொண்டனர். மேலும் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் மிகவும் தாமதமாகவே கிடைத்தன. மாணவர்க ளுக்கு வழங்கவேண்டிய அரசு நலத்திட்டங்களில் மிகுந்த தொய்வும் ஏற் பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத் தில் 200 க்கும் மேற்பட்ட உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின் றன. சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரி யர்கள் பணியாற்றி வருகி றார்கள்.
அனைத்து பள்ளிக ளையும் ஆய்வு செய்ய ராமநாதபுரத்தை மையமாக வைத்து அரசாணை 151 ன்படி ஓரே ஒரு மாவட்டக் கல்வி அலுவலகம் மட்டுமே ஏற்படுத்தப் பட்டுள்ளதால் நிர்வாகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கூடுதல் மாவட்ட கல்வி அலுவலகம்
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு இருந்தது போல் இடை நிலைக்கல்விக்கு பரமக்கு டியை மையமாக வைத்து கூடுதல் மாவட்ட க்கல்வி அலுவலகத்தை ஏற்படுத்தி வருகிற கல்வி ஆண்டு முதல் செயல்பட ஏதுவாக கூடுதல் மாவட்ட கல்வி அலுவ லகத்தை உருவாக்கித் தருமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
- 70-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்து வைத்துள்ளது.
- போதிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால் அவைகள் சேதம் அடைந்து வருகின்றன.
ராமேசுவரம்:
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாக் ஜலசந்தி, கச்சத்தீவு ஆகிய கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளுடன் சிறை பிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இவ்வாறு எல்லை தாண்டி வந்ததாக இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் 70-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்து வைத்துள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ள படகுகள் போதிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால் அவைகள் சேதம் அடைந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை பஸ் நிலையம் முன்பு மீனவர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க செயலாளர் ஜேசு ராஜா, மீனவர் சங்கத் தலைவர்கள் தேவதாஸ், எமரிட், சகாயராஜ் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடனே விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே அச்சமின்றி மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணமான ரூ. 6 ஆயிரம் உதவித் தொகையை அரசு உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரம் உள்ள கிடங்கை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பாதுகாப்பு அறையிலும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு வளாகத்தில் உள்ள ராமநாதபுரம், முது குளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி) ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள அறையினை கலெக்டர், அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டனர்.
மேலும் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனை கூடம் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறை யிலும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இதில் வட்டாட்சியர் (தேர்தல்) ரவி, ராமநாதபுரம் வட்டாட்சியர் சுரேஷ் குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ராமநாதபுரத்தில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் பாரதிநகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தான தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.நகர செயலாளர் பாலா வரவேற்றார்
கடந்த வாரம் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்று சிறை சென்றவர் களை விடுவிக்க உறுதுணை யாக இருந்த மாநில பொருளாளர் திலகபாமா, மாநில செய்தி தொடர்பாளர் வினோபா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சிக்கலை தலைமை இடமாக வைத்து புதிய ஒன்றியத்தை உரு வாக்க கோரி சட்டமன்றத்தில் குரல் எழுப்பி கோரிக்கை வைத்த சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அருளுக்கு இக்கூட் டத்தில் நன்றி தெரி விக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் நன்றி தெரிவித்தார்.மாவட்ட துணைத் தலைவர் முகமது அலி,ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், கடலாடி ஒன்றிய செயலா ளர் இருளாண்டி, கீழக்கரை நகரச் செயலாளர் லோக நாதன், கடலாடி ஒன்றிய துணைச் செயலாளர் முனிய சாமி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் சரீப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா ளர் இப்ராஹிம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இமானுவேல், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக், ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இரு மடங்கு பணம் தருவதாக ரூ.3 கோடி மோசடி தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
- தொடர்ந்து அவர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டினம் பகுதி பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
பெரியபட்டினத்தை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் சாகுல்ஹமீது என்பவர் நிலங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் எங்களிடம் குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் 2 மடங்கு லாபம் தருவதாக கூறினார். இதை நம்பி நாங்கள் பணம் செலுத்தினோம்.
ஆனால் அவர் பணம் தராமல் ஏமாற்றி விட்டார். சாகுல்ஹமீது பொதுமக்க ளிடம் ரூ.3கோடி வரை மோசடி செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கு உள்ளது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடர்ந்து அவர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
பசும்பொன்
கமுதி அருகே பெருநாழியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பான வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நேதாஜி பஜாரில் தொடங்கிய பிரசாரத்தை காடமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவரும், தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளருமான பெருநாழி போஸ் தொடங்கி வைத்தார்.
ஊராட்சி மன்றத்தலைவர் ஆத்திமுத்து, இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப் பாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியை மாரஎலிசெபத் மகாராணி, ஆசிரியர் பயிற்றுநர் கந்தசாமி மற்றும் ஆசிரியர்கள்கருணாகரன்,கணேசமூர்த்தி,இல்லம் தேடிக் கல்வி தன்னார் வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் படிப்பதால் கிடைக்கும் இலவச திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்து பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இது குறித்த துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.
- பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறி பல தனியார் நிறுவனங்களிடம் பணமும் வசூல் செய்துள்ளார்.
- அவர் கொண்டு வந்த கோப்பை மேற்கு வங்காளத்தில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியதும் உளவுத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழ செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு. மாற்றுத்திறனாளி வாலிபரான இவர் இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறி வலம் வந்திருக்கிறார்.
மேலும் அவர் கடந்த மாதம் லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த தாகவும், அதில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 20 நாடுகள் விளையாடியதாகவும், தனது தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்றதாகவும் கூறியிருக்கிறார்.
அதனை கூறி அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து வாழ்த்து பெற்ற வினோத்பாபு, அவர் மூலமாக முதல்-அமைச்சரையும் சந்தித்தார். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சருடன் வினோத் பாபு கோப்பையுடன் உள்ள படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில் வினேத் பாபு இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் இல்லை என்பதும், அவர் உலகக் கோப்பையை வென்றதாக கூறியது பொய் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து உளவுத்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
முதல்-அமைச்சரை வினோத்பாபு சந்தித்து விட்டு சென்ற மறுநாள் சர்வதேச கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் உளவுத்துறையினர் விசாரித்தனர். இதில் வினோத் பாபு கூறியது போல் பாகிஸ்தானில் எந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் ஜான்பூரில் நடந்த உள்ளூர் கிளப்பில் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வினோத்பாபு, இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவது போல் வீடியோ எடுத்து பாகிஸ்தானில் விளையாடியதாக நம்ப வைத்துள்ளார்.
மேலும் அவர் கொண்டு வந்த கோப்பை மேற்கு வங்காளத்தில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியதும் உளவுத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.மேலும் அவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறி பல தனியார் நிறுவனங்களிடம் பணமும் வசூல் செய்துள்ளார்.
இந்த நிலையில் சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட வினோத்பாபுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.பி.ஜெ.மிசைல் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் உறுப்பினர்கள் ராமநாதபுர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர்.
அதன்பேரில் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதில் பேக்கரி உரிமையாளர் உள்பட பலரிடம் வினோத் பாபு பணமோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.18.89 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மாணவ, மாணவிகளை புத்தகம் வாசிக்க சொல்லி அவர்களுடன் கலந்துரையாடினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் ஊராட்சி அனுசியாபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.11.92 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணிகள், எட்டிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பாடுகளை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் மாணவ, மாணவிகளை புத்தகம் வாசிக்க சொல்லி அவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.76 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணி, தென்னவனூர்-வீரவனூர் இணைப்பு சாலையில் ரூ.11.56 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி, சத்திரக்குடி கிராமத்தில் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, தீயனூர் சமத்துவ புரத்தில் ரூ.45.74 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளில் பழுது நீக்கம் செய்யும் பணி, போகலூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு சுகாதாரத் தலைப்பு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு வந்த கர்ப்பிணிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் தொடர்பாகவும், பரிசோதனை முறைகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் சிவசாமி, பரமக்குடி, வட்டாட்சியர் ரவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு கரிமூட்டதொழில் பலன் தருகிறது.
- இந்த தொழிலில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் ஒரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் விறகுகட்டை மற்றும் கரிமூட்ட தொழில் நடக்கிறது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
கமுதி மற்றும் அபிராமத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் குளங்கள், கண்மாய்கள், ஊரணிகள் வரத்துக் கால்வாய்கள், தனிநபர் பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி எடுத்து அந்த கட்டைகளை திருப்பூர் போன்ற சாயபட்டறைக்கு அனுப்புகின்றனர். மேலும் இந்த கட்டைகளை பயன்படுத்தி கரிமூட்ட தொழிலும் செய்து வருகின்றனர்.
சீமை கருவேல மரங்களை வெட்டி எடுத்து பெரிய கட்டை விறகுகளை திருப்பூர், கோவை, பல்லடம் போன்ற சாயப்பட்டறை களுக்கு லாரிகள் மூலம் ஏற்றி விற்பனை செய்யப் படுகிறது. எஞ்சிய சிறிய குச்சிகளை வெட்டி அடுக்கி அவற்றை கரிமூட்டம் போட்டுவுடன் வெளி மாநிலங்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து அபி ராமத்தை சேர்ந்த விறகு வெட்டுபவர் கூறுகையில், தற்போது கோடைகாலம் என்பதால் மாற்று தொழிலாக விறகுவெட்டும் தொழிலும், கரிமூட்டம் தொழிலும் செய்து வருகிறோம். கோடை காலத்தில் மிளகாய், பருத்தி போன்ற பயிர்களை விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாததால் விறகு வெட்டும் தொழிலை செய்து வருகிறோம்.
இந்த தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் ஒரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.






