search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women picket"

    • ஏற்கனவே குடிநீர் தொட்டி உள்ள இடத்தில் புதிதாக தொட்டி கட்ட வனத்துறை ஏன் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
    • பொதுமக்கள் நேற்று மாலை ஊட்டிக்கு வந்து மாவட்ட கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு போதிய குடிநீர் வசதி இல்லை. எனவே கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பழுதடைந்த சிறிய அளவிலான குடிநீர் தொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு அங்கு புதிய நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது.

    இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் பணிகள் மேற்கொள்ள உரிய அனுமதி பெற வேண்டும் என்று கூறி அதிகாரிகள் கட்டுமான பணிக்கு தடை விதித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வாழைத்தோப்பு பகுதியில் வசிக்கும் பெண்கள் நேற்று மதியம் ஊட்டி நெடுஞ்சா லையில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்ப ட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி செல்வராஜ் மற்றும் கூடலூர் ஊரா ட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது ஏற்கனவே குடிநீர் தொட்டி உள்ள இடத்தில் புதிதாக தொட்டி கட்ட வனத்துறை ஏன் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது மாவட்ட கலெக்டர் மூலம் உரிய அனுமதி பெற்று குடிநீர் தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க ப்படும் என கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகா ரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சாலைமறியல் கைவிடப்ப ட்டது.

    இதற்கிடையே கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைலர் கீர்த்தனா, மசினகுடி ஊராட்சி தலைவர் தேவிமோகன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் உத்தமன் தலை மையில வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை ஊட்டிக்கு வந்து மாவட்ட கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து உள்ளனர்.

    • நகராட்சிக் குட்பட்ட 23-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வருவதில்லை என கூறப்படுகிறது.
    • காட்டூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். நகர் மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நகராட்சிக் குட்பட்ட 23-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வார்டு உறுப்பினர் கவிதா புரு ஷோத்தமன் தலைமையில் காட்டூர் ெரயில்வே கேட் பகுதியில் காலி குடங்களுடன் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் காட்டூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×