என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மரங்களில் பலாப்பழங்கள் அதிக அளவு காய்த்துள்ளன,
    • இயற்கை முறையில் பழங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த முள்ளூர், மாமரம், குஞ்சப்பனை பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் மரங்களில் பலாப்பழங்கள் அதிக அளவு காய்த்துள்ளன, மரங்களிலேயே காய்கள் பழுத்து தொங்குவதால் அந்த பகுதி முழுவதும் பலாப்பழ வாசனை வீசி வருகிறது.

    இந்த பழங்களை சுற்றுலா பயணிகளும் வாங்கி செல்கின்றனர். குஞ்சப்பனையில் உள்ள பலாப்பழ வியாபாரிகள் தங்களின் தோட்டங்களில் இருந்து பழங்களை பறித்து வந்து விற்பணை செய்து வருகின்றனர். இயற்கை முறையில் பழங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் விருப்பமுடன் வாங்கி செல்கின்றனர். ஒரு முழு பலாபழம் 100 ரூபாய்க்கும் மேல் விற்பனை ஆகிறது.

    • கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • சாலையில் விழுந்த மூங்கில் தூா்களை அகற்றினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை கொட்டியது. இதில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்குச் செல்லும் மலைப் பாதையில் நெலாக்கோட்டை கூவச்சோலை பகுதியில் கனமழையால் சாலையின் குறுக்கே மூங்கில் தூா் பெயா்ந்து விழுந்தது. இதனால் அவ்வழியிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    தகவலறிந்த கூடலூா் தீயணைப்புத் துறையினா் மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று நெடுஞ்சாலைத் துறையின் பொக்லைன் உதவியுடன் சாலையில் விழுந்துகிடந்த மூங்கில் தூா்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.

    இதனால், அந்த சாலையில் சுமாா் இரண்டரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. நீலகிரி மாவ ட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 144 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கூடலூர் - 76, சேரங்கோடு 63, நடுவட்டம் 60, பந்தலூர் 59, ஓவேலி 48, செருமுள்ளி 48, அப்பர் பவானி 48, பாடந்தொரை 42, தேவாலா 42, கிளன்மார்கன் 31, ஊட்டி - 8.4, பாலகொலா 6, கோடநாடு 4, மசினகுடி 4, கேத்தி 4, கல்லட்டி 2.4, குன்னூர் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்ததால் மரங்கள் கீழே விழுந்தன.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த ஒன்னட்டி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரி ஒன்னட்டியை அடுத்த எஸ்.கைகாட்டி 2-வது வளைவில் திரும்ப முயன்ற போது அதிக பாரத்தின் காரணமாக லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்தன. இதனால் லாரியில் இருந்த மரங்கள் அனைத்தும் சாலையில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • விவசாயிகள் அனைவரும் வங்கி கடன் பெற்று பயன்பெற வேண்டும்
    • கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் அடையாள அட்டை பெற்று பயன் பெற வேண்டும்,

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளுக்கான கடன் அட்டை முகாம் நடந்தது. முகாமில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். இம் முகாமினை முழுமையாக பயன்படுத்தி தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் வங்கி கடன் பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா கோத்தகிரி தோட்டக்கலை துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் ஆவின் மருத்துவர் மற்றும் கால்நடை மருத்துவர் கோத்தகிரி சார்ந்தோர் கலந்து கொண்டனர். தங்கள் துறையில் கிசான் கடன் அட்டை மூலம் கால்நடைகளுக்கான கடன் பெறுவது பற்றி எடுத்துரைத்தனர். இம்முகாமில் கோத்தகிரி வட்டாரத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 175 விவசாயிகள் கடன் அட்டை பேருக்காக பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். மேலும் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் அடையாள அட்டை பெற்று பயன் பெற வேண்டும், அதற்கான விண்ணப்பங்களை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

    ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

    அரவேணு,

    ஆதி தமிழர் கட்சி சார்பில், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்பு ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஐக்கையன் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் இதில்100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிப்பகுதியில் தூய்மை பணியாளர்களும் பங்கு பெற்றனர்

    இதில் ஆதி தமிழர் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி மாவட்ட செயலாளராக ரைஸ் முகமது, கோத்தகிரி கிளை தலைவராக கார்த்திக், துணை மாவட்ட செயலாளராக நந்தகுமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளராக சத்தியமூர்த்தி, கிருஷ்ணா புதூர் கிளை செயலாளராக ஆறுமுகம்,எச்எப்சி நகர் கிளை செயலாளராக மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • யானை, காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.
    • தீப்பந்தங்களை காட்டி கிராம மக்கள் கரடியை வனத்திற்குள் விரட்டினர்

    அரவேணு

    கோத்தகிரி பகுதியில் தற்போது வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.குறிப்பாக கரடிகள், சிறுத்தை, யானை, காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.

    நேற்று விவசாயி ஒருவரை கரடி தாக்கி படுகாயப்படுத்தியது. கோத்தகிரி அருகே உள்ள அரக்கோடு மல்லி க்கொப்பை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 34). விவசாயி. இவர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர்மறைவில் மறைந்திருந்த ஒரு கரடி, பிரபு மீது ஆக்ரோஷமாக பாய்ந்தது. பிரபுவை கரடி கடித்து குதறியது.

    இதில் பிரபு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்க த்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் கரடி அங்கிருந்து ஓடியது. பிரபுவை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரபுவை தாக்கிய கரடி அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது.பொதுமக்கள் தீப்பந்த ங்களை காட்டி விரட்டினர் இதையடுத்து கரடி அங்கிருந்து ஓடி மறைந்தது. கிராமத்துக்குள் திரியும் அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து காட்டு ப்பகுதியில் விட வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். காயம் அடைந்த விவசாயி பிரபுவுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ௩ குழந்தைகள் உ ள்ளனர்.

    • மரத்தில் துரியன் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகின்றன.
    • தம்பதிகள் துரியன் பழத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    குன்னூர்:

    மலை பிரதேசமான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது.

    இங்கு பல்வேறு அரியவகை பழ மரங்கள் உள்ளது. இவை சீசனுக்கு உகந்தவாறு விற்பனைக்கு வருகிறது. இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது துரியன் பழம்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த துரியன் பழ மரங்கள் அதிகளவில் உள்ளன.

    இங்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் துரியன் பழ சீசன் தொடங்கியது. அதன் பின்னர் 3 ஆண்டுகளாக துரியன் பழ சீசன் தாமதமாகி வந்தது.

    இந்த நிலையில் தற்போது கல்லாறு பழப்பண்ணையில் துரியன் பழ சீசன் தொடங்கி உள்ளது. அங்குள்ள மரத்தில் துரியன் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகின்றன.

    குற்றலாம் மற்றும் கல்லாறு பண்ணையில் விளைந்த துரியன் பழங்கள் தற்போது பர்லியார், வடுக தோட்டம் உள்பட குன்னூரில் உள்ள பழ கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

    வெளி மார்க்கெட்டில் கிலோ 55 ரூபாய் முதல் 600 ரூபாய் வரைக்கு விற்கப்படுகிறது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-

    குழந்தை இல்லாத தம்பதிகள் துரியன் பழத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    இந்த பழத்தின் தாயகம் தென்கிழக்கு ஆசியா ஆகும். மேலும் சீசன் காலமாக ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை மாதங்கள் உள்ளன.

    இந்த பழகம் 1 கிலோ முதல் 3 கிலோ எடை வரை இருக்கும். பார்ப்பதற்கு பலாப்பழம் தோற்றத்தில் இருப்பதுடன், உண்டால் வெண்ணை போன்ற சுவை கொண்டதாகும்.

    இந்த பண்ணையில் 50 துரியன் மரங்கள் உள்ளன. இங்குள்ள மரங்களில் தற்போது துரியன் காய்த்து பழுத்து தொங்குகின்றன. இவை தானாகவே கீழே விழுந்து விடும். அவற்றை சேகரித்து விற்பனை செய்கிறோம். கிலோ ரூ.520 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    துரியன் பழ சீசன் தொடங்கியதை அடுத்து நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் கல்லார் பழப்பண்ணையை பார்வையிட்டு விட்டு, அங்கு விளையக்கூடிய துரியன் பழங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டினர்.

    குன்னூர்,

    குன்னூர் அருகே உள்ள கட்டபெட்டு சரகம் கூக்கல்தொரை அருகே உள்ள கம்பட்டிகம்பை சாலையோரத்தில் தனியார் பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கட்டபெட்டு சரக வனச்சரகர் செல்வக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தன மரத்தினை வெட்டிக் கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் குஞ்சப்பனை, கூக்கல் தொரை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பால்ராஜ், சவந்திரபாண்டியன், செல்வன், சிவக்குமார்மற்றும் ஜாகீர்உசேன் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு 2.20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    • கூடலுார் தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • அவசர காலத்தில், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அவ்வப்போது சாலைகளில் மரங்கள்; மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி-பர்சன்ஸ்வேலி சாலை, தீட்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை மரம் விழுந்தது. கூடலுார் தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து தமிழக-கேரளா-கர்நாடக இடையே இயக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தீயணைப்பு துறையினர் வந்து, மரங்களை அறுத்து அகற்றிய பின், ஒரு மணி நேரத்துக்கு பின்பு போக்குவரத்து சீரானது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் தொடரும் மழையால் கடும் மேக மூட்டம் நிலவுவதால், வாகனங்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.

    மேலும், கூடலுாரில் உற்பத்தியாகும் பாண்டியார்-புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றோர பகுதிகளுக்கு குளிக்கவும், துணி துவைக்கவும் மக்கள் செல்ல கூடாது; சிறுவர்களை ஆற்றோரத்துக்கு பெற்றோர் அனுப்ப கூடாது என வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஊட்டி பூங்கா, படகு இல்லம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கடும் குளிர் நிலவுவதால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளூர் மக்கள் அவதிப்படுகின்றனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, தேவாலாவில் 55 மி.மீ. கூடலுாரில் 44 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா கூறுகையில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாண்டியார்-புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றில் குளிக்கவும், கடக்கவும் யாரும் செல்ல கூடாது. அவசர காலத்தில், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.

    • கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கூடலூா் - கோழிக்கோடு சாலை பொன்வயல் பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

    தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினா். இதனால், கூடலூரிலிருந்து கேரள மாநிலம் செல்லும் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதேபோல செம்பாலா பகுதியிலும் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீராக்கினா். 

    மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஊட்டி,

    மணிப்பூா் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை தடுத்து நிறுத்தவும், இந்த விஷயத்தில் அமைதி காக்கும் பிரதமரைக் கண்டித்தும் ஊட்டியில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஊட்டி ஏடிசி திடல் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.

    இந்த ஆா்ப்பாட்டத்தில், தமுமுக மாவட்டத் தலைவா் அப்துல் சமத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் சகாதேவன் உள்பட பலா் கலந்து கொண்டனா். அவர்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    • மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை சட்டம் பற்றி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
    • பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் என்.பி.ஏ பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் அல்ப்பிரேட் எபினேசர் தொடங்கி வைத்தார்.

    இதில் கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வனிதா தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை சட்டம் பற்றியும், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் பற்றியான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

    அதோடு கோத்தகிரி வக்கீல் சங்கர் சட்டம் பற்றிய விழிப்புணர்வு மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார். பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், பாலியல் சட்ட மற்றும் குற்றப்பிரிவுகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.  

    ×