என் மலர்
நீலகிரி
- அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன.
- கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, மூலைக்கடை, பாதிரிமூலா, செம்பக்கொல்லி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, கருத்தாடு, எடத்தால் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
சில நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருக்கும் தேயிலை தொழிலாளர்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகிறார்.அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே காட்டுயானைகள் கடந்த சில தினங்களாக முகாமிட்டு உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஒரு காட்டு யானை அய்யன்கொல்லி அரசு உண்டு உறைவிடப்பள்ளி இரும்பு கேட் வாயிலை உடைத்து, பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்கு உள்ள பலாமரத்தில் இருந்த பலா பழங்களை தும்பிக்கையால் பிடுங்கி ருசித்து தின்றது.
அதன்பிறகு அந்த யானை கொளப்பள்ளி அரசுதேயிலை தோட்டம், செம்பக்கொல்லி பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளார்கள். இதேபோல் சேரங்கோடு எலியாஸ் கடை பகுதியில் காட்டு யானை சாலையோரம் நடமாட்டம் உள்ளது. அவை அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகிறது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் பற்றி அறிந்ததும் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் தலைமையில் வனத்துறை ஊழியர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் சம்பவ இடத்தில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அங்கு கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
- 143 அயல்நாட்டு நிறுவனங்கள், தற்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்து உள்ளன.
- இதுவரை 1.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனா்.
ஊட்டி,
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞா் திறன் திருவிழா நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தாா். வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கருணாகரன் வரவேற்றாா். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் வீரராகவராவ் திட்டம் குறித்து விளக்கினாா்.
நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமசந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. எனவே அங்கு மாணவா்கள் சோ்க்கை 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.
உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால் உயா்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலீடு செய்ய வலியுறுத்தினார்.
இதன் காரணமாக 143 அயல்நாட்டு நிறுவனங்கள், தற்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்து உள்ளன. இதன் மூலம் 4.10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
குன்னூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ உலக அளவில் தரம் உயா்த்தப்பட்டு உள்ளது. இங்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை மாணவா்கள் பயிலும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பல்வேறு புதிய கருவிகளும் கொண்டு வரப்பட்டு உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசும்போது, முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 100 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்படி 2-வது மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு உள்ளன. இதன்மூலம் எண்ணற்ற இளைஞா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே நடத்தப்பட்ட பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம், இதுவரை 1.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனா் என்றார்.
இதில் ஊட்டி எம்.எல்.ஏ கணேசன், குன்னூர் நகராட்சி துணைத் தலைவா் பி.எம்.வாஷிம் ராஜா, குன்னூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுனிதா, ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், திட்டக்குழு உறுப்பினா்கள் ஜாா்ஜ், நகரமன்ற உறுப்பினா் ராமசாமி, பொதுகுழு உறுப்பினர்கள் காளிதாஸ்.செல்வம், நகர துணை செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- நீர்நிலை கால்வாய்களையும் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
அரவேணு,
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே அங்கு உள்ள அனைத்து நீர்நிலை கால்வாய்களையும் சுத்தப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
கோத்தகிரி சிறப்பு பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் ஊழியர்கள் குமரன் காலனி, கன்னியாதேவி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்து வருகின்றனர்.
- மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் சில இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்தது.
- கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு தாமதமாகவே தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.
ஊட்டி, கூடலூர், அவலாஞ்சி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் சில இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்தது. இதனால் மின்சார வினியோகத்திலும் தடை ஏற்பட்டது.
குன்னூர் கண்டோன்மென்ட் வாரியத்திற்குட்பட்ட பாய்ஸ் கம்பெனி லோயர் குரூஸ்பெட் என்ற இடத்தில் மழையால் ஆபி என்பவரின் வீட்டு தடுப்பு சுவர் இடிந்து, கீழே உள்ள ஜான்சன் என்பவரின் வீட்டில் மேல் விழுந்ததில் மேற்கூரை சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஊட்டியில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. ஊட்டி படகு இல்லத்தில் மிதிபடகு, துடுப்பு படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
ஊட்டியில் இருந்து கிளைன்மார்கன் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.
இதேபோல் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது.
கூடலூர்-ஊட்டி சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் அருகே பெரிய கற்களுடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டது.
மேலும் மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மண் குவியல்களை அகற்றினர்.
1 அரைமணி நேரத்திற்கு பிறகு மண் குவியல்கள், கற்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட காப்பூர் மூலாவில் இருந்து கங்கமூலா செல்லும் சாலையில் மச்சிகரை என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ராஜன் என்பவரது வீடு இடிந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 7 வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளன.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் மின்கம்பமும் சரிந்து விழும் நிலயில் காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய துறையினர் அப்பகுதியில் மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியது.
மழையுடன் கடும் மேக மூட்டமும் காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி சாலை, ஊட்டி-கூடலூர் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் அனைவருமே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 171 அடி கொண்ட அவலாஞ்சி அணைக்கு வினாடிக்கு சராசரியாக, 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
மேலும், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட அப்பர்பவானி, எமரால்டு, கெத்தை உள்ளிட்ட அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மழை தொடரும் பட்சத்தில் இருவாரங்களில், மாவட்டத்தில் உள்ள, 13 அணைகளில் மின் உற்பத்திக்கு தேவையான அளவுக்கு நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
- மாநில திமுக மகளிர் அணி இணை செயலாளர் குமரி ஜெயகுமார் தலைமை தாங்கினார்.
- மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஊட்டி,
மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. அறிவித்து இருந்தார். அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. சுதந்திர திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாநில திமுக மகளிர் அணி இணை செயலாளர் குமரி ஜெயகுமார் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயகுமாரி வரவேற்றார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, காசி லிங்கம் ,திராவிடமணி, ராஜூ, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, செல்வம்,
மோகன்குமார் மாவட்ட பொறுப்பாள்கள் எல்கில் ரவி, ராஜா, ஆல்வின், நகராட்சி தலை வர்கள் வாணீஸ்வரி,பரிமளா, ஊராட்சி ஒன்றிய தலை வர்கள் சுனிதா, கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் ஜெயகுமாரி, கவுரி, சித்ராதேவி, வள்ளி, சத்திய வாணி, ராதா, பங்கஜம், முன்னாள் மாவட்ட ஊரா ட்சி தலைவர் கோமதி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் வெண்ணிலா, மைமூனா, காவேரி, செல்லம், லலிதா, கீதா, யசோதா, ஜெயந்தி, அன்ன புவனேஸ்வரி, சரோஜா, விசா லாட்சி, உட்பட கழக மகளிர் அணி நிர்வாகிகள், தோடர் பழங்குடியின சமுதாய தலைவர் சத்தி யராஜ், கோத்தர் பழங்குடி சமுதாய நிர்வாகி சகுந்தலா உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். மாவ ட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கண்ணம்மா நன்றி கூறினார்.
- கேர்பட்டா பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கு சரியான மைதான வசதி இல்லை
- பள்ளி முன்பு கிடக்கும் கம்பி கற்களை அகற்றவேண்டும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி செல்லும் சாலையில் கேர்பட்டா அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு உள்ள கட்டிட வகுப்பறைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே அவை முற்றிலுமாக இடித்து தள்ளப்பட்டன.
ஆனாலும் அவை அப்புறப்படுத்தப்படவில்லை. இன்னொருபுறம் கேர்பட்டா பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கு சரியான மைதான வசதி இல்லை. எனவே குழந்தைகள் நுழைவாயில் அருகே விளையாடுகின்றனர்.
அங்கு உள்ள பகுதியில் கம்பி-கற்கள் நீட்டிக்கொண்டு உள்ளன. அதில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பள்ளியின் கணினி அறையும் இடிக்கப்பட்டு விட்டது. எனவே குழந்தைகளுக்கு சரியான கணினி பாடங்கள் எடுக்க முடியவில்லை என ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
எனவே பள்ளி முன்பு கிடக்கும் கம்பி கற்களை அகற்றவேண்டும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஏற்கனவே குடிநீர் தொட்டி உள்ள இடத்தில் புதிதாக தொட்டி கட்ட வனத்துறை ஏன் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
- பொதுமக்கள் நேற்று மாலை ஊட்டிக்கு வந்து மாவட்ட கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு போதிய குடிநீர் வசதி இல்லை. எனவே கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பழுதடைந்த சிறிய அளவிலான குடிநீர் தொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு அங்கு புதிய நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது.
இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் பணிகள் மேற்கொள்ள உரிய அனுமதி பெற வேண்டும் என்று கூறி அதிகாரிகள் கட்டுமான பணிக்கு தடை விதித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வாழைத்தோப்பு பகுதியில் வசிக்கும் பெண்கள் நேற்று மதியம் ஊட்டி நெடுஞ்சா லையில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்ப ட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி செல்வராஜ் மற்றும் கூடலூர் ஊரா ட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ஏற்கனவே குடிநீர் தொட்டி உள்ள இடத்தில் புதிதாக தொட்டி கட்ட வனத்துறை ஏன் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது மாவட்ட கலெக்டர் மூலம் உரிய அனுமதி பெற்று குடிநீர் தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க ப்படும் என கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகா ரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சாலைமறியல் கைவிடப்ப ட்டது.
இதற்கிடையே கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைலர் கீர்த்தனா, மசினகுடி ஊராட்சி தலைவர் தேவிமோகன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் உத்தமன் தலை மையில வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை ஊட்டிக்கு வந்து மாவட்ட கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து உள்ளனர்.
- காலை 30 விண்ணப்பங்களும், மாலையில் 30 விண்ணப்பங்களும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இம்முகாம்களில் ஏ, பி, சி. என மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், ஒய்.எம்.சி.ஏ, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாமினை, கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாம் 204 இடங்களில் இன்று முதல் தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் எந்தவித சிரமுமின்றி வந்து விண்ணப்பம் பதிவு செய்யும் வகையில், காலை 30 விண்ணப்பங்களும், மாலையில் 30 விண்ணப்பங்களும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான பணிகளை கண்காணிக்க முகாம் பொறுப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட நிலையான அலுவலர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இம்முகாம்களில் ஏ, பி, சி. என மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் குறிப்பிட்ட இடம், நாள் மற்றும் நேரத்தில் முகாம்களுக்கு வருகை தந்து விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைவரின் விண்ணப்பங்களும் பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ஊட்டி வட்டாட்சியர் சரவணக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
- தொடர் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 2 பேரையும் உயிருடன் மீட்டனர்.
ஊட்டி:
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்தாலும் கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யாமல் இருந்தது.
இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் ஊட்டி, கூடலூர், அவலாஞ்சி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அவலாஞ்சியில் விடிய விடிய கனமழை கொட்டியது. அதிகபட்சமாக அங்கு 38 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தொடர் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓவேலி சாலையில் சோதனைச்சாவடியை அடுத்துள்ள கெவிப்பாறை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் நள்ளிரவு விழுந்தது. தகவல் அறிந்த கூடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், மின்வாரிய ஊழியா்கள் விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்து மரத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, காலையில் போக்குவரத்து சீரானது. மின்கம்பிகள் அறுந்ததால் கெவிப்பாறை, ஹெல்த்கேம்ப் ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கின.
இதேபோல ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி செல்லும் சாலையில் கவர்னர்சோலை பகுதியிலும் ஒரு மரம் நடுரோட்டில் முறிந்து விழுந்தது. இதனால் அங்கும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
கனமழை காரணமாக கூடலூா் எஸ்.எஸ். நகா் பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓவேலி பேரூராட்சி பெரியசூண்டியில் வேலு என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் விடுதி கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் (40) மற்றும் குப்புசாமி (30) ஆகியோர் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மண்சரிவு ஏற்பட்டு 2 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 2 பேரையும் உயிருடன் மீட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கவனமுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அப்பர் பவானி-105, தேவாலா-93, சேரன்கோடு-91, பந்தலூர்-70, ஓவேலி-68, நடுவட்டம்-42, ஊட்டி-18.5.
- சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
- ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்போம்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூக்கல்தொரை ஊராட்சியில் உள்ளது ஜீவா நகர். இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த பகுதியானது வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் இல்லாதால், வனவிலங்குகள் வருவது தெரியாது. இதனால் சில சமயங்களில் வனவிலங்குகள் தாக்கும் சம்பவமும் நிகழ்கிறது.
தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் ஊர் தலைவர் அய்யப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். ஆனால் மனு அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கேட்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும், இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
- நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
- ரூ.5 லட்சத்தில் மைதானம் சீரமைக்கும் பணி நடந்தது.
ஊட்டி,
ஊட்டி மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் உயர்மட்ட நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் பங்கேற்று நீர்தேக்க தொட்டி கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் அதேபகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையையும் திறந்து வைத்தார்.
இதேபோல் மசினகுடி அருகே இந்திரா காலனி பகுதியில் சமுதாய கூடத்தை சுற்றி ரூ.10 லட்சம் மதிப்பிலான சுவர் கட்டும் பணி, மாயார் பகுதியில் ரூ.5 லட்சத்தில் மைதானம் சீரமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
- குடியிருப்பில் சுற்றிய கரடி தடுப்பு சுவரில் ஏறி நடந்து சென்றது
- 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அரவேணு
கோத்தகிரி வனப் பகுதிகளில் கரடி, சிறு த்தை, மயில், மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் தற்போது உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கை யாகி விட்டது. குறிப்பாக கோத்தகிரி நகரின் மையப்பகுதிகளான பஸ்நிலையம், கடைவீதி, காம்பாய் கடை, மாதா கோவில் சாலை, கார்சிலி, கன்னிகா தேவி காலனி உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.தொடர்ந்து வனவில ங்குகுள் ஊருக்குள் வருவ தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே உள்ள புனித லூக்கா ஆலயம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அந்த பகுதியில் கரடி ஒன்று புகுந்தது. அந்த கரடி அந்த பகுதியிலேயே வெகுநேரமாக சுற்றி திரிந்து விட்டு, சர்வசாதாரணமாக அங்குள்ள சாலையில் நடந்து சென்றது.
கரடி ஊருக்குள் புகுந்ததை அறிந்த நாய்கள் குரைத்து கொண்டே இருந்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்தனர்.
அப்போது வெளியே கரடி நடமாடி கொண்டி ருந்தது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடு களுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டனர்.
சிறிது நேரம் அங்கு சுற்றி திரிந்த கரடி, குடியிருப்பையொட்டி இருந்த தடுப்புச் சுவர் மீது லாவகமாக ஏறி ஆலய வளாகத்திற்குள் புகுந்து மறைந்தது. கரடி சுற்றி திரிவதையும், தடுப்பு சுவரில் ஏறுவதையும் சிலர் வீடுகளுக்குள் இருந்தவாறே செல்போனில் வீடியோ எடுத்தனர்.
அதனை சமூக வலைத ளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதற்கிடையே குடியிரு ப்புக்குள் சுற்றும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






